இன்று (ஏப்ரல் 11) மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரண்டு நாள் பயணமாக தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள தமிழக பாஜக அலுவலகமான கமலாலயத்தில் அமித் ஷா தலைமையில் மாநில தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான விருப்ப மனு கூட்டம் இன்று நடைபெற்றிருந்து.
இதில் தமிழக பா.ஜ.க -வின் முக்கிய தலைவர்கள் அனைவரும் இணைந்து நயினார் நாகேந்திரனை தலைவராகப் பரிந்துரை செய்து விருப்ப மனு அளித்துள்ளனர். அதன்படி பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பாரக்கப்படுகிறது. அமித் ஷா தலைமையில் நாளை நடைபெறும் கூட்டத்தில் புதிய பாஜக மாநில தலைவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளது பாஜக.
அதிமுக கூட்டணி சர்ச்சைகள் தகிக்கும் இந்தச் சூழலில் அதிமுக எடப்பாடி பழனிசாமி அமித் ஷாவிற்கு வலது பக்கம் அமர, அண்ணாமலை இடதுபக்கம் அமர்ந்திருக்கிறார். இது அதிமுக – பாஜக கூட்டணியை உறுதிபடுத்த அவர்களுடன் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “அதிமுக – பாஜக கூட்டணி கூட்டணி அமைப்பது உறுதி. இதில் குழப்பம் ஏதுமில்லை. 2026 தேர்தலில் எங்களின் அதிமுக – பாஜக கூட்டணி ஆட்சிதான் இருக்கும். இபிஎஸ் தலைமையிலேயே எங்கள் கூட்டணி அமையும்.
யாருக்கு எத்தனை தொகுதி, வெற்றி பெற்றபின் ஆட்சி அமைப்பது எப்படி என்பதை நாங்கள் பின்னர் விவாதித்து கொள்வோம். இப்போதைக்கு வெற்றிதான் எங்கள் கூட்டணியின் இலக்கு. அதிமுகவின் உள்கட்சி பிரச்னைகளில் நாங்கள் தலையிட மாட்டோம். தேர்தல் விஷயங்களில் வெற்றிக்காக சேர்ந்து செயல்படவே இந்தக் கூட்டணி.

நீட் தேர்வு குறித்த விவகாரத்தில் அதிமுகவுடன் கலந்துபேசி முடிவெடுப்போம்.
தமிழ் மக்களை, தமிழகத்தை, தமிழ்மொழியை நாங்கள் கௌரவமாகக் கருதுகிறோம். நாடாளுமன்றத்தில் செங்கோலை நிறுவினோம், காசி தமிழ்ச் சங்கமம் நடத்தினோம். தமிழ் மொழியை வளர்க்க திருக்குறளை 63 மொழிகளில் மொழி பெயர்த்துள்ளோம்.
மின்சாரம், போக்குவரத்து, டாஸ்மாக் என திமுக ஆட்சியில் பல்வேறு துறைகளில் ஊழல் நடைபெறுதுகிறது. திமுக ஆட்சியில் இருக்கும் பிரச்னைகளிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவே நீட், மும்மொழி கொள்கை விவகாரம் குறித்து திமுக பேசி வருகிறது. தமிழ் தமிழ் எனக் கூறும் திமுக தமிழ் மொழிக்கும் , தமிழ் மக்களுக்கும் என்ன செய்திருக்கிறது என்பதைப் பட்டியலிட முடியுமா?
தமிழ் மக்கள், தமிழ்நாட்டின் நலன் மீதும் பாஜக அதிக கவனம் செலுத்தி வருகிறது. ஊழல் நிறைந்த இந்த திமுக ஆட்சியை 2026ல் ஒழிப்போம்” என்று பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
