10
August, 2026

A News 365Times Venture

10
Monday
August, 2026

A News 365Times Venture

Vijay: `இப்போ பெரியவங்களுக்குள்ள சண்டை; அவரை விடுங்க’ – விஜய் குறித்த கேள்வியை தவிர்த்த சீமான்

Date:

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தொடங்கியபோது, அவரை வரவேற்றுப் பேசியவர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். ஆனால், விழுப்புரத்தில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் மாநாடுக்குப் பிறகு, தன் ஆதரவு நிலைப்பாட்டிலிருந்து கீழ் இறங்கினார். அதற்குப் பிறகு நாம் தமிழர் கட்சிக் கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை குறித்து விமர்சித்துப் பேசிய சீமான், “இது தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கையல்ல. ஒன்று சாலையின் அந்தப் பக்கம் நிற்க வேண்டும் அல்லது இந்தப் பக்கம் நிற்க வேண்டும். நடுவில் நின்றால் லாரி அடித்து செத்துவிட வேண்டியதுதான். இது நடுநிலை அல்ல…கொடுநிலை.” என்றார் காட்டமாக.

சீமான்

இந்த நிலையில்தான் தற்போது பெரியார் குறித்தும், திராவிடக் கட்சி குறித்தும் தொடர்ந்து விமர்சித்து வரும் சீமான், நேற்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அவரிடம், `தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கட்சி தொடங்கும்போதே பெரியார் திடலுக்குச் சென்று, அவரின் கொள்கையை அரசியலாக ஏற்றுக்கொள்வதாக தெரிவித்திருந்தார். தற்போது அரசியலில் களத்துக்கும் வந்திருக்கிறார். இப்போது உங்கள் தம்பி குறித்து என்ன நினைக்கிறீர்கள்?’ எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சீமான், “அவரை விடுங்கள்… இப்போ பெரியவங்களுக்குள்ள சண்டை… அவரை இழுக்காதீங்க… அவரை அப்படியே விட்ருவோம்” என அந்தக் கேள்வியை புறக்கணித்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

மெக்கா ஒப்பந்தம்: பாகிஸ்தானுக்கு கை கொடுத்த சவூதி, துருக்கி; இந்தியாவுக்கு எப்படியான அலாரம்?

மெக்கா ஒப்பந்தம் - சவூதி அரேபியா, பாகிஸ்தான், துருக்கி ஆகிய நாடுகள்...

"தமிழ்நாட்டில் மட்டும் No Delimitation நாடகம் ஏன்?" – காங்கிரஸை சாடிய தயாநிதி மாறன்

தொகுதி மறுவரையறை மசோதா குறித்து விவாதிப்பதற்காக, முதல்வர் விஜய் தலைமையில் தமிழக...

'பிகில், கோட் பட தயாரிப்பாளருக்கு புதிய அரசு பதவி வழங்கிய முதல்வர் விஜய்!' – விவரம் என்ன?

முதல்வர் விஜய்யை வைத்து பிகில், கோட் போன்ற படங்களை தயாரித்த ஏ.ஜி.எஸ்...

வாழ்நாள் சேமிப்பு ரூ.60 லட்சம்; மொத்தமாக ராணுவத்துக்கு உயில் எழுதி நெகிழும் மதுரை முதியவர்!

மதுரை ஹார்விபட்டி பகுதியை சேர்ந்தவர், சுப்பையா. 82 வயதான இவர், மதுரா...