13
March, 2025

A News 365Times Venture

13
Thursday
March, 2025

A News 365Times Venture

“குவாரி கொள்ளை; ஜகபர் அலி படுகொலை… அரசு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்'' -பிரேமலதா விஜயகாந்த்

Date:

கனிமவள கொள்ளை, மணல் கொள்ளை…

கனிம வள கொள்ளை எதிர்த்து புகார் அளித்த திருமயத்தைச் சேர்ந்த ஜகபர் அலி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் தே.மு.தி.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர்,

“தமிழகம் முழுவதும் இன்றைக்கு கனிமவள கொள்ளை, மணல் கொள்ளை ஆகியவை தி.மு.க ஆட்சியில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. துலையானூர் குவாரியில் எவ்வளவு தூரம் கொள்ளை நடந்துள்ளது என்பது பற்றி அவர் வாக்குமூலமாக கொடுத்துள்ளார். எத்தனை லோடுகள் திருடப்பட்டு உள்ளது என்றும் புகார் கொடுத்துள்ளார். ஆனால், அவரது புகார் மனுவை விசாரிக்காத கலெக்டர், சப்-கலெக்டர், கோட்டாட்சியர், வட்டாட்சியர் முதல் இன்ஸ்பெக்டர் வரை அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். படுகொலை செய்யப்பட்ட சமூக ஆர்வலர் ஜகபர் அலி குடும்பத்திற்கு அரசு 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். தே.மு.தி.க சார்பில் கொலையான ஜகபர் அலி குடும்பத்திற்கு 50,000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது” என்றார்.

premalatha

வேங்கைவயல் விவகாரம்

அதன் பின்னர், செய்தியாளர்கள் சந்திப்பில் பிரேமலதா விஜயகாந்த், “ஆட்சி அதிகாரம் என்பது மக்களையும் காப்பாற்றுவதற்கு தான். ஆனால்,தற்போது தமிழகத்தில் தங்களையும், தங்களது குடும்பத்தார்களையும் காப்பாற்றுவது தான் முக்கியம் என்று செயல்பட்டு வருகின்றனர். வேங்கைவயல் விவகாரம் என்பது மிகவும் தலைகுனிவான விஷயம். இந்த சம்பவத்தில் தற்போது மூன்று குற்றவாளிகளை அடையாளம் கண்டு சி.பி.சி.ஐ.டி அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த விஷயத்தில் உண்மை குற்றவாளிகளை சி.பி.சி.ஐ.டி போலீஸார் கைது செய்ய வேண்டும் என்பதுதான் தே.மு.தி.க-வின் நிலைப்பாடு. தற்போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகள் என்றால், அவர்களுக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும்.

2026 சட்டமன்றத் தேர்தல்

தமிழக அரசின் செயல்பாடு குறித்து பொதுமக்கள் மிகவும் அதிருப்தியில் உள்ளனர். மிகப்பெரிய மாற்றத்தை வரும் 2026 -ம் வருட சட்டமன்றத் தேர்தல் கொடுக்கும். ஜனநாயகத்திற்கு முரண்பாடான ஆட்சி அகற்றப்படும்.

கோமியம் பிரச்னை

தற்போது கோமியம் பிரச்னை பெரிதாக பேசப்படுகிறது. என்னுடைய கருத்து எனறு பார்த்தால், ஒருவரது நம்பிக்கையை யாரும் கெடுக்க கூடாது. கோமியம் மருத்துவ குணம் உடையது என்று கூறுபவர்கள் குடித்துக் கொள்ளட்டும். அதை மறுப்பவர்கள் குடிக்காமல் இருக்கட்டும்” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

“ஷேக் ஹசீனா மீண்டும் பிரதமராவார்… இந்தியாவுக்கு நன்றி" – அவாமி லீக் கட்சித் தலைவர் கூறுவதென்ன?

கடந்த ஆண்டு வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக உருவான மாணவர்...

உ.பி: `வழிபாட்டு தலங்களில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்துவதற்கு எதிராக நடவடிக்கை'- முதல்வர் யோகி உத்தரவு

உத்தரப்பிரதேசத்தில் மகா கும்பமேளா முடிவடைந்ததையடுத்து, ஹோலி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகையின்போது...

புதுச்சேரி: `மாணவர்களுக்கு ரூ.1000, குடும்பத் தலைவிகளுக்கு ரூ.2500 உதவித்தொகை' – பட்ஜெட் ஹைலைட்ஸ்!

புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 10-ம் தேதி கவர்னர் உரையுடன்...

Mamata Banerjee: "போலி இந்துத்துவம்; இந்து கார்டை பயன்படுத்தாதீர்கள்"- பாஜக தலைவருக்கு மம்தா பதிலடி!

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜி, "பாரதிய ஜனதா கட்சி அரசியல் ஆதாயத்துக்காக மக்களின் மத...