29
June, 2026

A News 365Times Venture

29
Monday
June, 2026

A News 365Times Venture

Fair Delimitation: “இந்த 5 விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்'' – உதயநிதி ஸ்டாலின்

Date:

மத்திய அரசின் தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க தலைமையிலான தமிழ்நாடு அரசு ஒருங்கிணைக்கும் 7 மாநில பிரதிநிதிகள் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு சென்னை ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்று வருகிறது.

தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான், கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, பஞ்சாப் ஆகிய மாநில முதல்வர், ஒடிசா முன்னாள் முதல்வர்கள் உள்ளிட்ட 7 மாநிலங்களைச் சேர்ந்த 29 அரசியல் கட்சி தலைவர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு ‘நியாயமான தொகுதி மறுசீரமைப்புக்கான கூட்டு நடவடிக்கைக் குழு’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநில முதல்வர்கள், துணை முதல்வர்கள், முக்கியத் தலைவர்களின் பெயர் பலகையில் அந்ததந்த மாநில மொழிகளில் எழுத்தப்பட்டுள்ளது கவனம் பெற்றுள்ளது.

இதில் பேசியிருக்கும் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “மாநில உரிமைகளைக் காக்க தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஒருங்கிணைப்பில் நாம் அனைவரும் இங்கு கூடியிருக்கிறோம்.

தொகுதி மறுசீரமைப்புக்கான கூட்டு நடவடிக்கைக் குழு

இங்கு நான் முக்கியமான ஐந்து விஷயங்களைக் குறிப்பிட விரும்புகிறேன்.

1. ஒன்றிய அரசின் மக்கள் தொகை கட்டுப்பாட்டு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி இன்று தொகுதி குறையும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். மக்கள் தொகை வளர்ச்சியில் பின் தங்கி பிரச்னைகளுக்குள்ளாகியிருக்கிறோம்.

2. தொகுதி மறுசீரப்பைப்பின் வரலாறு

3. இன்றைய தொகுதி மறுசீரமைப்பின் நிலை.

4. தென் மாநிலங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள்

5. நாம் ஏன் இங்கு ஒன்று திரண்டிருக்கிறோம் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்

இந்த ஐந்து கேள்விகளுக்கான பதிலை புரிந்துகொண்டால், நாம் இந்த ஒன்றிய அரசின் தொகுதி மறுசீரமைப்பில் இருக்கும் பிரச்னைகளைத் தெரிந்து கொள்ளலாம்.

பல தசாப்தங்களாக, இங்குள்ள மாநிலங்கள் மக்கள்தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்தவும் நிர்வகிக்கவும் குறிப்பிடத்தக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனால், தமிழ்நாட்டில் நாங்கள் கொள்கைகளை அறிமுகப்படுத்தி, விழிப்புணர்வை ஏற்படுத்தினோம். அதன் மூலம் நிலையான மக்கள்தொகை வளர்ச்சியை அடைந்தோம்.

உதயநிதி ஸ்டாலின்

வேறு சில மாநிலங்கள் விரைவான மக்கள்தொகை வளர்ச்சியை தொடர்ந்து அனுபவித்தாலும், தமிழ்நாடு பொறுப்புடன் செயல்பட்டது. இதன் விளைவாக, பல மாநிலங்களை விட மிக முன்னதாகவே மக்கள்தொகை மாற்று விகிதத்தை அடைந்தோம். ஆனால் இந்த சாதனைக்கு வெகுமதி பெறுவதற்குப் பதிலாக, தற்போது அரசியல் பிரதிநிதித்துவத்தை இழக்கும் அபாயத்தில் உள்ளோம். தென் மாநிலங்களின் உரிமைகளை காக்க நாம் ஒன்று திரண்டு போராட வேண்டும்” என்று பேசியிருக்கிறார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`Extreme ஆன ஆள்பிடிக்கும் அரசியல் இது..!' – எம்.ஆர்.விஜயபாஸ்கர் ராஜினாமா குறித்து உதயநிதி விமர்சனம்

2026 சட்டமன்றத் தேர்தல் முடிந்த பிறகு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ச்சியாக...

சதுரகிரி: 12 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட ரோப் கார் சேவை திட்டம்! – நிறைவேற்றுமா புதிய அரசு?

தென் மாவட்டங்களில் பழனிக்கு அடுத்தபடியாக அமைந்துள்ள பிரசித்தி பெற்றது சதுரகிரி சுந்தர...

`அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி' – முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு போலீஸ் சம்மன்!

போக்குவரத்துத் துறையில் அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த புகார்...

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவருக்கு `மரண தண்டனை'- 60 நாள்களில் வழங்கப்பட்ட தீர்ப்பு

புனே அருகில் உள்ள நஸ்ராபூர் என்ற இடத்தில் கடந்த மாதம் ஒன்றாம்...