23
November, 2026

A News 365Times Venture

23
Monday
November, 2026

A News 365Times Venture

கள்ளக்குறிச்சி விவகாரம்: `எங்களிடம் புகார் வந்தது!' – தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம்

Date:

கள்ளக்குறிச்சி கலெக்டருக்கு அந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் வாட்ஸ்அப்பில் ஆபாச மெசேஜ் அனுப்பியதாகக் கூற‌ப்படும் விவகாரத்தில் நாளொரு தகவல் வெளியாகி வருவது குழப்பத்தை மேலும் அதிகரித்து வருகிறது.

உண்மையில் இந்த விஷயத்தில் நடந்தது என்ன? என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதெல்லாம் மர்மமாகவே போய்க் கொண்டிருக்கிறது.

முதலில் விவகாரம் குறித்து சமூக ஊடகங்களிலும் ஊடகங்களிலும் தான் தகவல்கள் வெளியாகின. அதிலும் கூட ‘சொல்லப்படுகிறது’, ‘தெரிய வருகிறது’ என்கிற டைப்பிலேயே செய்தி வந்தது.

சம்பந்தப்பட்ட ஆட்சியர் தலைமைச் செயலாளருக்கு, ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சங்கத்துக்கு இது குறித்துத் தெரிவித்துள்ளார் எனச் சொன்னார்கள்.

ஆட்சியரின் புகார்க் கடிதம் என எதுவும் பொது வெளியில் வெளியாகவில்லை.

இந்தப் பக்கம் புகார் கூறப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் ‘நான் எந்த சோதனைக்கும் தயார்’ எனப் பேசினார்.

மீடியாவில் செய்தி வெளியானது முதல் அரசியல் கட்சிகள் எம்.எல்.ஏ.வுக்குக் கண்டனங்களைத் தெரிவித்து வந்தன.

காவல்துறை தலைமை அலுவலகம்

ஆனால் தனிப்பட்ட முறையில் ஆட்சியர் தரப்பிலிருந்தோ அல்லது மாவட்ட நிர்வாகத்தின் தரப்பிலிருந்தோ இது தொடர்பாக எந்தவொரு விளக்கமும் வரவில்லை.

இந்த நிலையில்தான் இந்த விவகாரம் தொடர்பான முதல் அதிகாரபூர்வ நடவடிக்கையாக தேசிய மகளிர் ஆணையத்தின் சூமோடோ தலையீடு பார்க்கப்பட்டது.

இந்த விவகாரம் குறித்து விசாரித்து 7 நாட்களுக்குள் அறிக்கை தர டிஜிபியைக் கேட்டிருந்தது அந்த ஆணையம்.

இன்னொருபுறம் பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டம், வழக்கு என களமிறங்கின. பணியிலிருக்கும் பெண் நீதிபதி ஒருவரே பொது வெளியில் இந்த விவகாரம் குறித்துப் பேசினார்.

தொடர்ச்சியான முன்னெடுப்புகளில் ஒன்றாக வழக்கு ஒன்று வந்தது. அதன் பின்னர் தான் இந்த விவகாரத்தில் முதன்முதலாக திருவாய் மலர்ந்திருக்கிறது தமிழக அரசு.

‘சம்ப‌ந்தப்பட்ட ஆட்சியரிடம் இருந்து தலைமைச் செயலாளர் உள்ளிட்ட எவருக்கும் எந்தவொரு புகாரும் வரவில்லை’ என்பதுதான் தமிழக அரசு இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தில் சொல்லியிருக்கும் அதிகாரபூர்வ தகவல்.

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ விவகாரம் – முதல்வர் விஜய்!’

‘அப்படியொரு சம்பவம் நடக்கவே இல்லை’, ‘நடந்திருந்தா தண்டனை உண்டு’ என்கிற ரீதியில் அமைச்சர்கள் சிலர் பேசி வந்த நிலையில் தற்போது தமிழக அரசின் பதிலும் ஏறத்தாழ அதே ஸ்டைலில் உள்ளதுதான் இங்கு கவனிக்கத்தக்கது.

சரி, புகாரே வராத பட்சத்தில் மீடியாவில் ஒரு மாத காலமாக இந்த விவகாரம் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது அரசுத் தரப்பிலிருந்து இதைச் சொல்லியிருக்கலாமே என்பதுதான் சாதாரணமாக எல்லோரும் எழுப்பும் கேள்வி.

சரி மக்களுக்குச் சொல்ல வேண்டாம், பெண்கள் நலன், உரிமை, பாதுகாப்புக்காகவே நிறுவப்பட்ட மகளிர் ஆணையம் என்கிற அமைப்புக்குச் சொல்லியிருக்கலாமே? சொல்லப்போனால், இதுபோன்ற அமைப்புகளுக்குப் பதில் அளிக்க வேண்டியது கட்டாயமும் கடமையும் கூட.

இந்த இடத்தில்தான் இந்த விவகாரத்தில் அரசு எதையோ மறைக்கிறதோ என நினைக்கத் தோன்றுகிறது.

தேசிய மகளிர் ஆணையம் இனி என்ன செய்யப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தேசிய மகளிர் ஆணையம்

இந்த இடத்தில் இன்னொரு முக்கியமான விஷயத்தையும் நாம் கவனிக்க வேண்டும்.

தேசிய மகளிர் ஆணையமே தாமாக முன் வந்து இந்த விவகாரத்தில் தலையிட்ட நிலையில், தமிழ்நாட்டிலிருக்கும் ‘தமிழ்நாடு மகளிர் ஆணையம் என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதுதான் அது.

சம்பவம் தமிழ்நாட்டில் நடந்திருக்கிற சூழலில், தமிழ்நாடு மகளிர் ஆணையம் இந்த விவகாரம் குறித்து என்ன சொல்கிறது?

அதன் தலைவர் குமாரியிடம் பேசினோம்.

”கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பா தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்துக்கு மூணு புகார்கள் வந்தன. மாவட்ட எஸ்.பி. மற்றும் தமிழ்நாடு டிஜிபிக்கு அது குறித்து அறிக்கை கேட்டு உடனே அனுப்பிட்டோம். அறிக்கை வந்த பிறகு விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவங்க மீது சொல்லப்பட்ட புகார்னு ஆணையம் முடிவு செய்தா நடவடிக்கைக்கு பரிந்துரைப்போம்.

ஆனா புகார் தெரிவிச்சவங்க குறித்த அடையாளங்களை வெளிப்படுத்த முடியாது. அது புகார்தாரர் மற்றும் ஆணையத்தின் உரிமை” என்றவரிடம், ஸூ மோடோவாக ஏன் விவகாரத்தைக் கையிலெடுக்கவில்லை என்றால்,

‘தேசிய ஆணையம் தலையிட்ட பிறகு மாநில ஆணையம் அப்படி தலையிட முடியாது’ என்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ குறுஞ்செய்தி அனுப்பினாரா? இல்லையா?'- பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்

கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு ஆபாசமாக...

'காங்கிரஸ் MLAக்களுடன் மட்டும் 45 நிமிட ஆலோசனை!- விஜய்யின் எம்.எல்.ஏக்கள் மீட்டிங்கில் என்ன நடந்தது?

தவெக அரசு ஆதரவு தெரிவிக்கும் கட்சிகளின் எம்.எல்.ஏக்களை முதல்வர் விஜய் இன்று...

'திருப்பரங்குன்றத்தில் இருப்பது நில அளவைக்கல்தான்!' – தமிழக அரசு வெளியிட்ட ஆதாரம்!

கார்த்திகை தீப தினமான நாளை திருப்பரங்குன்றம் மலையிலுள்ள தூணில் தீபம் ஏற்றிக்...

'திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்!' – எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் விஜய் கொடுத்த வாக்குறுதி!

தவெகவின் ஆதரவுக் கட்சி எம்.எல்.ஏக்களை முதல்வர் விஜய் இன்று நேரில் சந்தித்து...