24
November, 2026

A News 365Times Venture

24
Tuesday
November, 2026

A News 365Times Venture

'ஆபத்தை சமாளிக்க…' – ஆதரவுக் கட்சி எம்.எல்.ஏக்களை சந்திக்கும் முதல்வர் விஜய்! – காரணம் என்ன?

Date:

தவெக ஆட்சிக்கு ஆதரவளிக்கும் கட்சிகளின் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை முதல்வர் விஜய் தன்னுடைய முகாம் அலுவலகத்தில் நடத்தவிருக்கிறார்? இந்த திடீர் கூட்டத்தின் பின்னணி என்ன?

TVK Vijay | த.வெ.க – முதல்வர் விஜய்

நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் தவெக 108 இடங்களில் மட்டுமே வென்றிருந்தது. பெரும்பான்மையை பெற காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்டுகள், ஐ.யூ.எம்.எல் போன்ற கட்சிகளின் ஆதரவைப் பெற்றே ஆட்சியமைத்தது.

தவெக ஆட்சியமைந்து 6 மாதங்கள் நிறைவடைந்திருக்கிறது. காங்கிரஸ், விசிக, ஐ.யூ.எம்.எல் கட்சியினர் தவெக அரசோடு இணக்கமாக இருந்தாலும், கம்யூனிஸ்ட்டுகள் அரசோடு முரண்பட்டுக் கொண்டே இருந்தனர். மேலும், இடைத்தேர்தலிலும் தனியாக வேட்பாளர்களை நிறுத்தியிருந்தனர். இந்நிலையில்தான், இன்று மதியம் 2 மணியளவில் க்ரீன்வேஸ் சாலையிலுள்ள தன்னுடைய முகாம் அலுவலகத்தில் ஆதரவுக் கட்சி எம்.எல்.ஏக்களை சந்தித்து முதல்வர் பேசவிருக்கிறார்.

TVK Vijay
TVK Vijay

இதுதொடர்பாக நம்மிடையே பேசிய தவெகவின் அமைச்சர்கள் சிலர், ‘ஆட்சி முடிந்து 6 மாதம் ஆகியிருக்கிறது. நாங்கள் ஆட்சியமைப்பதற்கே சிரமமான சூழல் நிலவியது. அப்போது இந்தக் கட்சிகள்தான் தக்க சமயத்தில் கைகொடுத்து பேருதவி புரிந்தன. அதற்காக முதல்வரே அவர்களின் கட்சி அலுவலகங்களுக்கு தேடிச் சென்று நன்றி கூறினார். ‘எல்லாரும் இணைந்து பயணிப்போம். உங்களின் ஆலோசனைகள் எங்களுக்கு எப்போதும் தேவை’ எனவும் கூறியிருந்தார்.

ஆனால், இந்த 6 மாதத்தில் பிரதமர் யார் என்ற விவகாரத்தில் காங்கிரஸூடனும் இன்னும் பல விஷயங்களில் கம்யூனிஸ்ட்டுகளுடனும் முரண்பாடு ஏற்பட்டது. இப்போது ஆட்சி 6 மாதங்களை கடந்திருக்கிறது. இந்த சமயத்தில் ஆதரவுக் கட்சி எம்.எல்.ஏக்களை அழைத்து நன்றி கூறி நட்புரீதியாக உரையாட திட்டமிட்டிருக்கிறார் முதல்வர். ‘மக்கள் நலன் சார்ந்த விஷயங்களுக்காக நீங்கள் எப்போது வேண்டுமானாலும் என்னை சந்திக்கலாம். தொடர்ந்து நாம் இணைந்தே பயணிப்போம்’ என நம்பிக்கையளிக்கும் வகையில் பேசவிருக்கிறார்’ என்றனர்.

பத்து நாளைக்கு முன்பாக முதல்வர் இதேமாதிரி தவெக எம்.எல்.ஏக்களை மட்டும் தனியாக அழைத்துப் பேசி நன்றி கூறி வாழ்த்து தெரிவித்திருந்தார். ‘நம்பிக்கையில்லா தீர்மானம்’ எனும் ஆபத்தை எதிர்க்கட்சிகள் வீசினால் அதை சமாளிப்பதற்காகவே இப்படி அடுத்தடுத்த கூட்டங்களை முதல்வர் நடத்துகிறார் என்கின்றனர்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

திருபரங்குன்றம்: மதுரை புறப்பட்ட எல். முருகன்; கோவையிலேயே தடுத்து நிறுத்திய காவல்துறை!|LIVE

திருப்பரங்குன்றம் நோக்கி சென்று கொண்டிருந்த பாஜக முன்னாள் மத்திய அமைச்சர்...

திருப்பரங்குன்றம்: "தீபம் ஏற்றவில்லை என்றால் விஜய்யை கிறிஸ்துவராகத்தான் பார்க்க முடியும்" – நயினார்

'கார்த்திகை தீபத் திருநாளான இன்று (நவ.24) திருப்பரங்குன்றம் மலை உச்சியில்...

அருள் விக்னேஷ் மீது FIR: “அரசு வழக்கறிஞரே, யாரையும் பாதுகாக்க முயற்சிக்காதீர்கள்" – உயர் நீதிமன்றம்

சென்னையை சேர்ந்த அதிமுக வழக்கறிஞர் ஆர்.திரிசூலி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில்...

கள்ளக்குறிச்சி: “துணிச்சல்' மாவட்ட ஆட்சியரை மனதாரப் பாராட்டுகிறேன்" – எம்.பி கனிமொழி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டருக்கு எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் ஆபாச மெசேஜ் அனுப்பியதாக...