20
November, 2026

A News 365Times Venture

20
Friday
November, 2026

A News 365Times Venture

`குவாரிக்கு எனது நிலத்தை லீசுக்கு கொடுத்தேன்; மண் எடுத்திருப்பது எனக்கு தெரியாது" – மூர்த்தி பேட்டி

Date:

மதுரை மாவட்டம் சத்திர வெள்ளாளப்பட்டி பகுதியில் உள்ள சரளை குவாரியில் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் 2024 வரை அரசு அனுமதித்ததை விட அதிகளவில் கனிமவளங்களை வெட்டி எடுத்து ரூ. 5.39 கோடி அளவிற்கு அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் மூர்த்தி, ராஜாமணி, அனந்தகுமார் செந்தில்குமார் ஆகியோர் மீது மதுரை மாவட்ட மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் 2 வழக்குகள் பதிவுசெய்தனர். 

அதனடிப்படையில் மதுரை ஐயர் பங்களா எழில் நகர் பகுதியில் முன்னாள் அமைச்சர் மூர்த்தியின் வீட்டில் காலை 6 மணி முதல் 4 மணி நேரத்திற்கு மேலாக மதுரை மாவட்ட மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் சோதனை நடத்தி முடித்தனர்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய மூர்த்தி, “2019-ல் எனக்கு சொந்தமான சத்திரவெள்ளாலப்பட்டி இடத்தில் குவாரி நடத்துவதற்காக மாவட்ட ஆட்சித் தலைவர் அனுமதி பெற்று ஒப்பந்த அடிப்படையில் 5 வருட குத்தகைக்கு ராஜாமணிக்கும் அனந்தராஜுக்கும் கொடுத்தோம்.

முறையாக மாவட்ட ஆட்சியரின் அனுமதியோடு  2019-ல் இருந்து 5ஆண்டுகள் காலம் கல்குவாரிக்காக விட்ட இடத்தில், குவாரிக்கான உகந்த கல் கிடைக்கவில்லை என்று 2021 ஆம் ஆண்டு அதனை அனந்தராஜ் கைவிட்டார்.

அதேபோல ராஜாமணி அந்த கற்களை எடுத்தபோது, தேவையான கற்கள் அதிலும் இல்லை என்ற போதிலும் அருகாமையில் உள்ள எனது பட்டா இடத்தில் மண் எடுத்திருப்பதாக இன்றைக்கு உண்மைக்கு மாறான வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்.

நான் மாவட்ட ஆட்சியரிடம் முறையாக அனுமதி பெற்று லீசுக்கு கொடுத்திருக்கிறேன். மற்றபடி மண் எடுத்திருப்பது எனக்குத் தெரியாது என ஏற்கனவே கோட்டாட்சியரிடம் தெரிவித்திருக்கிறேன்.

இந்த விவகாரம் குறித்து ஏற்கனவே நீதிமன்றம் சென்றிருக்கிறோம். அந்த வழக்கை நீதியரசர் தள்ளுபடி செய்து முறையாக அளந்து முறைப்படுத்தி செய்ய வேண்டும் என  நீதியரசர் உத்தரவு வழங்கியிருக்கிறார்.

முன்னாள் அமைச்சர் மூர்த்தி வீட்டில் சோதனை

அதையும் இவர்கள் எதையும் கடைபிடிக்காமல் தன்னிச்சையாக  ட்ரோன் சர்வே செய்த போது எதிர்ப்பு தெரிவித்து அதற்கு வழக்கறிஞர்கள் கடிதம் தந்திருக்கிறார்கள்; தபால் அனுப்பி இருக்கிறார்கள். அதை எல்லாம் பொருட்படுத்தாமல் இப்போது காவல்துறையினர் உங்கள் பட்டா இடத்தில் மண் எடுத்திருக்கிறார்கள் என வழக்கு தொடுத்திருப்பதாக சொன்னார்கள்.

நாங்கள் மண் எடுக்கவில்லை இடத்தை லீசுக்கு தான் கொடுத்திருக்கிறோம் என்று தான் சொன்னோம்.

என்னிடம் விசாரணை நடத்தவில்லை. இது உண்மைக்கு புறம்பான செய்தி நான் அது போன்ற எந்த மண்ணும் எடுக்கவோ ஜல்லிக்கற்கள் எடுக்கவில்லை மொத்தத்தில் எனக்கு தெரியாது என கூறி இருக்கிறேன்.

தலைவர் என்னிடம் பேசி என்ன நடக்கிறது என கேட்டார் தலைவரிடம் ஒன்னும் இல்லை தலைவரே உண்மை இல்லை. ஏற்கனவே முறையாக நடந்து கொண்டிருக்கிறது. ஒன்னும் பிரச்சனையே இல்லை என கூறினேன்.

முன்னாள் அமைச்சர் மூர்த்தி வீட்டில் சோதனை

இதில் உண்மையே இல்லை. நாங்கள் ஏற்கனவே நீதிமன்றத்தில் போய் தான் நீதி பெற்றிருக்கிறோம். இதற்கும் நீதிமன்றத்திற்கு செல்வோம் முறையாக சட்டரீதியாக அணுகுவோம். 

குவாரியை  பொருத்தமட்டிலும் லீசுக்கு மாவட்ட ஆட்சியர் அனுமதியுடன் 2019ல் கொடுத்தோம் 

அதை தவிர மற்றது இதில் என்ன நடந்திருக்கிறது என ஒருபோதும் எனக்கு தெரியாது நான் அந்த மாதிரி எதுவும் செய்யவில்லை” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

காவிரி விவகாரம்: தமிழக அரசின் மனுக்கள் தள்ளுபடி; பெரும் பின்னடைவு! உச்ச நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாகத் தமிழக அரசு தாக்கல் செய்த மூன்று...

'யோசனை ஓகே, ஆனால் நடைமுறைப்படுத்துவது கடினம்' – அணு ஆயுதக் கட்டுப்பாடு குறித்து ட்ரம்ப் ஓப்பன் டாக்

சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்...

“ரூ700 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்: எப்போதுதான் முதல்வர் பேசுவார்?" – ஸ்டாலின் விமர்சனம்

சென்னை மாதவரத்தில் மத்திய வருவாய் புலனாய்வு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்....

மதுரையில் ரூ.2.32 கோடி அளவிற்கு கல்குவாரி முறைகேடு: முன்னாள் அமைச்சர் மூர்த்தியின் வீட்டில் சோதனை

மதுரை பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் பகுதிகளில் கிரஷர் மற்றும் செம்மண் மற்றும்...