19
November, 2026

A News 365Times Venture

19
Thursday
November, 2026

A News 365Times Venture

வி.எஸ் பாபு மறைவு: `எடப்பாடி முதல் அண்ணாமலை வரை' – அரசியல் தலைவர்கள் இரங்கல்

Date:

கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி மூச்சுத் திணறல் காரணமாக அமைந்தக்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வி.எஸ்.பாபு அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சுவாசக்கருவிகளின் மூலம் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து கவனித்து வருவதாக மருத்துவமனை தரப்பிலிருந்து அறிக்கை வெளியானது.

அமைச்சர்களும் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக உறுதிப்படுத்தினர். இந்த நிலையில், வி.எஸ்.பாபுவின் உடல்நிலை கவலைக்கிடமாகி சிகிச்சை பலனளிக்காமல் இன்று மதியம் 2:24 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்திருப்பதாக மருத்துவமனை அறிவித்திருக்கிறது.

வி.எஸ்.பாபு – VS Babu

வி.எஸ்.பாபு மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்திருக்கின்றனர்.

“கொளத்தூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.எஸ். பாபு அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து வருந்துகிறேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.”

– அதிமுக எடப்பாடி பழனிசாமி

“கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி திரு வி எஸ் பாபு அவர்கள் மறைவு செய்தி கேட்டு வருத்தம் அடைந்தேன்!.. அவரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் அவரை இழந்து வாடும் தவெக இயக்கத்திற்கும், குடும்பத்திற்கும் எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்!”

– பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்

“கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.எஸ். பாபு அவர்கள் காலமான செய்தி, மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் தவெக கட்சித் தொண்டர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். திரு. வி.எஸ். பாபு அவர்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன். ஓம் சாந்தி!”

– வி தி லீடர் அமைப்பின் தலைவர் அண்ணாமலை

எடப்பாடி பழனிசாமி

“கொளத்தூர் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.எஸ். பாபு அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். மக்கள் பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட அவரது இழப்பு பேரிழப்பாகும். அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், தவெக தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.”

– காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர்

“தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரும், மூத்த அரசியல் தலைவருமான திரு. வி.எஸ். பாபு அவர்கள் மறைவெய்திய செய்தி அறிந்து ஆழ்ந்த துயரமும் அதிர்ச்சியும் அடைந்தேன். நீண்டகாலம் அரசியல் பொதுவாழ்வில் ஈடுபட்டு, மக்களோடு நெருக்கமான தொடர்பைப் பேணி வந்தவர் வி.எஸ். பாபு அவர்கள். குறிப்பாக வடசென்னை மக்களின் பிரச்சினைகளையும் கோரிக்கைகளையும் அரசியல் தளத்திலும் சட்டமன்றத்திலும் எடுத்துரைத்த அவரது பொதுவாழ்வுப் பங்களிப்புகள் நினைவுகூரத்தக்கவை.

மாணிக்கம் தாகூர்
மாணிக்கம் தாகூர்

அரசியலில் நீண்ட அனுபவமும், மக்கள் பணியில் ஈடுபாடும் கொண்ட அவரது மறைவு தமிழ்நாடு அரசியல் பொதுவாழ்விற்கும், அவருடன் இணைந்து பணியாற்றிய அரசியல் தோழர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், அரசியல் தோழர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். எல்லாம் வல்ல இறைவன் அவரது குடும்பத்தினருக்கு இத்துயரத்தைத் தாங்கிக் கொள்ளும் மனவலிமையையும் ஆறுதலையும் வழங்கிடப் பிரார்த்திக்கிறேன். வி.எஸ். பாபு அவர்களின் பொதுவாழ்வுப் பணிகளும் நினைவுகளும் என்றும் நிலைத்திருக்கும்.”

– எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"காங்கிரஸ் பாரம்பர்யம் உள்ளவரால் இங்கே தொடர முடியாது..!"- பாஜகவிலிருந்து விலகினார் பத்மஜா வேணுகோபால்

கேரள மாநில முன்னாள் முதல்வரும் மூத்த காங்கிரஸ் தலைருமான மறைந்த கே.கருணாகரனின்...

“மக்களோடு மக்களாகப் பழகி, அன்பை பெற்றவர்" – வி.எஸ் பாபு மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்

கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி மூச்சுத் திணறல் காரணமாக அமைந்தக்கரையில்...

'வருத்தமளிக்கிறது.!'- கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ் பாபுவுக்கு இரங்கல் தெரிவித்த ஸ்டாலின்

கடந்த செப்.9 ஆம் தேதியன்று மூச்சுத்திணறல் காரணமாக தவெக கொளத்தூர் எம்எல்ஏ...

'72 நாட்கள் தீவிர சிகிச்சைக்குப் பின் காலமானார் கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு!' – விவரம் என்ன?

உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அமைந்தக்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கொளத்தூர்...