19
November, 2026

A News 365Times Venture

19
Thursday
November, 2026

A News 365Times Venture

டாஸ்மாக் கிடங்கு: 'மருத்துவத்துறை நிதி பயன்படுத்தப்படவில்லை.!'- மக்கள் நல்வாழ்வுத்துறை விளக்கம்

Date:

“டாஸ்மாக் கிடங்குகளைப் பராமரிக்க மருத்துவத்துறையின் நிதியைத் தமிழ்நாடு அரசு பயன்படுத்துவதாகவும், மருத்துவப் பணிகள் கழகம் தனது கடமையை மறந்து டாஸ்மாக் பணிகளில் ஈடுபடுவதாகவும் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு சிலர் திட்டமிட்டுப் பரப்பும் செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை” என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

அதில், ” தற்போது டாஸ்மாக் செலவில் பணியமர்த்தப்படும் கூடுதல் பொறியாளர்கள் மூலம், TNMSC-இன் பொறியியல் பிரிவு மேலும் வலுப்படுத்தப்படும். மருத்துவப் பணிகள் கழகத்திற்கு எவ்வித கூடுதல் நிதிச்சுமையும் இல்லாமல், நமது சொந்த மருந்துக் கிடங்குகளின் பராமரிப்புப் பணிகளும் திறம்படவும், விரைவாகவும் மேற்கொள்ளப்படும் என மாண்புமிகு மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் கோ.க.அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

டாஸ்மாக்

டாஸ்மாக் கிடங்குகளைப் பராமரிக்க மருத்துவத்துறையின் நிதியைத் தமிழ்நாடு அரசு பயன்படுத்துவதாகவும், மருத்துவப் பணிகள் கழகம் தனது கடமையை மறந்து டாஸ்மாக் பணிகளில் ஈடுபடுவதாகவும் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு சிலர் திட்டமிட்டுப் பரப்பும் செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை.

தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்திற்குச் சொந்தமாக மாநிலம் முழுவதும் 38 மருந்துக் கிடங்குகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் எண்ணிக்கையும் பராமரிப்புத் தேவைகளும் கணிசமாக அதிகரித்துள்ளன. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான உயிர் காக்கும் மருந்துகள் பாதுகாக்கப்படும் நமது மருத்துவக் கிடங்குகளை மழைக்காலங்களில் கசிவின்றி, மிகப்பாதுகாப்பாகப் பராமரிக்கக் கூடுதல் மனிதவளம் நமக்குத் தொடர்ந்து தேவைப்படுகிறது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள சில டாஸ்மாக் கிடங்குகளின் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள, TNMSC-இன் பொறியியல் பிரிவின் உதவியை டாஸ்மாக் நிர்வாகம் கோரியது. அரசின் ஒரு துறை, தனது உட்கட்டமைப்புப் பணிகளுக்காகச் சிறப்பான பொறியியல் கட்டமைப்பு கொண்ட மற்றொரு துறையின் (TNMSC – Civil Wing) உதவியை நாடுவது வழக்கமான நிர்வாக நடைமுறைதான்.

இதற்காகப் புற ஆதார முறையில் (Outsourcing) 5 கட்டடவியல் மற்றும் 2 மின்சார உதவிப் பொறியாளர்கள் என மொத்தம் 7 கூடுதல் பொறியாளர்களைப் பணியமர்த்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கான ஊதியம் மற்றும் இதர செலவுகள் முழுவதையும் டாஸ்மாக் (TASMAC) நிர்வாகமே ஏற்றுக்கொள்கிறது. இதற்காக மருத்துவத்துறையின் நிதியோ, TNMSC-இன் நிதியோ ஒரு ரூபாய் கூடப் பயன்படுத்தப்படவில்லை.

அமைச்சர் அருண்ராஜ்
அமைச்சர் அருண்ராஜ்

தற்போது டாஸ்மாக் செலவில் பணியமர்த்தப்படும் இந்தக் கூடுதல் பொறியாளர்கள் மூலம், TNMSC-இன் பொறியியல் பிரிவு மேலும் வலுப்படுத்தப்படும். மருத்துவப் பணிகள் கழகத்திற்கு எவ்வித கூடுதல் நிதிச்சுமையும் இல்லாமல், நமது சொந்த மருந்துக் கிடங்குகளின் பராமரிப்புப் பணிகளும் திறம்படவும், விரைவாகவும் மேற்கொள்ளப்படும். இதனால், அரசு மருத்துவமனைகளுக்கான தரமான மருந்து விநியோகக் கட்டமைப்பு மேலும் வலுவடையும்.

உண்மை நிலை அறியாமல், வெறும் அரசியல் லாபத்திற்காகப் பரப்பப்படும் அவதூறுகளையும், வதந்திகளையும் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு பரப்பப்படும் விமர்சனங்களுக்கு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசின் தொடர்ச்சியான மக்கள் நலப்பணிகளே சிறந்த பதிலாக அமையும் என மாண்புமிகு மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் கோ.க.அருண்ராஜ் அவர்கள் தெரிவித்துள்ளார்” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

புதினுடன் எங்கும் செல்லும் ‘செகெட்’ அது என்ன? அந்தப் பெட்டியால் அணு ஆயுதங்களை ஏவ முடியுமா?

ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சிமாநாட்டிற்கான சீனாவின் ஷென்சென் நகருக்குச் சென்றிருக்கிறார்...

`தலைமைக்குப் புகார்… அனுப்பியவர் மீதே நடவடிக்கையா?' – வெடிக்கும் பெரம்பலூர் விசிக விவகாரம்

"கட்சிப் பெயரைப் பயன்படுத்தி, எங்கள் கட்சி மாவட்டச் செயலாளர் கட்டப்பஞ்சாயத்து, கட்சிக்கு...

“உண்போம், குடிப்போம், கொண்டாடுவோம் என்பது இந்தியக் கலாசாரம் அல்ல" – சேமிப்பை வலியுறுத்திய மோடி

ஆசியான் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள மணிலா சென்று திரும்பிய இந்தியப் பிரதமர்...