18
November, 2026

A News 365Times Venture

18
Wednesday
November, 2026

A News 365Times Venture

“தவெக-வின் பொறுப்பின்மை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல" – அண்ணாமலை காட்டம்!

Date:

காவிரி தொழில்நுட்பக் குழுமம் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான நீர்ப்பிரிவின் துணைத் தலைவர் பதவி காலியாகி 4 மாதங்கள் கடந்த நிலையில், இன்னும் அந்தப் பதவிக்கான நியமனம் நடக்கவில்லை என வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியிருக்கிறார். இது குறித்து அவர் தன் எக்ஸ் பக்கத்தில், “காவிரி தொழில்நுட்பக் குழுமம் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான நீர்ப்பிரிவின் (Cauvery Technical Cell-cum-Inter-State Waters Wing) துணைத் தலைவராக இருந்த திரு. எம். செல்வராஜ் அவர்களின் ராஜினாமா கடந்த 2026 ஜூன் 28-ஆம் தேதி ஏற்றுக்கொள்ளப்பட்டது. அந்த மிக முக்கியமான பதவியை மீண்டும் நிரப்புவதற்கான அரசாணை, சுமார் மூன்றரை மாதங்களுக்குப் பிறகு, அக்டோபர் 9-ஆம் தேதிதான் வெளியிடப்பட்டிருக்கிறது.

முதல்வர் விஜய்

அரசாணை வெளியிடப்பட்டு ஒரு மாதத்திற்கும் மேலாகியும், இன்றுவரை புதிய துணைத் தலைவர் நியமிக்கப்பட்டதாகத் தகவல் இல்லை. தமிழ்நாட்டின் நீராதார உரிமைகள் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர்ப் பிரச்சினைகளைக் கையாள்வதில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் ஒரு பொறுப்பான பதவியை நிரப்புவதிலேயே இத்தகைய காலதாமதம் ஏற்படுவது அரசின் நிர்வாகத் திறன் மற்றும் பொறுப்புணர்வு குறித்த கேள்விகளை எழுப்புகிறது.

இது சாதாரணமான ஒரு நிர்வாகப் பதவி அல்ல, தமிழ்நாட்டின் நீர் உரிமைகளைப் பாதுகாப்பதில் முக்கியமான தொழில்நுட்ப மற்றும் சட்டரீதியான பணிகளுடன் தொடர்புடைய பொறுப்பு. ஒருபுறம் காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்குத் தேவையான தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் கவலையில் உள்ளனர். மறுபுறம் காவிரி நீர்ப் பங்கீட்டுப் பிரச்சினை தொடர்ந்து கொண்டிருக்கிறது. கர்நாடகத்தின் மேகதாது அணைத் திட்ட விவகாரமும் தமிழ்நாட்டின் உரிமைகளுக்குச் சவாலாக நீடிக்கிறது. இத்தனை முக்கியமான பிரச்சினைகள் ஒருபுறம் இருக்கும்போது,

என். ஆனந்த்
என். ஆனந்த்

அவற்றைக் கையாள வேண்டிய காவிரி தொழில்நுட்பக் குழுமம் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான நீர்ப்பிரிவின் (Cauvery Technical Cell-cum-Inter-State Waters Wing) மிக முக்கியமான துணைத் தலைவர் பதவி காலியாக இருப்பது எவ்வளவு பெரிய நிர்வாகக் குறைபாடு? தமிழக அமைச்சர்கள் திரு. N. ஆனந்த் மற்றும் திரு. ஆதவ் அர்ஜுனா ஆகியோர், மத்திய நீர்வளத்துறை அமைச்சரைச் சந்தித்து மேகதாது அணை விவகாரம் தொடர்பாக மனு அளிக்க உள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

மாநிலத்தின் சொந்த நிர்வாகக் கட்டமைப்பை வலுப்படுத்தி, முக்கியப் பொறுப்புகளுக்கான நியமனங்களை உரிய நேரத்தில் மேற்கொள்ளாமல், மத்திய அமைச்சரைச் சந்தித்து மனு அளிப்பது மட்டுமே இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வாகிவிடும் என்று தவெக அரசு நினைக்கிறதா? விவசாயிகளின் வாழ்வாதாரமும், தமிழ்நாட்டின் நீர் உரிமையும் தொடர்புடைய இவ்வளவு முக்கியமான விவகாரங்களில் தவெக அரசின் இத்தகைய நிர்வாகத் தாமதமும் பொறுப்பின்மையும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'சோனியாவுக்கு நான் வாழ்த்து சொல்லி இருக்கிறேன், ஆனால் எனக்கு அழைப்பிதழ்..!'- ஸ்டாலின் கூறியதென்ன?

திமுக தலைவர் ஸ்டாலின் சென்னை அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்திருக்கிறார். மேகதாது...

“தவெக-வின் 60 – 70 எம்.எல்.ஏ-க்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள்" – திமுக ரகுபதி சொல்லும் கணக்கு!

தவெக-வின் 60 - 70 எம்.எல்.ஏ-க்கள் அதிருப்தியில் இருப்பதாக திமுக முன்னாள்...

கரூர்: சின்ன ஆண்டாங்கோவில் அருகில் குப்பை மேடு; சுகாதாரச் சீர்கேட்டைக் கண்டுகொள்ளாத நகராட்சி

கரூர் மாவட்டம், சின்ன ஆண்டாங்கோவில் ஏரியாவின் பிரதான பகுதியான விநாயகர் கோயிலின்...