17
November, 2026

A News 365Times Venture

17
Tuesday
November, 2026

A News 365Times Venture

'மன்மோகன் சிங்கை பிரதமர் பதவியிலிருந்து நீக்க கோரிய பிரணாப் முகர்ஜி!' – என்ன சொல்கிறார் சோனியா?

Date:

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சோனியா காந்தி ‘Belonging’ என்ற பெயரில் சுயசரிதை நூலை எழுதியிருக்கிறார். அதில் அவர் அரசியல்ரீதியாக குறிப்பிட்டிருக்கும் சில சம்பவங்கள் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. குறிப்பாக பிரணாப் முகர்ஜிக்கு பிரதமராகும் ஆசை இருந்ததை தெரிந்து அதிர்ச்சியடைந்தேன் என சோனியா கூறியிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.

சோனியா காந்தி

சோனியா காந்தியின் புத்தகத்தில் 2004 இல் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து குறைந்தபட்ச செயல்திட்டத்தின் அடிப்படையில் காங்கிரஸ் ஆட்சியமைக்கையில் மன்மோகன் சிங் பிரதமரான சம்பவத்தை விரிவாக எழுதியிருக்கிறார். அதில், மன்மோகன் சிங் மிகச்சிறந்த அறிவாளி, பொருளாத மேதை என சோனியா குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும், வெளிநாட்டு பிரதிநிதிகள் இந்தியாவுக்கு வரும் போது மன்மோகன் சிங்கின் அறிவுக்கூர்மையை வியந்து பாராட்டுவர் என்றும் பெருமிதப்பட்டிருக்கிறார்.

மன்மோகன் சிங்கை பொம்மை போல தான் பின்னிருந்து இயக்கியதாக வந்த விமர்சனங்களையும் சோனியா முற்றிலும் மறுத்திருக்கிறார். ‘எங்கள் இருவருக்குள்ளும் பிளவை ஏற்படுத்த சிறு வாய்ப்பு கிடைத்தாலும் அதை எதிர்க்கட்சியினர் தவறவிடமாட்டார்கள் என்பதை இருவருமே நன்கு உணர்ந்திருந்தோம். ஆட்சி நிர்வாகம் மன்மோகனின் கையில் இருந்தது. கட்சி என்னுடைய கையில் இருந்தது. பிரணாப் முகர்ஜி, அர்ஜூன் சிங், ஏ.கே.அந்தோணி, அகமது படேல் சீனியர்கள் அடங்கிய ஒரு மையக்குழு இருந்தது. அந்தக் குழு வாரவாரம் பிரதமர் மன்மோகன் சிங்குடன் அரசின் செயல்பாடுகள் பற்றி ஆலோசனை செய்யும்’ என புத்தகத்தில் சோனியா குறிப்பிட்டிருக்கிறார்.

பிரணாப் முகர்ஜி

இந்தக் குழுவில் உறுப்பினராக இருந்த பிரணாப் முகர்ஜிக்கு நிதியமைச்சர் ப.சிதம்பரத்துடன் உரசல் ஏற்பட, ‘நாம் ஆட்சித் தலைமையையே மாற்ற வேண்டும்’ என பிரணாப் எரிச்சலில் கூறியதாக சோனியா குறிப்பிடுகிறார். ‘பிரணாப் வெளிப்படுத்திய வார்த்தைகளின் மூலம் அவருக்கு பிரதமராகும் ஆசை இருந்ததை உணர்ந்தேன். அதன்பின் நான் அந்த விவகாரத்திலிருந்து உரையாடலை மாற்றிவிட்டேன். அவருக்கு என் மீது வருத்தம் இருந்தது. ஆனால், அவர் அதை வெளிக்காட்டிக் கொள்ளவே இல்லை’ என சோனியா பதிவு செய்திருக்கிறார்.

இதற்குதான் பிரணாப் முகர்ஜியின் மகளான ஷர்மிஸ்தா முகர்ஜி சமீபத்தில் எதிர்வினையாற்றியிருந்தார். அவர் கூறியிருப்பதாவது, ‘இந்த விவகாரத்தில் எதற்காக இவ்வளவு ‘அதிர்ச்சியடைய’ வேண்டும்? அரசியலிலும் நிர்வாகத்திலும் பல தசாப்த கால அனுபவம், கடின உழைப்பு மற்றும் அபாரமான அறிவாற்றல் கொண்ட ஒருவர் பிரதமராக வேண்டும் என்று ஆசைப்படுவதில் என்ன தவறு இருக்கிறது? ஒருமுறை நான் அவரிடம், பிரதமராக விரும்புகிறீர்களா என்று கேட்டபோது, எந்தத் தயக்கமும் இல்லாமல், ‘தகுதியும் திறமையும் கொண்ட எந்தவொரு அரசியல்வாதிக்கும் பிரதமராக வேண்டும் என்ற லட்சியம் இருக்கும்’ என்று அவர் பதிலளித்தார்.

எனது தந்தை மிகவும் எளிய பின்னணியிலிருந்து வந்தவர். அவர் தனது வாழ்க்கையில் அடைந்த ஒவ்வொரு உயர்வும் அவரது சொந்தத் திறமையாலும் கடின உழைப்பாலும் கிடைத்தவை. பிரதமர் பதவி உட்பட எந்தப் பதவியும், குடும்ப அரசியல் வாரிசுரிமையின் அடிப்படையில் அவருக்குத் தட்டில் வைத்து வழங்கப்படவில்லை.

மன்மோகன் சிங்

அனைத்துத் தகுதிகளும் கொண்ட ஒருவர் பிரதமராக வேண்டும் என்ற லட்சியத்தைக் கொண்டிருப்பதில் என்ன தவறு இருக்கிறது? காந்தி-நேரு குடும்பத்தைச் சாராத ஒருவர் இத்தகைய லட்சியத்தைக் கொண்டிருக்கிறார் என்பதற்காகவும், அதைத் தன்னிடம் வெளிப்படுத்தத் துணிந்தார் என்பதற்காகவும் சோனியா காந்தி ‘அதிர்ச்சியடைந்தார்’ என்றால், அதில் என்ன இருக்கிறது?’ எனக் கேட்டிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

திருப்பத்தூர் பெரிய ஏரி: சுகாதாரச் சீர்கேட்டைச் சுட்டிக்காட்டிய விகடன்; குப்பைகளை அகற்றிய நிர்வாகம்!

திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையத்தை ஒட்டி அமைந்துள்ளது திருப்பத்தூர் பெரிய ஏரி....

திருப்பரங்குன்றம்: "தர்ஹாவை வழிபடுவது எல்லா இஸ்லாமியர்களுக்கும் மரபு அல்ல" – டாக்டர் கிருஷ்ணசாமி

"ஒரு தர்ஹாவைக் காரணம் காட்டி லட்சக்கணக்கான இந்துக்களின் வழிபாட்டு உரிமையைப் பறிப்பதும்,...

கோவை: பெண்ணிடம் தகராறு செய்த தவெக நிர்வாகி – கட்சியில் இருந்து அதிரடி நீக்கம்!

கோவை கலிக்கநாயக்கன்பாளையம் பகுதியில் மகாராஜன் என்பவர் இருசக்கர வாகன விற்பனை ஷோரூம்...

'என் வீட்டுல 22 வருசமா வேலை பார்க்குறாங்க'- பணிப்பெண்ணை விஜய்யிடம் அறிமுகப்படுத்திய பிரியங்கா காந்தி

டெல்லியில் நேற்று (16.11.2026) நடைபெற்ற சோனியா காந்தியின் சுயசரிதை புத்தக...