17
November, 2026

A News 365Times Venture

17
Tuesday
November, 2026

A News 365Times Venture

'என் வீட்டுல 22 வருசமா வேலை பார்க்குறாங்க'- பணிப்பெண்ணை விஜய்யிடம் அறிமுகப்படுத்திய பிரியங்கா காந்தி

Date:

டெல்லியில் நேற்று (16.11.2026) நடைபெற்ற சோனியா காந்தியின் சுயசரிதை புத்தக வெளியீட்டு விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் விருந்தினராக கலந்துகொண்டிருந்தார். அப்போது விஜய்யைச் சந்தித்த பிரியங்கா காந்தி தன்னுடைய பணிப்பெண்ணை அவரிடம் அறிமுகப்படுத்தி அவருடன் புகைப்படம் எடுக்க வைத்திருக்கிறார்.

விஜய் – பிரியங்கா காந்தி

சோனியா காந்தியின் சுயசரிதை நூலான ‘Belonging’ நூலின் வெளியீட்டு விழா நேற்று டெல்லியில் நடந்திருந்தது. இந்த விழாவின் சிறப்பு விருந்தினராக தமிழக முதல்வர் விஜய்யும் கலந்துகொண்டார்.

விஜய்க்கு ராகுல் காந்தி அருகே முதல் வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. சோனியா காந்தியுடன் ராகுல், பிரியங்கா இருவரும் மேடையேறி புத்தகத்தை வெளியிட்டனர். நிகழ்ச்சி முடிந்தவுடன் முதல்வர் விஜய்யைச் சந்தித்த, பிரியங்கா காந்தி கடந்த 22 ஆண்டுகளாக தனது இல்லத்தில் பணியாற்றி வரும் பெண் ஒருவரை விஜய்யிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். ‘அந்தப் பெண்ணுக்கு விஜய்யுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை’ என பிரியங்கா காந்தி விஜய்யிடம் கூறியிருக்கிறார்.

விஜய்
விஜய்

இதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்ட விஜய், அப்பெண்ணுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டதுடன், அவரிடம் நலம் விசாரித்து ஒன்றிரண்டு நிமிடங்கள் பேசியும் அனுப்பியிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

அண்ணன் சீர் திட்டம்: `8 கிராம் தங்க நாணயம் & பட்டுப்புடவை' – விண்ணப்பிப்பது எப்படி?

`அண்ணன் சீர்' திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இந்த...

SIR: `உ.பி-யில் 1.27 கோடி இந்து வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்'- விளக்கம் கேட்ட யோகி ஆதித்யநாத்!

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு (SIR) பிறகு உத்தரப்பிரதேச மாநில...

இஸ்ரேல் அதிபராக தொடர நெதன்யாகுவின் ஐடியா; ஒத்துழைக்காத எதிர்க்கட்சி! இன்னும் எத்தனை நாள் கெடு?

இஸ்ரேலில் தேர்தல் முடிவுகள் வந்து கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் ஆகிவிட்டன. ஆனால்,...

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம்: `இதே எடப்பாடியாராக இருந்திருந்தால்…'- அதிமுக பா.வளர்மதி பேச்சு

தவெக கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட ஆட்சியருக்கு குறுஞ்செய்தி அனுப்பியதாக வெடித்திருக்கும்...