17
November, 2026

A News 365Times Venture

17
Tuesday
November, 2026

A News 365Times Venture

இஸ்ரேல் அதிபராக தொடர நெதன்யாகுவின் ஐடியா; ஒத்துழைக்காத எதிர்க்கட்சி! இன்னும் எத்தனை நாள் கெடு?

Date:

இஸ்ரேலில் தேர்தல் முடிவுகள் வந்து கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் ஆகிவிட்டன. ஆனால், அந்த நாட்டில் இன்னும் யாரும் ஆட்சி அமைக்கவில்லை.

பெரும்பான்மை பெறாத இஸ்ரேல் கட்சிகள்

இஸ்ரேல் நாடாளுமன்றம் நெசட்டில் பெரும்பான்மை பெற மொத்தம் 61 இடங்கள் தேவை. ஆனால், இஸ்ரேலின் தற்போதைய அதிபர் நெதன்யாகுவின் கூட்டணி 53 இடங்களைப் பெற்றுள்ளது.

நெதன்யாகுவிற்கு எதிராகப் போட்டியிட்ட இஸ்ரேலின் முன்னாள் ராணுவத் தளபதி காடி ஐசன்காட்டின் கூட்டணி 48 இடங்களைப் பெற்றுள்ளது. அரபுக் கட்சிகள் 19 இடங்களைப் பெற்றுள்ளன.

இதில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், இஸ்ரேலில் யாரும் இன்னும் ஆட்சி அமைக்கவில்லை.

இஸ்ரேல் தேர்தல்

அரபுக் கட்சிகள்…

நெதன்யாகு, காடி ஐசன்காட் – இதில் எந்தக் கூட்டணி அரபுக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்தாலும், அவர்கள் எளிதாக ஆட்சி அமைத்துவிடலாம். ஆனால், இருவருமே அந்த ஆப்ஷனை விரும்பவில்லை.

அரபுக் கட்சி பெரும்பாலும் முஸ்லிம்களைக் கொண்டது. இவர்கள் இஸ்ரேலில் சிறுபான்மையினர். இஸ்ரேலில் யூத மதத்தினர்தான் அதிகம்.

நெதன்யாகு யூதர்களுக்கே இஸ்ரேலில் முக்கியத்துவம் தர வேண்டும் என்று நினைப்பவர். மேலும், அவர் தற்போது ஈரான் போரை முன்னெடுத்து வருகிறார். இதனால், அவர் அரபுக் கட்சிகளுடன் கூட்டணி வைக்கச் சிறிதும் விரும்பவில்லை.

இதைத் தேர்தல் முடிவுகள் வெளியான தொடக்கத்திலேயே நெதன்யாகு வெளிப்படையாக அறிவித்துவிட்டார்.

அரபுக் கட்சிகளுடன் கூட்டணி வைப்பதைக் காடி ஐசன்காட் கூட்டணியில் இருக்கும் பிற தலைவர்களே விரும்பமாட்டார்கள். முக்கியமாக, அரபுக் கட்சிகளுடன் கூட்டணி வைத்தால், காடி ஐசன்காட் யூத மக்களுக்குக்கிடையே பின்னடைவைச் சந்திப்பார்.

இதனால், நெதன்யாகு, காடி ஐசன்காட் இருவருமே அரபுக் கட்சிகளுடன் கூட்டணி வைக்கத் தயாராக இல்லை. ஆனால், அரபுக் கட்சிகள் காடி ஐசன்காட்டிற்கு ஆதரவு தர விரும்புகிறார்கள். நெதன்யாகு ஆட்சியில் தங்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றும்,

எங்களுக்கு ஆட்சியில் எல்லாம் பங்கு வேண்டாம்… எங்களுக்கு எதிராக நடக்கும் வன்முறையைத் தடுத்தாலே போதும் என்றும் அரபுக் கட்சிகள் கூறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

நெதன்யாகு
நெதன்யாகு

இரண்டே இரண்டு ஆப்ஷன்கள்

இவர்கள் இருவருக்கும் இன்னும் இருக்கும் இரண்டு ஆப்ஷன்கள் – ஒன்று, மீண்டும் தேர்தல் நடத்துவது, இன்னொன்று, நெதன்யாகு மற்றும் காடி ஐசன்காட் இணைந்து தேசிய ஒற்றுமை அரசை அமைப்பது.

மீண்டும் தேர்தல் நடத்துவது இப்போதைக்கு முடியாதது. இஸ்ரேல் சட்டப்படி, தேர்தல் முடிவுகள் வெளியாகி 103 நாள்கள் ஆன பின்னும், பெரும்பான்மையைப் பெற முடியவில்லை என்றால் தான், மீண்டும் தேர்தல் நடத்த முடியும்.

இந்தத் தேதி 2027-ம் ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதிதான் வருகிறது.

நாடாளுமன்றத்தில் காடி ஐசன்காட்டிற்கு ஆதரவு அதிகமாக உள்ளதால், ஆட்சி அமைக்க அவரை அழைத்திருந்தார் இஸ்ரேலின் குடியரசுத் தலைவர் ஐசக் ஹெர்சாக்.

இதனால், காடி ஐசன்காட் டிசம்பர் 6-ம் தேதிக்குள், தன்னுடைய பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.

நெதன்யாகுவின் ஐடியா

இன்னொரு பக்கம், நெதன்யாகு அதிபர் பதவியை விட்டுக்கொடுப்பதாக இல்லை. இதனால், அவர் தேசிய ஒற்றுமைக் கூட்டணியைக் காடி ஐசன்காட்டுடன் அமைத்து, அதிபராகத் தொடர வேண்டும் என்றிருக்கிறார்.

இதனால், கடந்த சனிக்கிழமை (நவம்பர் 14) நெதன்யாகு தனது எக்ஸ் பக்கத்தில், “காடி ஐசன்காட்டுடன் நான் ஒரு முக்கியமான உரையாடலை நடத்தினேன்.

யூத மக்களின் தேசமாக இஸ்ரேல் இருப்பதை ஆதரிக்கும் அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய, நம் முன்னே உள்ள மிகப்பெரிய மற்றும் சிக்கலான பாதுகாப்புச் சவால்களை எதிர்கொள்ளக்கூடிய ஒரு ‘தேசிய ஒற்றுமை அரசாங்கத்தை’ அமைப்பது இந்த நேரத்தில் எவ்வளவு அவசியமானது என்ற எனது புரிதலை இந்தச் சந்திப்பு மேலும் வலுப்படுத்தியுள்ளது” என்று பதிவிட்டிருந்தார்.

காடி ஐசன்காட்
காடி ஐசன்காட்

இரு தரப்பிற்கு இடையே பேச்சுவார்த்தை நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால், எந்தவொரு முடிவும் இன்னும் எட்டப்படவில்லை.

ஒருவரின் நிபந்தனைக்கு மற்றொருவர் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால், இந்தப் பேச்சுவார்த்தை நல்ல முடிவை இன்னும் எட்டவில்லை.

அதிபர் பதவியை விட்டுக்கொடுக்க மனமில்லாத நெதன்யாகு, குடியரசுத் தலைவரே ஆட்சி அமைக்க வாய்ப்பு தரப்பட்ட காடி ஐசன்காட் – இவர்களில் யார் அடுத்த இஸ்ரேல் அதிபர் ஆவார்கள்? எப்படி அதிபராகப் போகிறார்கள்? என்பது விரைவில் தெரிந்துவிடும்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'என் வீட்டுல 22 வருசமா வேலை பார்க்குறாங்க'- பணிப்பெண்ணை விஜய்யிடம் அறிமுகப்படுத்திய பிரியங்கா காந்தி

டெல்லியில் நேற்று (16.11.2026) நடைபெற்ற சோனியா காந்தியின் சுயசரிதை புத்தக...

அண்ணன் சீர் திட்டம்: `8 கிராம் தங்க நாணயம் & பட்டுப்புடவை' – விண்ணப்பிப்பது எப்படி?

`அண்ணன் சீர்' திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இந்த...

SIR: `உ.பி-யில் 1.27 கோடி இந்து வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்'- விளக்கம் கேட்ட யோகி ஆதித்யநாத்!

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு (SIR) பிறகு உத்தரப்பிரதேச மாநில...

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம்: `இதே எடப்பாடியாராக இருந்திருந்தால்…'- அதிமுக பா.வளர்மதி பேச்சு

தவெக கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட ஆட்சியருக்கு குறுஞ்செய்தி அனுப்பியதாக வெடித்திருக்கும்...