16
November, 2026

A News 365Times Venture

16
Monday
November, 2026

A News 365Times Venture

'முதல்வர் தலைமையில் அமைச்சருக்கு டும் டும் டும்; டென்ஷன் மோடில் பொதுச் செயலாளர்!' – தவெக அப்டேட்ஸ்!

Date:

துணை சபாநாயகர், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ விவகாரம் என சர்ச்சைகளில் சிக்கி சுழன்று கொண்டிருக்கிறது தவெக அரசு. இந்நிலையில், தவெக கட்சிக்குள் என்ன நடக்கிறதென பனையூர் வட்டாரத்தில் பேச்சுக் கொடுத்தோம்.

பர்வேஸ்

அமைச்சருக்கு டும்..டும்

தவெக முகாமில் ஒரு திருமணத்துக்கான வேலைகள் ஜரூராக நடந்துகொண்டிருக்கிறது. புதுக்கோட்டையை சேர்ந்த அமைச்சர் பர்வேஸ்தான் புது மாப்பிள்ளை. சிறு வயதிலிருந்தே மக்கள் இயக்கம் மூலம் வளர்ந்து வந்தவர் என்பதாலும் பொதுச்செயலாளர் ஆனந்துக்கு நெருக்கமானவர் என்பதாலும் முதல்வரின் தலைமையில்தான் திருமணம் செய்ய வேண்டுமென முடிவெடுத்திருக்கிறார் பர்வேஸ்.

நவம்பர் கடைசி வாரத்தில் சென்னையில் பிரமாண்டமாக இந்த திருமணம் நடைபெறவிருப்பதாக பனையூர் வட்டாரத்தினர் கிசுகிசுக்கின்றனர். ‘மாப்பிள்ளை’ பர்வேஸ்!

கடந்த வாரம் தி.நகரில் உள்ள வாய்ஸ் ஆப் காமன் அலுவலகத்தில் தவெக செய்தித் தொடர்பாளர்கள் கூட்டத்தை அமைச்சர் ராஜ்மோகன் நடத்தியிருந்தார். இந்தக் கூட்டத்தில் அரசை நோக்கி வரும் சர்ச்சைகளுக்கு எப்படி பதில் கொடுக்க வேண்டுமென பேசப்பட்டிருக்கிறது.

அமைச்சர் ராஜ்மோகன்
அமைச்சர் ராஜ்மோகன்

கூட்டம் என்னவோ சுமூகமாகத்தான் நடந்து முடிந்திருக்கிறது. ஆனால், இந்தக் கூட்டம் குறித்து பொதுச்செயலாளர் ஆனந்துக்கு தகவலே சொல்லப்படவில்லை எனக் கட்சி வட்டாரத்தினர் கூறுகின்றனர். ‘கட்சி சம்பந்தமான கூட்டம்னா…கட்சி ஆபிஸ்ல நடத்த வேண்டிதான, ஏன் வாய்ஸ் ஆப் காமன் ஆபிஸ்ல நடத்துறாங்க’ என தனக்கு நெருக்கமானவர்களிடம் ஆனந்த் பொரிந்து தள்ளியிருப்பதாக உள்விவகாரங்களை அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் ஆனந்த் ஆதரவு செய்தித் தொடர்பாளர்களை அழைத்து, ‘ஏன் இப்படியொரு கூட்டம் நடந்தது என்பதை தெரிவிக்கவில்லை?’ என கண்டிக்கவும் செய்திருக்கின்றனர் என்கின்றனர் பனையூர் வட்டாரத்தினர்.

பனிப்போர் ஸ்டார்ட்ஸ்!

செய்தித் தொடர்பாளர்களுக்கு கட்டுப்பாடு!

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ விவகாரம் பூதாகரமாகியிருக்கும் சூழலில் செய்தித் தொடர்பாளர்கள் யாரையும் எந்தச் சேனலின் விவாதத்துக்கு அடுத்த ஒரு வாரத்துக்கு செல்ல வேண்டாமென தலைமை உத்தரவிட்டிருக்கிறதாம். கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ விவகாரத்துக்காகத்தான் இந்தக் கட்டுப்பாடா அல்லது வேறெதுவும் விவகாரமா? என செய்தித் தொடர்பாளர்கள் குழம்பிப் போயிருக்கின்றனர்.

புஸ்ஸி ஆனந்த்
புஸ்ஸி ஆனந்த்

அதிருப்தியில் தவெக இஸ்லாமியர்?

தவெகவின் அமைச்சரவையில் இஸ்லாமியர்கள் இருந்தாலும், கட்சியிலும் ஆட்சி நிர்வாகத்திலும் இஸ்லாமியர்களுக்கு உரிய முக்கியத்துவம் கிடைப்பதில்லை என கட்சிக்குள் இருக்கும் இஸ்லாமிய புள்ளிகள் வருந்துகின்றனராம். குறிப்பாக எம்.எல்.ஏ ஒருவரே தனிக்கட்சியை விட்டுவிட்டெல்லாம் இங்கே வந்தேன். ஆனால், முஸ்லிம் லீகுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை நமக்கு கொடுப்பதில்லை. வாரியத் தலைவர் பதவிகளையும் நம்முடைய சமூகத்துக்கு எதிர்பார்த்தோம். ஆனால், திமுக ஆட்சியில் நமது சமூகத்துக்கு கிடைத்த பிரதிநிதித்துவம் கூட இப்போது கிடைக்கவில்லை’ என போனை போட்டு புலம்புகிறாராம். அந்த எம்.எல்.ஏ கொஞ்சம் முன்னுக்கு பின்னாக பேசக் கூடியவர் என்றாலும் அவர் சொல்லும் காரணங்களில் நியாயமிருக்கிறது என்கின்றனர் கட்சியின் இஸ்லாமிய புள்ளிகள் சிலர்.

உஷாரான மதுரை தவெக!

மதுரை நகைக்கடை கொள்ளை வழக்கில் இன்ஸ்டா இன்புளூயன்சரான மீனாட்சி என்பவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இவர் தவெகவை சேர்ந்தவர் என ஒரு தகவல் சமூகவலைதளங்களில் பரவ மதுரை தவெகவினர் அலறிவிட்டனர். ‘இல்லாத கேஸையெல்லாம் நம் மீது எழுத பார்க்கிறார்கள்’ என உஷாரானவர்கள் தவெக எம்.எல்.ஏ எஸ்.ஆர்.தங்கபாண்டியோடு சென்று அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கின்றனர்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

“காவல் நிலையத்தில் ரீல்ஸ் எடுக்க எந்த சட்டம் அனுமதி அளிக்கிறது?" – அதிமுக எம்பி இன்பதுரை கேள்வி

கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ் தனது அரக்கோணம் தொகுதிக்கு உட்பட்ட தக்கோலம்...

'என் அத்தை, கணவர் கொல்லப்பட்ட சம்பவங்களை என்னால் எழுதவே முடியவில்லை..!'- சோனியா காந்தி எமோஷனல்

காங்​கிரஸ் மூத்த தலை​வர் சோனியா காந்​தி​யின் வாழ்க்கை அனுபவங்​கள், ‘பிலாங்​கிங்: ஏ...

சோனியா காந்தி நூல் வெளியீட்டு விழா: ராகுல் காந்தி அருகில் விஜய்; பின் வரிசையில் டி.கே.சிவக்குமார்!

காங்​கிரஸ் மூத்த தலை​வர் சோனியா காந்​தி​யின் வாழ்க்கை அனுபவங்​கள், ‘பிலாங்​கிங்: ஏ...

சாட்ஜிபிடி மூலம் புத்தகங்கள்; ஒரே நாளில் ISBN பெற்ற நூல்கள், அதே நாளில் ஒப்புதல்! – FIR முழு விவரம்!

தமிழ்நாடு பொது நூலக இயக்ககம் மற்றும் கோவை பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட...