14
November, 2026

A News 365Times Venture

14
Saturday
November, 2026

A News 365Times Venture

ஆபாச மெசேஜ் விவகாரம்: "மாவட்ட ஆட்சியர் மௌனம் கலைக்க வேண்டும்" – டாக்டர் கிருஷ்ணசாமி

Date:

“அதிகாரங்களை கையில் வைத்துக் கொண்டு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் மௌனம் சாதிப்பது, தேவையற்ற விமர்சனங்களுக்கும் விவாதங்களுக்கும் வழிவகுக்கிறது” என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

டாக்டர் கிருஷ்ணசாமி

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு அப்பகுதியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியது குறித்து 10 நாட்களுக்கு மேலாக சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் பெரிதும் பேசும் பொருளாக மாறியிருக்கிறது.

இந்தச் செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில், நிச்சயமாகச் சம்பந்தப்பட்டவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆனால், 10 நாட்களுக்கு மேலாகியும், மாவட்ட ஆட்சியர் ஏன் மௌனம் காக்கிறார் என்பது தெரியவில்லை.

அவர் வெறும் மாவட்ட ஆட்சியர் மட்டுமல்ல, மாவட்டத்தின் மாஜிஸ்திரேட்டும் ஆவார். ஒருவேளை அந்தச் சட்டமன்ற உறுப்பினர் தனக்குத் தவறான அல்லது ஆபாசமான, சட்டவிரோதமான செய்தியை அனுப்பியிருந்தால், அவரே பரிந்துரைத்து வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதற்கான அத்தனை அதிகாரமும் அவரிடம் உண்டு.

அருள் விக்னேஷ்
அருள் விக்னேஷ்

இதற்காக அவர் காவல்துறையை அணுக வேண்டியதோ அல்லது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியமோ இல்லை. இவ்வளவு அதிகாரங்களை கையில் வைத்துக் கொண்டு அவர் மௌனம் சாதிப்பது, தேவையற்ற விமர்சனங்களுக்கும் விவாதங்களுக்கும் வழிவகுக்கிறது.

இதை தனி நபருக்கான பிரச்னையாகக் கருதக் கூடாது. ஒரு மாவட்ட ஆட்சியர் என்பவர் ஒட்டுமொத்த மாவட்ட நிர்வாகத்திற்கும் தலைமை தாங்குபவர். அவருக்கு ஒரு சிக்கல் ஏற்படுகிறது என்றால், அது மக்களுக்கான பிரச்னையாகவே கருதப்பட வேண்டும். எனவே, அவர் தொடர்ந்து மௌனம் காப்பது சரியல்ல. இப்பிரச்னைக்கு அவர் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

அவர் தனது மௌனத்தைக் கலைத்தால்தான், உண்மை என்ன என்பது நாட்டு மக்களுக்குத் தெரியவரும். இல்லையென்றால், ஊகங்களின் அடிப்படையில் யார்மீதாவது குற்றம் சாட்டுவதும் அல்லது நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவதும் தவறான முன்னுதாரணமாகிவிடும்.

எனவே, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் தனது மௌனத்தைக் கலைத்து, நடந்த சம்பவங்களின் உண்மை நிலையை பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்தி, ஊகங்களின் அடிப்படையில் விவாதமாகி வரும் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

“செஞ்சி சிறுமி காணாமல்போய் 35 நாள்கள் கடந்துவிட்டன; கேக் ஊட்டிக்கொண்டிருக்கிறார் முதல்வர்"- கனிமொழி

செஞ்சி பகுதியில் 7 வயது சிறுமி காணாமல் போன விவகாரத்தில் ஒரு...

தேசியவாத காங்கிரஸ் அணிகள் இணைப்பு? "அஜித்பவார் இறந்ததும் முடிந்துவிட்டது" – சுப்ரியாவின் பதில் என்ன?

முன்னாள் மத்திய அமைச்சர் சரத்பவார் தொடங்கிய தேசியவாத காங்கிரஸ் கடந்த 2023ம்...

திருப்பதி: 'ஒரு கிலோ முடி ரூ.84 ஆயிரம்' – பக்தர்கள் செலுத்திய முடி ரூ.119 கோடிக்கு விற்பனை

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் செல்பவர்கள் மொட்டை போட்டுக்கொள்வது வழக்கம். ஏழுமலையானைத் தரிசிக்க...

மேகதாது விவகாரம்: “தமிழ்நாட்டின் நீருரிமைக்கே அச்சுறுத்தல்; தவெக அரசு மௌனம் காக்கிறது!" – TRB ராஜா

கர்நாடக மாநிலம் மைசூரில் நடந்த அரசு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, கர்நாடகா...