14
November, 2026

A News 365Times Venture

14
Saturday
November, 2026

A News 365Times Venture

அயலக உதவித்தொகை திட்டம்: விமர்சித்த திமுக; விளக்கம் அளித்த சமூக நீதித்துறை!

Date:

தமிழ்நாடு அரசின் சமூகநீதி மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறையால் செயல்படுத்தப்படும் அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டம் வெளிநாடுகளில் முதுகலை மற்றும் முனைவர் (Ph.D) பட்டம் பயில விரும்பும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் இந்தாண்டு வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்ற 164 மாணவர்களில் 65 பேருக்கு மட்டுமே இதுவரை உதவித்தொகை விடுவிக்கப்பட்டு இருப்பதாக RTI மூலம் தகவல் வெளியாகி இருந்தது.

RTI

இதனைத் தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின், “அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் மீது த.வெ.க. அரசுக்கு ஏன் காழ்ப்பு?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

அதேசமயம் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், “சமூக நீதித்துறை என்று பெயர் மாற்றிவிட்டு, அண்ணல் அம்பேத்கர் பெயரிலான திட்டத்தைக் குழித்தோண்டி புதைக்கும் இந்த கோமாளி ஆட்சியாளர்களை வன்மையாக கண்டிக்கிறேன்” என்று காட்டமாக விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சமூக நீதித்துறை விளக்கம் அளித்திருக்கிறது. அமைச்சர் வன்னி அரசின் சமூக நீதித்துறை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ” சமூகநீதித் துறை, அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் 2026-27 ஆம் கல்வியாண்டிற்கான தற்போதைய நிலவரம்.

இத்திட்டத்தின் கீழ் இவ்வாண்டு (2026-27) மொத்தம் 366 மாணவர்களுக்கு உதவித்தொகை அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 165 மாணவர்கள் தாங்கள் சேர்க்கை பெற்ற வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் சேர்ந்துள்ளனர்.

உதயநிதி, ஸ்டாலின்
DMK: உதயநிதி, ஸ்டாலின்

மீதமுள்ள 201 மாணவர்கள் ஜனவரி / மார்ச் 2027-க்குள் சேர உள்ளனர். சேர்ந்த 165 மாணவர்களில் 140 பேர் சேர்க்கை விவரங்கள் மற்றும் பல்கலைக்கழக நிதிகேட்பு விவரங்களுடன் இணையதளத்தில் விண்ணப்பித்துள்ளனர்.

இவர்களில் 84 மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் மற்றும் பிற செலவுகளுக்கான கல்வி உதவித்தொகையாக ரூ.30.24 கோடி இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளது.

மீதம் 56 மாணவர்கள் இணையதளத்தில் விண்ணப்பித்துள்ளனர்; அவர்களுக்கான பல்கலைக்கழக வங்கிக் கணக்கு விவரங்கள் கோரப்பட்டுள்ளன.

25 மாணவர்கள் இதுவரை இணையதளத்தில் விண்ணப்பிக்கவில்லை. மாணவர்களை விரைவில் விண்ணப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

மாணவர்கள் வெளிநாடு புறப்படும் முன் விசா, விமானக் கட்டணம் மற்றும் கல்விக்கட்டண முன்பணம் போன்ற ஆரம்பச் செலவுகளைச் சமாளிக்க அரசு உதவுகிறது.

இதற்காக, நடப்பு ஆண்டில் தேர்வான மாணவர்களுக்கு தாட்கோ (TAHDCO) மூலம் 116 மாணவர்களுக்கு ரூ.9.50 கோடி சிறப்புக் கல்விக் கடன் வழங்கப்பட்டுள்ளது.

அண்ணல் அம்பேத்கர் கல்வி உதவித்தொகைத் திட்டத்தின்கீழ் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகையிலிருந்து தாட்கோவிற்கு ஈடுசெய்யப்படும்.

வன்னி அரசு
வன்னி அரசு

கல்வி உதவித்தொகை வழங்கும் முறை

கல்விக் கட்டணம் பல்கலைக்கழகக் கணக்கிற்கு நேரடியாக விடுவிக்கப்படுகிறது. மொத்த ₹36 லட்சம் வரம்பை மீறாத மீதமுள்ள தொகை (விமானக் கட்டணம், விடுதிக் கட்டணம், வாழ்க்கைச் செலவுகள் மற்றும் பிற அனுமதிக்கப்பட்ட செலவுகள்) மாணவர் கணக்கிற்கு விடுவிக்கப்படுகிறது.

அனைத்து உதவித்தொகைகளும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் பிரத்யேக இணையதளம் மற்றும் மாணவர்களுக்கான விளக்கங்களுக்கான பிரத்யேக மின்னஞ்சல் வாயிலாக செயலாக்கப்படுகின்றன. மாணவர்களுக்கான உதவித்தொகை விடுவிப்பில் எவ்வித தாமதமும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்” என்று அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

சிவகங்கை: துபாயில் தகவல் தொடர்பு துண்டிப்பு; கொல்கத்தாவில் வழிப்பறி- மீண்டது எப்படி? 18 நாள் திகில்!

வெளிநாட்டில் உழைத்துவிட்டுத் தாயகம் திரும்பும் ஆசையில் விமானம் ஏறக் காத்திருந்த கணவர்...

"Teleprompter பயன்படுத்திக் கொள்ளுங்கள்; உங்களுக்குப் பிடித்தவரே நடுவர்"- மோடிக்கு ராகுல் சவால்!

இந்திய பிரதமர் மோடி தன்னுடைய பேச்சுகளின் போது, டெலி பிராம்ப்டர் பயன்படுத்துகிறார்...

உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கே பிடியாணை: நீதித்துறையை அதிரவைத்த ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் காலமானார்

இந்திய நீதித்துறை வரலாற்றில் பதவியில் இருந்தபோதே உச்ச நீதிமன்றத்தால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவரும்,அதிரடியான...

இந்தியா வரவிருந்த நார்வே பத்திரிகையாளரின் விசா ரத்து; அரசியல் கட்சிகள் கண்டனம் – இதுதான் காரணமா?

நார்வே நாட்டை சேர்ந்த சுயாதீன பத்திரிகையாளர் ஹெல் லிங், இந்தியா வருவதற்கான...