12
November, 2026

A News 365Times Venture

12
Thursday
November, 2026

A News 365Times Venture

அன்று அனுதாபம், இன்று ஆடம்பரம் – கார் பயணத்தால் விமர்சனத்துக்குள்ளான தவெக MLA தென்றல் குமார்

Date:

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கே.வி.குப்பம் தொகுதி த.வெ.க எம்.எல்.ஏ தென்றல் குமார் வேட்டி, சட்டை சகிதம் காலில் செருப்புக்கூட அணியாமல் அனுதாப தோற்றத்தில் அரசுப் பேருந்தில் வலம் வந்துகொண்டிருந்தார்.

பதவியேற்பின்போதும், அரசுப் பேருந்தில் சென்ற அவர், `என்னிடம் மகிழுந்து இல்லை. நான் எளிய வீட்டுப் பிள்ளை’ என்று பேட்டிக்கொடுத்திருந்தார்.

அதை, சோகப் பின்னணி இசை கொடுத்து ஒரு தனியார் செய்தி சேனலும் அனுதாபம் ஏற்படுத்தும்வகையில் செய்தி வெளியிட்டது. அது சமூக வலைத்தளங்களில் படு வைரலாக, `த.வெ.க-வில் ஒரு காமராஜர்’ எனச் சிலர் தென்றல் குமாரின் வீடியோவைப் பரப்பினர்.

செருப்பு அணியாமல் அனுதாபத் தோற்றத்தில் தென்றல் குமார்

அதே நேரம், சொத்து விவரங்கள் வெளியாகி கடும் விமர்சனத்துக்கு ஆளானார் எம்.எல்.ஏ தென்றல் குமார். சம்பந்தப்பட்ட தென்றல் குமார் மற்றும் அவரின் மனைவியின் கையில் ரூ.17 லட்சம் ரொக்கம், 139 சவரன் தங்க நகைகள், ரூ.2.7 கோடிக்கு அசையும், அசையாச் சொத்துகள் இருப்பதாக அவரின் வேட்புமனுவுடன் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரம் வெளிப்படுத்தியது.

அப்போதும், `நான் எளிமையானவன்; ஆனா ஏழை அல்ல’ என்று ஆச்சர்யப்படும் அளவுக்கு விளக்கமொன்றையும் அளித்திருந்தார் தென்றல் குமார். விமர்சனங்கள் கட்டுக்கடங்காமல் வந்த பிறகும், காலில் செருப்பு அணியாமல் தொடர்ந்து தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் சோகமான பின்னணி இசையுடன் கூடிய வீடியோக்களைப் பகிர்ந்து வந்தார் தென்றல் குமார்.

காரில் பயணித்த தென்றல் குமார்
காரில் பயணித்த தென்றல் குமார்

இந்த நிலையில், சென்னை அடுத்த மாமல்லபுரம் தனியார் சொகுசு விடுதியில் நேற்று நடைபெற்ற த.வெ.க எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக காரில் வந்த எம்.எல்.ஏ தென்றல் குமாரின் வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கிண்டலாக விமர்சனம் செய்திருக்கிறது தி.மு.க ஐ.டி விங்.

அந்தப் பதிவில், “6 மாதங்களுக்கு முன்பு `என்னிடம் கார் இல்லை; என்னிடம் செருப்புக்கூட இல்லை’ என்று சட்டமன்ற வாசலில் கேமரா முன்பு ரீல்ஸ் போட்டவர் இன்று ரூ.50 லட்சம் மதிப்புள்ள காரில் வருகிறார். கேமரா முன்பு எப்படிப் பொய் பேச வேண்டும்; நடிக்க வேண்டும் என்பதை அனைவருக்கும் பாடம் எடுத்திருப்பார்போல’’ என்று குறிப்பிட்டிருப்பதால், எம்.எல்.ஏ தென்றல் குமார் மீண்டும் பேசுபொருளாகியிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

TVK MLA Meeting: "விஜய் அனல் கக்கினார் என Reels ஓட்டினால் மக்கள் மறந்துவிடுவார்களா?" – உதயநிதி

முதல்வர் விஜய் தலைமையில் தவெக எம்.எல்.ஏக்கள் கூட்டம் ஈ.சி.ஆரில் தனியார் ரெசார்ட்டில்...

'MLA மீது நடவடிக்கை எடுத்திருக்கனும், ஆனா தீபாவளிப் பரிசு கொடுத்து.!'-விஜய்யை விமர்சித்த ஸ்டாலின்

முதல்வர் விஜய் தலைமையில் தவெக எம்.எல்.ஏக்கள் கூட்டம் ஈ.சி.ஆரில் தனியார் ரெசார்ட்டில்...

FIIs தொடர் முதலீடு: வரிக் குறைப்பிற்காக நிபுணர்கள் செய்த 'லாபி' – பிரவீன் சக்கரவர்த்தி குற்றச்சாட்டு

இந்த நவம்பர் மாதம் தொடங்கியதிலிருந்து வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (FIIs) இந்தியாவில்...