10
November, 2026

A News 365Times Venture

10
Tuesday
November, 2026

A News 365Times Venture

'ஆளுங்கட்சி MLA-க்களின் attrocity-யால் சாமானிய முதல் பெண் IAS வரை பாதிக்கப்படுறாங்க'- உதயநிதி

Date:

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், மதுபோதையில் அவரது வீட்டுக்குச் சென்று தொந்தரவு செய்ததாகவும் தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது புகார் எழுந்துள்ளது.

ஆனால் ஆட்சியருக்கு எதிராக புகார் அளித்ததால் தன் மீது தவறான தகவல் பரப்புவதாக தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கூறியிருக்கிறார்.

இந்தச் சம்பவத்தில் அருள் விக்னேஷிற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினும் தனது கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறார்.

கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ” சட்டம் ஒழுங்கு சீர்கேட்டையும் – தன் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆட்டத்தையும் எப்போது கட்டுப்படுத்துவார் டம்மி CM?

தமிழ்நாட்டில் இதுவரை இல்லாமல் இருந்த துப்பாக்கி கலாச்சாரத்தை இந்த சோப்ளாங்கி ஆட்சியாளர்கள் கொண்டு வந்துவிட்டார்கள்.

குடியாத்தம் அருகே ஞானவேல் என்பவர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

ஒரே நாளில் 9, 11, 13 என நிமிடத்துக்கு நிமிடம் கொலைகளின் எண்ணிக்கை ஏறிக்கொண்டே போவதை பார்த்து தமிழ்நாடே பதறினால் – அதெல்லாம் ‘பண்டிகை காலக் கொலைகள்’ என்கிறது வெட்கங்கெட்ட அரசு.

நுங்கம்பாக்கத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தை ‘எரியும் பொருள்’ என்கிறது காவல்துறை.

குற்றச்சம்பவங்களை Cover Up செய்ய, இவர்கள் வைக்கும் பெயர்களைக் கொண்டு தனி dictionary-ஏ போடலாம்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

தேனியில் காவலர் கொல்லப்பட்ட சம்பவத்தில், பணியில் இருந்த போது கொல்லப்பட்டார் என்று Dummy CM-ம், பணியில் இல்லாத போது கொல்லப்பட்டார் என்று CM-ன் காவல்துறையும் முரண்பட்ட அறிக்கைகளை விடுகின்றனர்.

மிரட்டல் – அடிதடி – கட்டப்பஞ்சாயத்து – கமிஷன் – பாலியல் தொல்லை என ஆளுங்கட்சி MLA-க்களின் attrocity-யால் சாமானியர் முதல் பெண் IAS அதிகாரி வரை பாதிக்கப்படுகிறார்கள்.

இது எதற்கும் வாயை திறக்காமல், பொறுப்பேற்காமல், Sleep Mode-இல் இருக்கும் முதலமைச்சர், உடனே விழித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று விமர்சித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

‘தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு ஐசியுவிலும், ஆட்சி நிர்வாகம் கோமாவிலும் உள்ளது'- ஸ்டாலின் விமர்சனம்

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு ஐசியூவிலும், ஆட்சி கோமாவிலும் உள்ளதாக தவெக அரசை திமுக...

`அரசு அதிகாரியோ… சாதாரண பெண்ணோ… தமிழ்நாட்டில் பாதுகாப்பே இல்லை..!' – கனிமொழி சாடல்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், போதையில் அவரது...

ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ்? “யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்" – அமைச்சர் ராஜ்மோகன்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், போதையில் அவரது...

"நான் பேசியது தவறாகப் புரிந்துக்கொள்ளப்பட்டது" – சர்ச்சை பேச்சுக்கு அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்

தமிழ்நாட்டில் தீபாவளி அன்று மட்டும் 12 கொலைகள் அரேங்கேறிய சம்பவம்...