10
November, 2026

A News 365Times Venture

10
Tuesday
November, 2026

A News 365Times Venture

மாவட்ட ஆட்சியருக்கு TVK MLA ஆபாசக் குறுஞ்செய்தி? "என்ன பதில் சொல்லப் போகிறீர்கள் விஜய்?" – கனிமொழி

Date:

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், போதையில் அவரது வீட்டுக்குச் சென்று தொந்தரவு செய்ததாகவும் சமூக வலைத்தளப் பதிவில் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

இது தொடர்பாக தலைமைச் செயலரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக திமுக எம்.பி கனிமொழி தன் எக்ஸ் பக்கத்தில், “கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், மதுபோதையில் அவரது வீட்டுக்கே சென்று தொந்தரவு செய்ததாகவும், இதைத் தொடர்ந்து ஆட்சியருக்குத் தனிப் பாதுகாப்பு அதிகாரி நியமிக்கப்பட்டதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வருகின்றன.

அருள் விக்னேஷ்

இந்தத் திறனற்ற தவெக ஆட்சியில், தமிழ்நாடு முழுவதும் கொலை, கொள்ளை என அடுத்தடுத்து நடக்கும் குற்றச்சம்பவங்களால் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. இப்போது தவெக எம்.எல்.ஏ. ஒருவரால் மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

அப்படியிருக்க, தனிப் பாதுகாப்பு அதிகாரியை நியமிப்பதன் மூலம் மட்டும் தலைமைச் செயலாளர் அந்த ஆட்சியருக்கு என்ன பாதுகாப்பைக் கொடுத்துவிடப் போகிறார்? முதலமைச்சர் அவர்களே, இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'நாளைக்கு எல்லாரும் சென்னையில இருக்கணும்!' – எம்.எல்.ஏக்களுக்குத் திடீர் அழைப்பு விடுத்த விஜய்!

தவெக எம்.எல்.ஏக்கள் அத்தனை பேரையும் திடீர் ஆலோசனை கூட்டத்திற்காக நாளை சென்னை...

பயிர்க் கடன் பெறுவதில் சிக்கல்… புதிய நிபந்தனைகளால் பரிதவிக்கும் குத்தகை விவசாயிகள்!

அனைவருக்கும் பசுமை வணக்கம்!தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த விவசாயிகளில் சுமார் 40 சதவிகிதத்தினர் குத்தகை...

"அடுத்த ஆண்டு ரூ.10,000 கோடி பட்டாசு விற்பனை – மாபெரும் இலக்கு" – அமைச்சர் கீர்த்தனா

இந்த ஆண்டு (2026) தீபாவளியையொட்டி ரூ.7,000 கோடிக்கு பட்டாசு விற்பனை ஆகியுள்ளதாக...

ஈரான் போரின் அடுத்த கட்டம்: ட்ரம்பிற்கு '2 நாள் திட்டத்தை' பரிந்துரைக்கும் ஈரான் – அது என்ன?

அமெரிக்க மக்கள் ஈரான் போரில் கடும் அதிருப்தியில் உள்ளனர். அதன் விளைவாகவே,...