7
November, 2026

A News 365Times Venture

7
Saturday
November, 2026

A News 365Times Venture

‘சண்டியர் என படம் எடுத்தால் கமல்ஹாசன் தமிழகத்தை விட்டே ஓட வேண்டியிருக்கும்’ – டாக்டர் கிருஷ்ணசாமி!

Date:

கோவை குனியமுத்தூரில் பகுதியில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மூத்த நடிகரும், அரசியல் கட்சி தலைவருமான கமல்ஹாசன்  புதிதாக எடுக்கும் படத்திற்கு சண்டியர் என பெயர் சூட்டி இருக்கின்றார். 2003ல் இதே பெயரை வைத்த போது இரு சமூகங்களிடம் பிரச்சினையை ஏற்படுத்தியது. இந்த தலைப்பை கைவிட கூறி நாங்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவுரையை ஏற்று சண்டியர் படப்பெயரை கமலஹாசன் கைவிட்டார். இப்போது 

23 வருடங்கள் கழித்து சண்டியர் என அதே பெயரில் படம் எடுப்பதாக கமலஹாசன் சொல்லி இருக்கிறார். பிறந்தநாளில் நல்ல செய்திகளை சொல்லுவார்கள், ஆனால் கமல்ஹாசன் பிறந்த நாளிலேயே, பழிக்கு பழி எனஆரம்பித்து இருக்கிறார். அன்று கமல் சாதாரண நடிகர், இன்று நாடாளுமன்ற உறுப்பினர் , அரசியல் கட்சி தலைவர், அவருக்கு இன்று நிறைய பொறுப்புகள் இருக்கின்றது. சாதிய மோதலை தூண்டக் கூடிய வகையில் அமைந்த பெயர் அது. இரத்தத்தின் கடனை ரத்தத்தால் தீர்ப்போம் என கூறி இருக்கின்றார். உலகின் அனைத்து தலைவர்களும், ஞானிகளும் சொன்ன கருத்துக்கு எதிராக இந்த பெயர் வைத்துள்ளார். அந்த பெயரில் தமிழகத்தில் அவர் படத்தை எடுக்கவும் முடியாது, படத்தை ஒட்டவும் முடியாது. ஏற்கனவே நிராகரிக்கப்பட்ட பெயரை அனுமதித்து தயாரிப்பாளர் சங்கத்தின் தவறு. முதல்வர் விஜய் கமலஹாசனை அழைத்து ஜெயலலிதாவை போல உரிய அறிவுரை சொல்ல வேண்டும்.

டாக்டர் கிருஷ்ணசாமி

தென்மாவட்டங்களில் 1995 போன்ற கலவரங்கள் ஏற்பட்டால் பிரச்சினையாகும். அமைதியை சீர் குலைக்கும் முயற்சியாகவே இந்த சண்டியர் படம் இருக்கிறது. கதை எல்லாம் தேவை இல்லை, சண்டியர் என்ற பெயரே சிக்கல், அந்த பெயர் சாதி வெறியை தூண்டுகிறது. படத்தை எடுக்க முடியாது, படத்தை எடுக்க விடமாட்டோம், அனைத்து வழிகளிலும் போராடுவோம். கமல்ஹாசனுக்கு தலை எல்லாம் மூளை, மூளையில் வஞ்சனை இருக்கிறது. இரு சமூகம் அமைதியாக இருக்கும் போது, யாரோ அவரை தூண்டுகிறார்கள். அதை காவல் துறையினர் விசாரிக்க வேண்டும்.

கமலஹாசன் சண்டியர் என்ற இந்த படத்தை எடுத்தால் அவர் தமிழகத்தை விட்டே ஓட வேண்டி இருக்கும். சிறந்த நடிகராக இருக்கலாம், ஆனால் அவர் ஒரு பொறுப்பற்ற நடிகர். சண்டியர் படம் பாதிப்பை, பிரிவினையை, சாதி வெறியை தூண்டும். தலைப்பை கொடுத்தது தயாரிப்பாளர் சங்கம். முதலில் அவர்களை சந்திப்போம், பின்னர் அடுத்தடு்த்து நடவடிக்கைகள் இருக்கும். ஆறிய புண்ணை கமலஹாசன் கீறி விடுகிறார்” எனத் தெரிவித்தார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

ஒன்றிய – மாநில உறவுக் குழு கலைப்பு: "அதிகாரச் சமத்துவத்திற்கு பேரிழப்பு" – சு.வெங்கடேசன் கண்டனம்

கடந்த திமுக ஆட்சியில் ஒன்றிய-மாநில உறவுகளை ஆராய ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற...

உயர்மட்ட குழு கலைப்பு: "தவெக அரசின் சின்ன புத்தி கடும் கண்டனத்திற்குரியது"- திமுக அறிக்கை

கடந்த திமுக ஆட்சியில் மத்திய-மாநில அரசுகளின் உறவு மற்றும் சட்ட வரம்புகளை...

'சண்டியர்': பிடிவாத கமல்… பின்வாங்காத கிருஷ்ணசாமி; சாதி அரசியலாக்காதீர்கள்! – கமல் தரப்பு

22 வருடங்களுக்குப் பிறகு 'சண்டியர்' படத் தலைப்பு மீண்டும் சர்ச்சையாகியிருக்கிறது!நடிகர் கமல்ஹாசன்...

"சினிமா ஷூட்டிங் போல மேக்கப் போட்டு நூலகத்தை திறந்து வைத்தால் போதுமா?"- எடப்பாடி விமர்சனம்

பெரியார் நூலகப் புத்தகக் கொள்முதல் முறைகேடு யார் ஆட்சியில் நடந்தது என்பது...