6
November, 2026

A News 365Times Venture

6
Friday
November, 2026

A News 365Times Venture

மோடி வெற்றி; ட்ரம்ப் தோல்வி: இந்திய ஜனநாயகம், அமெரிக்க ஜனநாயகம் – பிரவீன் சக்கரவர்த்தி ஒப்பீடு

Date:

அமெரிக்க மிட் டேர்ம் தேர்தலில் ட்ரம்ப் கட்சி (குடியரசுக் கட்சி) பின்னடைவைச் சந்தித்துள்ளது.

இதை இந்திய ஜனநாயகத்தோடு ஒப்பிட்டு இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் பிரவீன் சக்கரவர்த்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“அமெரிக்க ஜனநாயகம்:

ட்ரம்ப் கோவிட் சூழலைச் சரியாகக் கையாளவில்லை → மக்கள் துயரப்படுகிறார்கள் → அடுத்த தேர்தலில் ட்ரம்ப் தோற்கடிக்கப்படுகிறார்.

பிரவீன் சக்கரவர்த்தி பதிவு

பைடன் பொருளாதாரத்தைச் சீர்குலைக்கிறார் → 40 ஆண்டுகளில் இல்லாத உச்சக்கட்ட பணவீக்கம் உயர்கிறது → பைடன் ஆட்சியில் இருந்து தூக்கியெறியப்படுகிறார்.

ட்ரம்ப், ஈரான் போரைத் தொடங்குகிறார் → பெட்ரோல்/கேஸ் விலைகள் ~40% உயர்கின்றன → ட்ரம்பின் கட்சி கொடூரமான தோல்வியைச் சந்திக்கிறது.

இப்படித்தான் ஜனநாயகம் இயங்க வேண்டும்.

மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டால் → ஆட்சியில் இருப்பவர்கள் தேர்தலில் தோற்கடிக்கப்பட வேண்டும்.

இந்திய ‘ஜனநாயகம்’:

மோடி பணமதிப்பிழப்பை அறிவிக்கிறார் → 15 லட்சம் இந்தியர்கள் வாழ்வாதாரத்தை இழக்கிறார்கள், பொருளாதாரம் சீர்குலைகிறது → அதைத் தொடர்ந்து வந்த உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட் தேர்தல்களில் பாஜக வெற்றி பெறுகிறது.

மோடி கோவிட் சூழலைச் சரியாகக் கையாளவில்லை → 47 லட்சம் இந்தியர்கள் உயிரிழக்கிறார்கள் → பீகார், குஜராத் தேர்தல்களில் பாஜக வெற்றி பெறுகிறது.

மோடி பொருளாதாரத்தைச் சீர்குலைக்கிறார் → நாட்டின் வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு இளைஞர்களின் வேலையின்மைத் திண்டாட்டம் உயர்கிறது → 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெறுகிறது”.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

போராடும் மீனவர்கள்; மனம் மாறாத முதல்வர் விஜய்? – பட்டினப்பாக்கத்தில்தான் புதிய தலைமைச் செயலகம்!

சென்னை பட்டினப்பாக்கத்தில் கடலுக்கே அருகே புதிய தலைமைச் செயலகத்தை கட்ட மீனவர்கள்...

“இடைத்தேர்தலே அறிவிக்கப்படல; இப்போதே விஜயபாஸ்கர் பணப்பட்டுவாடாவை ஆரம்பிச்சிட்டார்" – ரகுபதி தாக்கு

முன்னாள் அமைச்சர் ரகுபதி இடைத்தேர்தலே அறிவிக்கல. இப்போதே பணப்பட்டுவாடாவை ஆரம்பிச்சுட்டாங்க. இதுதான்...

`அடித்து ஆடும் ஸ்டாலின்… அறிக்கை மோடில் உதயநிதி!' – கொதிக்கும் உடன்பிறப்புகள்!

த.வெ.க-வுக்கு எதிர் அரசியல் செய்வதில் தி.மு.க தலைவர் பட்டாசாய் வெடித்துவரும் நிலையில்...

நெல்லை: தாமிரபரணி ஆறு, கால்வாய்களில் திட்டப் பணிகள்; ஆய்வு செய்த நிதி அமைச்சர் மரிய வில்சன் | Photos

'சாப்பாடு சரியில்லை என்பதற்காக ஜாமீனா?'- அன்பில் மகேஸ் குறித்து மரிய வில்சன்...