4
November, 2026

A News 365Times Venture

4
Wednesday
November, 2026

A News 365Times Venture

கேரளம்: "அதிக விலைக்கு மின்சாரம் வாங்க அவசரம் காட்டுவது ஏன்?"- பினராயி விஜயன் கேள்வி

Date:

கேரளத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன் ஒரு பாகமாக கேரள மின்சார வாரியத் தலைவராக இருந்த ராஜமாணிக்கம் ஐ.ஏ.எஸ் மாற்றப்பட்டு, புதிய தலைவராக பிரசாந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.

கேரளத்தில் நிலவும் மின் தட்டுப்பாட்டைப் போக்க, மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் வழித்தட அணுகல் கட்டமைப்பின் கீழ் வெளிமாநிலத் தனியார் இடைத்தரகு நிறுவனம் ஒன்றிடமிருந்து யூனிட் ரூ.8.63 என்ற வீதத்தில் 500 மெகாவாட் மின்சாரம் வாங்குவதற்கு அரசு மட்டத்தில் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனால், அதிக மின் நுகர்வு இல்லாத பகல் நேரங்களிலும் கூட யூனிட்டுக்கு ரூ.8.63 வீதம் தொடர்ந்து மின்சாரத்தைக் கட்டாயம் வாங்க வேண்டும் என்ற கடுமையான நிபந்தனை இதில் உள்ளது.

இதனால் அரசுக்குத் தேவையின்றி ரூ.727 கோடி முதல் ரூ.903 கோடி வரை கூடுதல் இழப்பு ஏற்படும் என்று கணக்கிடப்பட்டது. மேலும், உச்சக்கட்ட மின்தேவை நேரங்களில் இந்நிறுவனம் வழங்கும் மின்சாரம் போதாமல் போனால், வெளிச்சந்தையில் யூனிட் ரூ.20 வரை கூடுதல் விலை கொடுத்து மீண்டும் மின்சாரம் வாங்க வேண்டிய சூழல் உருவாகும். மாநிலத்தின் மின் தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்ய ஹிமாச்சலப் பிரதேச அரசின் பொதுத்துறை நிறுவனத்திடமிருந்து யூனிட் ரூ.12.50 என்ற வீதத்தில் தடையில்லா மின்சாரம் பெற வாய்ப்பு இருந்தும், அதை வேண்டுமென்றே அரசு புறந்தள்ளிவிட்டுத் தனியாருக்குச் சாதகமாகச் செயல்பட்டதாகப் புகார்கள் எழுந்தன.

இந்தத் தனியார் ஒப்பந்தத்தால் அரசுக்கு ஏற்படவுள்ள நிதி இழப்புகள் குறித்து மின்வாரியத் தலைவராக இருந்த எம்.ஜி. ராஜமாணிக்கம் விளக்கமாக அறிக்கையளித்தார். இதைத்தொடர்ந்து முதல்வர் அலுவலகமும் தலைமைச் செயலாளரும் கொடுத்த அழுத்தம் காரணமாகவே அவர் பதவியிலிருந்து பழிவாங்கும் நோக்குடன் மாற்றப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐ.ஏ.எஸ் அதிகாரி ராஜமாணிக்கம்

இதற்கு சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பினராயி விஜயன் கூறுகையில், “மின்சார நெருக்கடியைப் பயன்படுத்தி மாநிலத்தில் மாபெரும் ஊழலை அரங்கேற்ற அரசு மட்டத்தில் பகிரங்க முயற்சி நடப்பதாக வெளியாகும் தகவல்கள் கவலை அளிக்கிறது. முறையான தலையீடுகள் மற்றும் திறமையான நிர்வாக அணுகுமுறைகள் மூலம் இந்த மின் நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்குப் பதிலாக, எந்தவித நியாயமுமற்ற ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மாநிலக் கஜானாவைக் கொள்ளையடிக்கும் முயற்சிகள்தான் இப்போது தீவிரமாக நடக்கின்றன.

குறைந்த செலவில் மின்சாரம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருந்தபோதும், மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் முன் அனுமதியின்றி தனியார் நிறுவனத்திடமிருந்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்க அவசரம் காட்டப்படுகிறது. பகல் நேரங்களில் கூட இந்த மின்சாரத்தை வாங்குவதால் மாநில அரசுக்கு ரூ.727 கோடிக்கு மேல் கூடுதல் நிதிச்சுமை ஏற்படும். இதற்கு வாரியமும் துறை அமைச்சரும் ஆரம்பத்திலேயே எதிர்ப்புத் தெரிவித்தும், முதல்வர் அலுவலகத்தின் நேரடித் தலையீட்டின் மூலம் அதிகாரிகளை அச்சுறுத்தி, அழுத்தம் கொடுத்து ஒப்பந்தத்தை முன்னெடுத்துள்ளனர்.

பினராயி விஜயன்

இந்த ஊழல் ஒப்பந்தத்திற்குத் துணைநிற்காத நேர்மையான அதிகாரிகளைப் பழிவாங்கும் நோக்குடன் பதவியிலிருந்து அரசு விரட்டியடித்திருப்பது மன்னிக்க முடியாத குற்றமாகும். பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்து மட்டுமே மின்சாரம் கொள்முதல் செய்யப்படும் என்று மின்சாரத் துறை அமைச்சர் முன்னர் அளித்த உறுதிமொழி இப்போது காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது.

மக்கள் வரிப்பணத்தைச் சூறையாடும் வகையில் தனியார் நிறுவனங்களுடன் போடப்படும் இந்தத் திரைமறைவுப் பேரங்கள் உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இந்தச் சர்ச்சைக்குரிய ஒப்பந்தம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும், மின்வாரியத் தலைவர் பதிவுசெய்த முழுமையான ஆட்சேபனை கருத்துக்களையும் பொதுமக்களின் பார்வைக்கு அரசு உடனடியாக வெளியிட வேண்டும்” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

மணப்பாறை: வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தொடரும் போக்குவரத்து நெரிசல் – பொதுமக்கள் கடும் அவதி!

காவல் நிலையத்தில் பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வழக்குகளில் தொடர்புடைய வாகனங்களை...

"20 சதவீத கமிஷன் பெற ‘வெற்றி கமிஷன் திட்டத்தை’ தவெக அரசு தொடங்கியுள்ளதா?" – டிடிவி காட்டம்

ஊழலை ஒழிக்க வந்ததாகக் கூறிக்கொள்ளும் தூய சக்தி, 20 சதவீத கமிஷன்...

ஆக்கிரமிப்பை அகற்றாத மும்பை மாநகராட்சி; கமிஷனரின் சம்பளத்தை நிறுத்தி வைத்து சுப்ரீம் கோர்ட் அதிரடி

மும்பை புறநகர் பகுதியில் உள்ள போரிவலி என்ற இடத்தில் மாநகராட்சி பஸ்...

புதிய தலைமைச் செயலகம்: "கருத்துக்கேட்புக் கூட்டத்தை மறைமுகமாக நடத்துவதா?"- சீமான் கேள்வி

"கருத்துக்கேட்புக் கூட்டத்தையே மறைமுகமாக நடத்துவதா? மீனவ மக்களின் எதிர்ப்பைப் புறந்தள்ளி பட்டினப்பாக்கத்தில்...