31
October, 2026

A News 365Times Venture

31
Saturday
October, 2026

A News 365Times Venture

`சிறை சோதனைக்காகக் காத்திருந்த வேளை.!' – கோவை மத்திய சிறையில் இருந்து தப்பிய விசாரணைக் கைதி யார்?

Date:

கோவை சிறையில் இருந்து ஒரு விசாரணைக் கைதி தப்பி ஓடியுள்ளார்.

கோவை அன்னூர் காவல் நிலையத்தில் வழிப்பறி வழக்கு ஒன்றில் நேற்று (அக்டோபர் 30) கைது செய்யப்பட்டவர் ராகவன். இவர் ஈரோட்டைச் சேர்ந்தவர் ஆவார். இவர் மீது பல திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகள் உள்ளன.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திக் கோவை மத்திய சிறையில் அடைக்க இவரை நேற்று அழைத்துச் சென்றிருக்கின்றனர் போலீசார்.

அங்கே சிறையில் சோதனைக்காகக் காத்திருக்க வைத்திருந்த இடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளார் ராகவன்.

கைதி ராகவன்

நேற்று இரவு முதல் ராகவனைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இந்த வாரத்தின் தொடக்கத்தில் தான், தேனி தேக்கம்பட்டி துணைச் சிறையில் இருந்து 17 விசாரணைக் கைதிகள் தப்பி ஓடினர்.

அந்த 17 பேரையும் இப்போது போலீசார் பிடித்துவிட்டனர்.

சிறையில் இருந்து 17 பேர் எப்படித் தப்பிச் சென்றனர் என்கிற அதிர்ச்சியே இன்னும் அடங்காத நிலையில், இன்று கோவை சிறையில் இருந்து ஒரு கைதி தப்பி ஓடியுள்ளார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

ஏக்நாத் ஷிண்டேயுடன் பிணக்கு: தாக்கரே சகோதரர்களுடன் நெருக்கம் காட்டும் தேவேந்திர பட்னாவிஸ்

மகாராஷ்டிராவில் கடந்த 2022ம் ஆண்டு சிவசேனா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே...

சிதம்பரம்: `நடராஜர் கோயில் தீட்சிதர்கள் கணக்கு காட்டவில்லை!’ – நிர்வாகக் குழு அமைத்த உயர் நீதிமன்றம்

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் அமைந்திருக்கும் நடராஜர் கோயிலில் கனகசபை மீது நின்று...

“பிரேக்அப் ஆனதும், சம்மத உறவுக்கு பாலியல் வன்கொடுமை முத்திரை குத்தாதீர்கள்" – சுப்ரீம் கோர்ட்

காதல் உறவு கசக்கும்போது ஆண்களுக்கு எதிராக பெண்கள் பாலியல் வன்கொடுமை புகார்...

'மருத்துவமனையில் 50 நாட்களை கடந்த வி.எஸ்.பாபு!' – அப்டேட் கொடுக்காத அரசு!

கொளத்தூர் தவெக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 50...