30
October, 2026

A News 365Times Venture

30
Friday
October, 2026

A News 365Times Venture

தூத்துக்குடியில் 4 நாள்களில் 7 கொலைகள்: "காவல்துறையை நிர்வகிக்கத் தெரிந்தவரிடம் ஒப்படைங்க" – கனிமொழி

Date:

தூத்துக்குடி கந்தன் காலனியில் வசித்த சசிகலா என்பவரை அவரது வீட்டிற்குள்ளேயே கொலை செய்துள்ளனர்.

தமிழ்நாட்டில் தொடரும் கொலை சம்பவங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்துத் திமுக தலைவர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“தூத்துக்குடி கந்தன் காலனியில் வீட்டில் தனியாக இருந்த சசிகலா எனும் பெண்மணி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடியில் 4 நாட்களில் 7 கொலைகள்! இதற்கு என்ன விநோத விளக்கத்தை மாவட்டக் காவல்துறையினர் வெளியிடப் போகின்றனர்?

ஸ்டாலின் பதிவு
கனிமொழி பதிவு
கனிமொழி பதிவு

வெளியில்தான் பாதுகாப்பில்லை, நிம்மதியாக யாரும் நடமாட முடியவில்லை என்று பார்த்தால், வீட்டுக்குள் இருக்கவே அச்சமடையும் நிலைக்கு மக்களைத் தள்ளியதுதான் த.வெ.க.வின் சாதனையா?”

தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியின் கண்டனப் பதிவு:

“நேற்றைய தினம் தூத்துக்குடி கந்தன் காலனியில், வீட்டில் தனியாக இருந்த சசிகலா என்ற பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

நான்கு நாட்களில் ஏழு கொலைகள் எனத் தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

‘முத்துநகரம்’ என்று அழைக்கப்படும் தூத்துக்குடியை, ‘கொலை நகரம்’ என்று அழைக்கும் நிலைக்குக் கொண்டு செல்கிறது த.வெ.க. அரசு.

மீண்டும் சொல்கிறேன்… முதலமைச்சர் விஜய் அவர்கள் மக்கள் மீது கருணை காட்டி, காவல்துறையை நிர்வகிக்கத் தெரிந்த ஒருவரிடம் அதன் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும்!”

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

அன்பில் கைது, ஏக குஷியில் திமுக-வினர் பசும்பொன் பயணம் – 'நோ' சொன்ன முதல்வர் அலுவலகம் | கழுகார்

சிக்கிய தி.மு.க., த.வெ.க புள்ளிகள்!போதைப்பொருள் விற்பனையில் கூட்டணி...நீலகிரி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த...

முதல்வர் விஜய் புதுக்கோட்டை பயணம்: 'தனி விமானம், ரோடு ஷோ, திறப்பு விழா…' – விழா ஏற்பாடுகள் தீவிரம்

தமிழக முதலமைச்சர் விஜய், வரும் நவம்பர் 2-ந்தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு முதன்முறையாக...

சென்னை: மணல் கொள்ளையால் அரசுக்கு வருவாய் இழப்பு – லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் குற்றச்சாட்டு!

தமிழகம் முழுவதும் அரசே மணல் குவாரிகளை நடத்தி வந்தது. மணல் குவாரிகளில்...