29
October, 2026

A News 365Times Venture

29
Thursday
October, 2026

A News 365Times Venture

`ஜீரோ கட்சின்னு சொல்றாங்க… அம்பாசமுத்திரத்துல பொது வேட்பாளரா களமிறங்குறேன்!' – சீமான்

Date:

அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் தான் போட்டியிடப் போவதாக நாம் தமிழர் கட்சியினர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்திருக்கிறார்.

நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், “தமிழ்நாடு ஏற்கெனவே கடும் கடன் சுமையில் இருக்கும்போது, இப்போது வந்த அரசும் சுமார் ரூ.60,000 கோடி வரை கடன் வாங்கியிருக்கிறது. இதற்கு நடுவே தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம் வேறு கொண்டுவந்திருக்கிறது. ஆனால், டாஸ்மாக் மூலம் பல லட்சம் தாலியை அறுப்பதும் இதே அரசுதான். சிங்கப் பெண் படை இருக்கிறது.

`சிங்கப்பெண் படை’

ஆனால் காணாமல் போன சிறுமியைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறுகிறார்கள். வீட்டுக்குள் புகுந்து தாயைக் கொன்று மகள்களைக் கடத்திச் செல்கிறார்கள். அவ்வளவு ஏன் தவெக கட்சி நிர்வாகிகளே பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவதாக புகார்கள் வந்திருக்கின்றன. ஆனால் இந்தச் சிங்கப்பெண் படை எங்கே போனது என்றே தெரியவில்லை. வெற்று அறிவிப்புகள்… ஆனால் ஒவ்வொரு திட்டத்துக்கு முன்பும் வெற்றி வெற்றி எனச் சேர்த்துக்கொள்கிறார்கள்.

இந்த முதல்வரைப் பெருமைப்படுத்த காமராஜர் ஆட்சிபோல இருக்கிறது என என் தாத்தனை இழிவுபடுத்துகிறார்கள். அவர் ஆட்சி இப்படித்தான் இருந்ததா என்பதை மனசாட்சி இருக்கும் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும். பல கோடி ரூபாய்க்கு விளம்பரம் மட்டும் பதாகைகளாக தொங்குகிறது. இந்த ஆட்சியில் தேனி சிறையில் இருந்தவர்கள் தப்பித்தார்கள். நாம் திறந்தவெளிச் சிறையில் இருப்பதால் நம்மால் தப்பிக்க முடியவில்லை. மாற்றம் என்பது எது? 60 ரூபாய்க்கு விற்ற அரிசி ரூ150-க்கு விற்கப்படுகிறதே… இதுதான் மக்கள் எதிர்பார்த்த மாற்றமா? இடைத்தேர்தலில் முதல்வர் பாதையில் குறுக்கிட்டார் என்பதற்காக கைதுசெய்வது எப்படி ஜனநாயகமாகும்?

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

இடைத்தேர்தல் பிரசாரத்துக்கு பறந்து வந்தது ஃபிளைட்டில், வந்து இறங்கியது ஹெலிகாப்டரில், ஓட்டியது மாட்டுவண்டி. இதுதான் இந்த நாட்டின் தேர்தல். முதல்வராகுவதற்கு முன்பு மக்களோடு மக்களாகப் பயணித்தவர் இப்போது தனி விமானத்தில் பயணிக்கிறார் என்றால்… இது யாருடைய பணம்? பலநூறு கோடியில் பேரிகாட் எதற்கு? எந்தக் கேள்வியும் கேட்கக் கூடாதா? நான் ஒரு இடத்தில்கூட வெற்றிப் பெறவில்லை என்கிறார்கள். ஜீரோ கட்சி என்கிறார்கள். அப்படி என்றால் என்னைப் பார்த்து ஏன் பயம்?

ஆப்கானிஸ்தானிலிருந்து மூலப்பொருள் கொண்டுவந்து, நாகப்பட்டினத்தில் மெத்தபட்டமைன் எனும் போதைப்பொருள் செய்யப்படுகிறது என்றால், இதற்குப் பின்னணியில் எவ்வளவு பெரிய நெட்வொர்க் இருந்திருக்கும்? ஆனால் ஒரு சிலர் மீது மட்டும் நடவடிக்கை எடுத்து, இந்த வழக்கை மூடுவது என்பது மக்களை ஏமாற்றுவதாக ஆகாதா? அம்பாசமுத்திரத்தில் நான் பொது வேட்பாளராக போட்டியிடுகிறேன். பொது வேட்பாளர் என்றால்…

சீமான்
சீமான்

இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர், விலங்குகள், பறவைகள் என எல்லா உயிர்களுக்குமான பொது வேட்பாளராகப் போட்டியிடுகிறேன். நாம் தமிழர் கட்சி கருத்தியல் ரீதியாக போர் செய்யும் கட்சி. எல்லாத் தேர்தலிலும் நாங்கள் தொடந்து சமர் செய்துகொண்டே இருக்கிறோம். மாற்று அரசியலை முன்னிறுத்தி 14 ஆண்டுகளாகப் பயணித்து வருகிறோம். திடீரென வந்த தவெக மாற்று அரசியல் என்றக் கோட்பாட்டை எடுத்துக்கொண்டு களத்தில் இறங்கி அறுவடை செய்துகொண்டது அவ்வளவுதான். ஆனாலும் தொடர்ந்து போராடுவோம்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

கே.என்.நேரு வீட்டில் மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு; பரபரக்கும் திருச்சி மாவட்ட திமுக!

தி.மு.க முதன்மைச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேருவின் திருச்சி தில்லை நகரில்...

`ரூ.5,000 கோடி நிதி மோசடி செய்த பிரேம் குமாருக்கும் முதல்வருக்கும் என்ன தொடர்பு?' – உதயநிதி கேள்வி!

ரூ.5,000 கோடி நிதி மோசடி செய்த பிரேம் குமாருக்கும் முதல்வருக்கும் என்ன...

“பசும்பொன்னில் சசிகலாவைச் சந்திக்க திட்டமா?" – எடப்பாடி பழனிசாமி விளக்கம்!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச்...

`முதல்வர் அப்படி உத்தரவிட்டிருக்க மாட்டார்..!' – பேராசிரியர் கலையரசன் கைது குறித்து திருமாவளவன்

விசிக தலைவர் திருமாவளவன் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``பேராசிரியர்...