28
October, 2026

A News 365Times Venture

28
Wednesday
October, 2026

A News 365Times Venture

முதல்வர் விஜய் பற்றி சர்ச்சை கருத்து – தப்பிஓடிய வேலூர் திமுக கவுன்சிலர் விழுப்புரத்தில் சிக்கினார்!

Date:

தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்கியதில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாக பதிவுசெய்யப்பட்ட வழக்கில் தி.மு.க முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று முன்தினம் அதிரடியாக கைது செய்யப்பட்டு நள்ளிரவில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

போலீஸாரின் வேனில் அன்பில் மகேஷ் அழைத்துச் செல்லப்பட்டபோது, வெளியில் நின்றுகொண்டிருந்த தி.மு.க நிர்வாகி ஒருவர் `தலைவரே… அன்னைக்கே அவனை கரூர்ல போட்டுருந்தால் இன்னைக்கு இந்த நிலைமை வந்துருக்குமா..’ என்று சர்ச்சைக்குரிய வகையில் கத்தி கூச்சலிட்ட காட்சிகள் வெளியாகின.

தி.மு.க கவுன்சிலர் டீட்டா சரவணன்

விசாரணையில் அவர், வேலூர் மாநகராட்சியின் 12-வது வார்டு தி.மு.க கவுன்சிலர் டீட்டா சரவணன் எனத் தெரியவந்தது. காட்பாடியில் வசித்து வரும் சரவணன், தி.மு.க-வில் வேலூர் வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளராகவும் உதயநிதி ஸ்டாலினின் ரசிகர் மன்றத் தலைவராகவும் இருக்கிறார்.

இதையடுத்து, புழல் போலீஸார் 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து தி.மு.க கவுன்சிலரைக் கைது செய்ய தேடுதல் வேட்டையில் இறங்கினர். கைதுக்கு பயந்து அவர் தலைமறைவான நிலையில், தனிப்படை போலீஸார் விழுப்புரத்தில் வைத்து சரவணனை கைது செய்திருக்கின்றனர். இதையடுத்து கரூர் சம்பவம் தொடர்பாகவும், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

JIO: தாத்தா திருபாய் பற்றிய பேசிய அனந்த் அம்பானி; கண்கலங்கிய முகேஷ் அம்பானி; வீடியோ வைரல்

பங்குசந்தையில் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் பங்குகள் இன்று காலை பட்டியலிடப்பட்டிருக்கின்றன. ரிலையன்ஸ் குழுமத்...

ஆட்டோ கட்டணம் உயர்வு: '1.8 கி.மீக்கு ரூ.50' – Waiting Charge, இரவு கட்டணம் எவ்வளவு? அரசு அறிவிப்பு

ஆட்டோக்களுக்குப் புதிய கட்டணம் நிர்ணயித்து உத்தரவைப் பிறப்பித்துள்ளது தமிழ்நாடு அரசு.2014-ம் ஆண்டு...

இஸ்ரேல் தேர்தல் முடிவுகள் Tie? நெதன்யாகுவின் பெரும்பான்மைக்குச் சிக்கல்? வெளியான கருத்து கணிப்புகள்

இஸ்ரேலில் நேற்று (அக்டோபர் 27) நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது.2023-ம் ஆண்டு...

முதிய பெற்றோரைக் கைவிட்டால் 3 ஆண்டுகள் சிறை; கேரள முதியோர் பாதுகாப்பு மசோதாவின் சிறப்புகள் என்னென்ன?

கேரளத்தில் முதியோர்களின் நலன், கண்ணியம் மற்றும் உரிமைகளைப் பாதுகாப்பதை உறுதிசெய்யும் நோக்கில்...