மதிமுக நிறுவனரும், மாநிலங்களவை எம்.பி-யுமான வைகோ நேற்று தனது நாடாளுமன்ற உரையில், மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி மீது கேள்வியெழுப்பியும், தேசிய கல்விக் கொள்கை இந்தித் திணிப்பை எதிர்த்தும் அனல் பறக்க உரையாற்றியிருக்கிறார்.
தனது உரையில் வைகோ, “மணிப்பூர் பற்றி தீவிர விவாதம் சென்றுகொண்டிருக்கிறது. மில்லியன் டாலர் கேள்வி ஒன்றைக் கேட்கிறேன். இந்த நாட்டின் பிரதமருக்கு வெளிநாட்டில் என்ன வேலை. அவரைப் பற்றி எப்போது கேட்டாலும், அந்த நாட்டில் இருக்கிறார், இந்த நாட்டில் இருக்கிறார் என்கிறார்கள்.
அவர் என்ன அனைத்து நாடுகளுக்கும் பிரதமரா? அவர் ஏன் மணிப்பூருக்குச் செல்லவில்லை. ஒரு பிரதமராக அவர் தோற்றுவிட்டார். எல்லா நாடுகளுக்கும் செல்கிறார். ஆனால் மணிப்பூருக்கு செல்லவில்லை. மணிப்பூர் இந்தியாவில் இல்லையா… பி.எம் என்றால் பிரைம் மினிஸ்டர். ஆனால், நம்முடைய பி.எம் பிக்னிக் மினிஸ்டர். எல்லா நாடுகளுக்கும் சுற்றுலா செல்கிறார்.” என்று பேசிக்கொண்டிருந்தபோது, “பிரதமரைப் பற்றி பேச வேண்டாம். நாடாளுமன்றத்துக்குப் புறம்பானது. விஷயத்துக்கு வாருங்கள்” என்று துணை சபாநாயகர் குறுக்கிட்டார்.
அதற்கு, “நான் திரும்பத் திரும்பக் கூறுவேன். எது நாடாளுமன்றத்துக்குப் புறம்பானது.” என்று வைகோ கூற, பாஜக எம்.பி-க்கள் தொடர்ந்து கூச்சலிட்டனர். அப்போது, அவர்களை நோக்கி வைகோ, “நான் வைகோ… நீங்கள் யார். அண்ணா இயக்கத்திலிருந்து வந்தவன் நான்.” என்று உரக்க பேச, “அமருங்கள்” என துணை சபாநாயகர் கூறினார்.

அந்த சமயத்தில், “ `எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு. எப்பக்கம் வந்து புந்துவிடும், இந்தி எத்தனைப் பட்டாளம் கூட்டிவரும். கன்னங் கிழிபட நேரும், கட்டாய இந்தியை வெட்டிப் புதைப்போம்.’ இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் இது எங்கள் போர் முழக்கம்” என்று மீண்டும் உரக்க பேசினார்.
அதைத்தொடர்ந்து, “விஷயத்துக்கு வாருங்கள். நாடாளுமன்ற விதிப்படி கொடுக்கப்பட்ட நேரம் முடிந்துவிட்டது. அமருங்கள், அமருங்கள்” என துணை சபாநாயகர் கூற, “இதுதான் நான் பேச வேண்டிய விஷயம். இந்த நாடாளுமன்றத்தில் 24 வருட அனுபவம் எனக்கு இருக்கிறது. எனக்குத் தெரியும்… புதிய கல்விக் கொள்கையைக் குப்பையில் தூக்கியெறிய வேண்டும். புதிய கல்விக் கொள்கையை நாங்கள் எதிர்க்கிறோம்.” என்று கூறினார்.
வேட்டை நாய்கள் – Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |
Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |
80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் – Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks