நவராத்திரி நிறைவாக கொண்டாடப்படும் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகைகளை முன்னிட்டு தமிழக மக்களுக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். முதல்வர் விஜய் தன் அதிகாரப்பூர்வ பக்கத்தில், “நம் வாழ்வின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக இருக்கும் கருவிகள், வாகனங்கள் மற்றும் நாம் செய்யும் தொழில் என அனைத்தையும் இறைவனாகப் போற்றி, உழைப்பின் உயர்வையும், தொழிலின் மேன்மையையும் போற்றும் ஆயுத பூஜை நன்னாளையும், கல்வி, கலை, தொழில் என புதிதாகத் தொடங்கும் அனைத்து முயற்சிகளையும் சிறக்கச் செய்யும் வெற்றித் திருநாளாம் விஜயதசமி நன்னாளையும் கொண்டாடும் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இத்திருநாட்கள், அனைவரின் வாழ்விலும் புதிய நம்பிக்கையையும், வளத்தையும் கொண்டு சேர்க்கட்டும்! நன்மைதரும் புதிய முயற்சிகளை முன்னெடுத்து, கல்வியிலும், தொழில் வளர்ச்சியிலும் மேன்மையுற்று, வெற்றித் தமிழகத்தைப் படைத்திடுவோம்! ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி கிடைக்கட்டும்! அனைவரது வாழ்விலும் நலமும், வளமும் பெருகட்டும்!” என தெரிவித்திருக்கிறார்.
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, “ஆதிபராசக்தியை துர்கை வடிவில் வழிபட்டால் வீரம் பிறக்கும். லட்சுமி வடிவில் வழிபட்டால் செல்வம் பெருகும். சரஸ்வதி வடிவில் வழிபட்டால் கல்வி சிறந்தோங்கும்.
இதையொட்டியே நவராத்திரியின் முதல் மூன்று நாள் துர்கா தேவியையும், அடுத்த 3 நாள் லட்சுமியையும், கடைசி 3 நாட்கள் சரஸ்வதியையும் வணங்குகிறோம்.
‘செய்யும் தொழிலே தெய்வம்’, ‘உழைப்பின் மூலமே வெற்றி’ என்பதை உணர்த்தும் வகையில் ஆயுத பூஜையையும், விஜயதசமியையும் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவரும் அனைத்து வளமும், நலமும் பெற்று சிறப்போடு வாழ உளமார வாழ்த்துகிறேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb




