18
October, 2026

A News 365Times Venture

18
Sunday
October, 2026

A News 365Times Venture

72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தேவா உடல் நல்லடக்கம்; சொந்த ஊர் மக்கள் திரண்டு வந்து அஞ்சலி!

Date:

`தேனிசைத் தென்றல்’ என்று கொண்டாடப்பட்ட இசையமைப்பாளர் தேவாவின் திடீர் மரணம் திரையுலகினர் மற்றும் அவரது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னையில் நேற்று தேவாவின் உடலுக்கு முதலமைச்சர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அதேபோல, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், நடிகர்கள் ரஜினி, கமல் என பலரும் அஞ்சலி செலுத்தினார்கள். இதையடுத்து, `அரசு மரியாதையுடன் தேவாவின் உடல் நல்லடக்கம் செய்யப்படும்’ என்றும் தமிழக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, தேவாவின் பண்ணை தோட்ட வீடு அமைந்திருக்கும் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகேயுள்ள சக்கரமல்லூரில் இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சக்கரமல்லூருக்கு பக்கத்திலுள்ள பழைய மாங்காடு கிராமம்தான் தேவாவின் சொந்த ஊர். தேவாவின் மனைவி பிறந்த ஊர்தான் சக்கரமல்லூர். அவரின் மரணம் 2 கிராம மக்களையும் கவலையில் ஆழ்த்தியிருக்கிறது. வழிநெடுக கண்ணீர் அஞ்சலி பேனர்களை வைத்து தேவா மீதான அன்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் தேவா

இந்த நிலையில்தான் இன்று பிற்பகல் வேளையில் சென்னையில் இருந்து தேவாவின் உடல் சக்கரமல்லூருக்குக் கொண்டுவரப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி சிபின் தலைமையிலான போலீஸார் அரசு மரியாதைக்கான ஏற்பாடுகளை முன்னின்று செய்தனர்.

தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ், மாவட்ட ஆட்சியர் ப்ரியா ரவிச்சந்திரன், முன்னாள் அமைச்சர்கள் ராணிப்பேட்டை ஆர்.காந்தி, கே.சி.வீரமணி, சேவூர் ராமச்சந்திரன், எம்.எல்.ஏ-க்கள் வேலூர் வினோத் கண்ணன், காட்பாடி சுதாகர், பாடகி அனுராதா, இயக்குநர் சேரன், நடிகர் ஜெய், மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரின் மகன் அன்பழகன் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து தேவாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இறுதியாக, ராணிப்பேட்டை ஆயுதப்படை போலீஸார் துப்பாக்கிக் குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தினர். மொத்தம் 72 குண்டுகள் வானத்தை நோக்கி சுடப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. இதையடுத்து, தேவாவின் உடல் தேக்கு பேழையில் வைக்கப்பட்டு, பண்ணைத் தோட்டத்தில் தயார் நிலையில் இருந்த பள்ளத்தில் இறக்கி வைத்து நல்லடக்கம் செய்யப்பட்டது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

Chennai Rain: 'தவெக ரொம்ப ஸ்லோ; திமுக செஞ்ச வேலையினாலதான் தண்ணி நிக்கலை!' – மேயர் பிரியா!

நேற்று மாலை முதல் சென்னையில் மிகக் கனமழை பொழிந்திருந்தது. மாநகராட்சி அதிகாரிகளும்...

'சபரிமலையில் திருப்பதி மாடல் வசதிகள்' – முதல்வர் வி.டி.சதீசனின் திட்டம் என்ன?

சபரிமலையில் மண்டல - மகரவிளக்கு கால பூஜைகளுக்கான ஆயத்தப் பணிகளை ஆய்வு...

Chennai Rain: அப்டேட் கேட்கும் முதல்வர்; மழை இரவில் ஆப்சென்ட் ஆன பொறுப்பு அமைச்சர்கள்- பின்னணி என்ன?

நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை சென்னையில் அதிகனமழை கொட்டித் தீர்த்திருக்கிறது....

ஹைதராபாத் விபரீதம்: தாண்டியா ஆடிய மாணவர்கள் மீது சரிந்த லைட்டிங் – கல்லூரி விழாவில் மாணவி உயிரிழப்பு

ஹைதராபாத் நாதர்குலில் உள்ள எம்.வி.எஸ்.ஆர் (MVSR) பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற தாண்டியா...