14
October, 2026

A News 365Times Venture

14
Wednesday
October, 2026

A News 365Times Venture

சிறையில் சிஜேபி தலைவர்கள்: “துணிவிருந்தால் எமெர்ஜென்ஸியை அமல்படுத்துங்கள் மோடி" – அபிஜித் ஆவேசம்

Date:

டெல்லி ஜந்தர் மந்தரில் தடையை மீறிப் போராட்டத்தில் ஈடுபட்டு, காவல்துறையினரின் பணியைத் தடுக்க முயன்றதாகக் கரப்பான் பூச்சி ஜனதா கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் எஸ்.ஐ.ஆர் உள்ளிட்ட தேர்தல் ஆணையத்தின் பல்வேறு விவகாரங்களில் குளறுபடி செய்ததாக எழுந்த விவகாரம் இந்திய அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.

தேர்தல் ஆணையர் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் சிஜேபி அமைப்பினர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இதற்கிடையில், டெல்லி ஜந்தர் மந்தரை போராட்டக் களப் பட்டியலிலிருந்து நீக்கி, போராடத் தடை விதித்தது பா.ஜ.க அரசு.

சிறையில் சிஜேபி தலைவர்கள்

கடந்த செவ்வாய்க்கிழமை காலை, டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதிக்குத் தனியார் சொத்து வழியே அத்துமீறி நுழைந்த சிஜேபி தலைவர்கள், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி முழக்கங்களை எழுப்பினர்.

அங்கு அமைக்கப்பட்டிருந்த காவல்துறை தடுப்புகளைத் தாண்டிச் செல்ல முயன்ற அவர்களைத் தடுத்த பாதுகாப்புப் படையினரின் பணியை முடக்கியதாகக் கூறி, சௌரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா, அஜின்கியா ஷிண்டே உட்பட 14 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.

இதையடுத்து, புதன்கிழமை காலை 8:00 மணியளவில் டெல்லி மந்திர் மார்க்கில் உள்ள சிறப்பு நிர்வாக நடுவர் நீதிமன்றத்தில் கைது செய்யப்பட்டவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர். ஏற்கனவே அமைதிப் பிணைப்பத்திரத்தில் கையெழுத்திட்ட இவர்கள், மீண்டும் விதிமீறலில் ஈடுபட்டதால், சௌரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்காவை 5 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

அஜின்கியா ஷிண்டே ரூ. 5,000 மதிப்பிலான பிணைப்பத்திரம் செலுத்தியதன் அடிப்படையில் விடுவிக்கப்பட்டார்.

திமுக ஸ்டாலின்
திமுக ஸ்டாலின்

இந்தக் கைது நடவடிக்கைக்கு சிஜேபி நிறுவனர் அபிரஜித் திப்கே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “அஷுவும் சௌரவும் 5 நாட்கள் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அவர்கள் செய்த தவறு? ஜந்தர் மந்தரில் தேசியக் கொடியை ஏற்றியதுதான். கொஞ்சம் தைரியம் இருந்தால் காட்டுங்கள் பிரதமர் மோடிமாற்றுக் கருத்துகளை ஒடுக்குவதில் நீங்கள் அவ்வளவு உறுதியாக இருந்தால், இப்படிப்பட்ட கோழைத்தனமான உத்திகளுக்குப் பின்னால் ஒளிந்துகொள்வதற்குப் பதிலாக அதிகாரப்பூர்வமாக அவசரநிலையை (Emergency) பிரகடனம் செய்யும் துணிச்சலைக் காட்டுங்கள்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

திமுக தலைவர் ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், “இந்த அரசு எத்தனை போராட்டக்காரர்களைக் கைது செய்து அடைத்துவிட முடியும்? பா.ஜ.க-வால் எத்தனை இளைஞர்களின் குரல்களை ஒடுக்கிவிட முடியும்? அவர்கள் எத்தனை இளைஞர்களை சிறையில் அடைக்கிறார்களோ, அந்தளவுக்கு எந்த அரசியலும் சாராத சாதாரண பொதுமக்கள் தெருவில் இறங்கி, மக்கள் சக்தியின் உண்மையான வலிமையை அவர்களுக்குக் காட்டுவார்கள்!

சௌரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோருக்கு எங்களது ஆதரவை உறுதியுடன் தெரிவிக்கிறோம்! அவர்களுக்குத் தேவையான அனைத்துச் சட்ட உதவிகளையும், ஆதரவையும் வழங்க திமுக தயார் நிலையில் உள்ளது” என தன் ஆதரவைத் தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"மோடியும், ஷாவும் பயப்படும் காலம் இது" – ராகுல் காந்தி தேநீர் விருந்தில் இந்தியா கூட்டணி தலைவர்கள்!

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்......

“எல்.முருகனை நீக்கிய மோடி; மத்திய அமைச்சரவையில் தமிழர் யாரும் இல்லை” – பிரவீண் சக்கரவர்த்தி சாடல்

நேற்று மத்திய இணை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன்.தன்னுடைய தொகுதிக்குத்...

'ரசிகர் மன்றம் டு நற்பணி இயக்கம்; புதிய கொடி அறிமுகம்!' – கோவையில் தனுஷின் அடுத்த மூவ்!

நடிகர் தனுஷின் அகில இந்திய தனுஷ் ரசிகர் மன்றத்தை தனுஷ் நற்பணி...

'அவரை அடக்குங்க முதல்ல…' – மாநகராட்சி கூட்டத்தில் மோதிய சேகர் பாபு – தவெக எம்.எல்.ஏ தாமு!

சென்னையில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் பற்றி ஆலோசிக்க மேயர், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள்...