13
October, 2026

A News 365Times Venture

13
Tuesday
October, 2026

A News 365Times Venture

“ஒப்பந்தங்களை ரத்து செய்துவிட்டு ரூ.35-க்கு ஒரு யூனிட் மின்சாரமா?” – பழனிவேல் தியாகராஜன் கண்டனம்

Date:

சில மாதங்களாகவே தமிழ்நாட்டு மக்கள் மின்வெட்டால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்தப் பிரச்னையால் தவெக ஆட்சி தொடர்ந்து நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது.

அமைச்சர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில் ஏற்பட்ட மின்வெட்டு சென்று, நேற்று தலைமைச் செயலகத்திலேயே மின்வெட்டு ஏற்பட்டது.

‘இது தொழில்நுட்பக் கோளாறால் ஏற்பட்ட மின்வெட்டு’ என்று மின்வாரியம் கூறினாலும், ‘தலைமைச் செயலகத்தில் கூட மின்வெட்டா?’ என்பது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ரூ.35-க்கு ஒரு யூனிட்

இந்த நிலையில்தான், தனியாரிடம் இருந்து ரூ.35-க்கு ஒரு யூனிட் மின்சாரம் எனக் கொள்முதல் செய்யப்பட உள்ளது என்று நேற்று (அக்டோபர் 12) தமிழ்நாடு அரசு அறிவித்தது.

மின்சாரம்

பி.டி.ஆர் பதிவு

தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு தொழிற்துறையின் முன்னாள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

“குறைந்த விலை முந்தைய ஒப்பந்தங்களை ரத்து செய்துவிட்டு, தற்போது ஒரு யூனிட்டை 35 ரூபாய்க்குப் கொள்முதல் செய்வது என்பது நிர்வாகம் மற்றும் திட்டமிடலில் உள்ள கடுமையான திறமையின்மையையே காட்டுகிறது… அல்லது மிகப்பெரிய ஊழலாக இருக்க வேண்டும். அல்லது இரண்டுமேதான்…” என்று பதிவிட்டுள்ளார் பழனிவேல் தியாகராஜன்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

ADMK: " நல்லவேளை, எடப்பாடி பழனிசாமி என்னை கட்சியில் இருந்து நீக்கினார்" செங்கோட்டையன்!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகில் உள்ள செம்மாண்டம் பாளையம் பகுதியில் இயங்கி...

"ஞானேஷ் குமாருக்கு எதிராக ராகுல் காந்தி தாக்கல் செய்த மனுவில் 14 குறைகள்" – உச்ச நீதிமன்றம்

வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நடந்துள்ளன என்று இந்தியா கூட்டணிக் கட்சிகள் தொடர்ந்து...

ECI: ஜனநாயகத்தின் மீதான மரண அடி! – ஞானேஷ் குமார் விவகாரமும், சீரழியும் தேர்தல் அமைப்பும்!

டெல்லி பற்றியெரிந்து கொண்டிருக்கிறது. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிரான...

#ChaloDilli: உச்ச நீதிமன்றத்தை நோக்கி பேரணி சொல்லும் ராகுல் காந்தி; என்னென்ன கோரிக்கைகளை வைக்கிறார்?

இன்று (அக்டோபர் 12) மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இந்தியா...