13
October, 2026

A News 365Times Venture

13
Tuesday
October, 2026

A News 365Times Venture

"ஞானேஷ் குமாருக்கு எதிராக ராகுல் காந்தி தாக்கல் செய்த மனுவில் 14 குறைகள்" – உச்ச நீதிமன்றம்

Date:

வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நடந்துள்ளன என்று இந்தியா கூட்டணிக் கட்சிகள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றன.

மேலும், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் போராட்டத்தையும் முன்னெடுத்து வருகின்றனர்.

நேற்று (அக்டோபர் 12) வாக்காளர் பட்டியலில் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படும் முறைகேடுகள் மற்றும் சிறப்பு தீவிர திருத்த (SIR) நடவடிக்கைகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் கூட்டு மனு ஒன்றைத் தாக்கல் செய்தது இந்தியா கூட்டணி.

இந்தியா கூட்டணி

யார் யார் மனுதாரர்கள்?

இந்தக் கூட்டு மனுவை ராகுல் காந்தி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி பிரசாத் யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் எம்.ஏ. பேபி உள்ளிட்ட 11 பேர் தாக்கல் செய்திருந்தனர்.

இதில் இந்திய தேர்தல் ஆணையம், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோர் எதிர்மனுதாரர்களாக இணைக்கப்பட்டுள்ளனர்.

குறைகள்

இந்த மனுவை ஆய்வு செய்த உச்ச நீதிமன்றம் அதில் 14 குறைகள் உள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதில்…

> மனு தாக்கல் செய்வதற்கான கட்டணத்தில் ரூ.220-உம் குறைந்துள்ளது,

> 9 மனுதாரர்களின் அதிகாரப்பூர்வ ஒப்புதல் கடிதங்கள் இணைக்கப்படவில்லை,

> மல்லிகார்ஜுன கார்கேவின் அடையாள அட்டையின் நகலில் தெளிவில்லை

ஆகியவை அடக்கம்.

உச்ச நீதிமன்றம் கூறியுள்ள குறைகளைச் சரிசெய்தால்தான் அடுத்து இந்த மனு விசாரணைக்கு வரும்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

“ஒப்பந்தங்களை ரத்து செய்துவிட்டு ரூ.35-க்கு ஒரு யூனிட் மின்சாரமா?” – பழனிவேல் தியாகராஜன் கண்டனம்

சில மாதங்களாகவே தமிழ்நாட்டு மக்கள் மின்வெட்டால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இந்தப்...

ECI: ஜனநாயகத்தின் மீதான மரண அடி! – ஞானேஷ் குமார் விவகாரமும், சீரழியும் தேர்தல் அமைப்பும்!

டெல்லி பற்றியெரிந்து கொண்டிருக்கிறது. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிரான...

#ChaloDilli: உச்ச நீதிமன்றத்தை நோக்கி பேரணி சொல்லும் ராகுல் காந்தி; என்னென்ன கோரிக்கைகளை வைக்கிறார்?

இன்று (அக்டோபர் 12) மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இந்தியா...

'அரசியலாகும் வி.எஸ்.பாபுவின் உடல்நிலை!' – அப்டேட் கொடுக்குமா அரசு?

கொளத்தூர் தொகுதி தவெக எம்.எல்.ஏவான வி.எஸ்.பாபு கடந்த செப்டம்பர் 9 ஆம்...