18
March, 2025

A News 365Times Venture

18
Tuesday
March, 2025

A News 365Times Venture

அதிமுக ஆலோசனை கூட்டம்; மீண்டும் புறக்கணித்த செங்கோட்டையன் – சலசலக்கும் அதிமுக முகாம்!

Date:

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தை இன்றும் செங்கோட்டையன் புறகணித்திருக்கிறார்.

கடந்த மாதம், அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை செயல்படுத்தியதற்காக விவசாய அமைப்புகள் சார்பில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. விழா அழைப்பிதழில், எம்ஜிஆர், ஜெயலலிதா புகைப்படங்கள் இடம் பெறாததால் அதில் பங்கேற்கவில்லை என அதற்கு அவர் காரணம் கூறியிருந்தார்.

செங்கோட்டையன்

அதேபோல கடந்த 14 ஆம் தேதி, தமிழக பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக, சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. நேற்று முன்தினம் வேளாண் பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக பேரவைத் தலைவர் அப்பாவுவை அவர் தனியே சந்தித்தார்.

இந்நிலையில், இன்று சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கை இல்லாத தீர்மானம் குறித்து அதிமுக எம்.எல்.ஏ களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி இருக்கிறார். இந்தக் கூட்டத்திலும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்காமல் புறக்கணித்திருக்கிறார்.

செங்கோட்டையன்

இது அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இன்று நம்பிக்கை இல்லா தீர்மனம் நடைபெற இருக்கும் நிலையில் செங்கோட்டையனின் முடிவு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகிறது. இதனிடையே அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ சட்டப்பேரவையில் செங்கோட்டயனிடம் பேசிக்கொண்டே இருந்தார். இதனால் அவர் சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் பரபரக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

Caste Census: `பாஜக-வை விமர்சிக்க மறுக்கிறாரா சீமான்?’ – குற்றச்சாட்டும் நாதகவின் விளக்கமும்!

பெரியார் விமர்சனத்திலேயே தேங்கி நின்ற நாம் தமிழர் கட்சி, சமீப நாட்களாக...

TVK Vijay: மீண்டும் துளிர்க்கிறதா தவெக, நாதக நட்பு? – பரவும் தகவலும் பின்னணியும்!

தமிழக வெற்றிக் கழக தரப்பு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்...

ஆரோவில்: `மரங்களை வெட்டி வளர்ச்சி பணிகளை செய்யலாம்!'- பசுமை தீர்பாயம் உத்தரவை ரத்துசெய்த நீதிமன்றம்

புதுச்சேரியை ஒட்டி விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது ஆரோவில். மனித இனத்தின் ஒற்றுமையை...

“கட்டாய இந்தியை புதைப்போம்" – வைகோ; “நேரம் முடிந்தது, அமருங்கள்" துணை சபாநாயகர்… பேசியதென்ன?

மதிமுக நிறுவனரும், மாநிலங்களவை எம்.பி-யுமான வைகோ நேற்று தனது நாடாளுமன்ற உரையில்,...