26
March, 2026

A News 365Times Venture

26
Thursday
March, 2026

A News 365Times Venture

TNBudget 2025: 'பட்ஜெட்டில் 'ரூ' மாற்றம் எதற்கு?'- முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்

Date:

தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் எழுந்த சர்ச்சையில், தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு அலை தீவிரமாக எழுந்துள்ளது.

தமிழ்ப்பற்றைக் காண்பிக்கும் விதமாக தி.மு.க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அவ்வகையில் இன்று தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் ஆவணத்தில் இந்திய ரூபாய்க்கான ₹ குறியீட்டுக்கு பதில், ரூ எனத் தமிழ் எழுத்து பயன்படுத்தப்பட்டிருந்தது. தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்குப் பலரும் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வந்தனர்.

2025- 2026 ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்

‘உங்களில் ஒருவன்’ நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் இருக்கும் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார். அவ்வகையில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் ‘உங்களில் ஒருவன்’ நிகழ்ச்சியில் பட்ஜெட் குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்திருக்கிறார்.

அதில், ‘ரூ’ குறியீடு மாற்றப்பட்டது குறித்த கேள்விக்கு, “மொழிக் கொள்கையில் நாம எந்த அளவிற்கு உறுதியாக இருக்கோம் என்பதைக் காட்ட பட்ஜெட் தலைப்பில் ‘ரூ’ குறியீட்டை வைத்திருந்தோம். தமிழைப் பிடிக்காதவங்க, அந்த விஷயத்தை பெரிய செய்தியாக்கிட்டாங்க.

ஒன்றிய அரசிடம் பேரிடர் நிதி தாருங்கள், பள்ளிக் கல்வி நிதியை விடுவிங்க என தமிழ்நாடு சார்பாக நூறு கோரிக்கைகள் வைத்திருந்தோம். அதற்கெல்லாம் பதில் சொல்லாதவர்கள், ‘ரூ’ குறியீடு பற்றிப் பேசுகிறார்கள். அவங்களே பல பதிவுகளில் ‘ரூ’ வைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். வெளிநாடுகளில்கூட ‘Rs’ என்றுதான் பயன்படுத்துகிறார்கள். ‘ரூ’ குறியீட்டை மாற்றியதுதான் இவர்களுக்குப் பெரிய பிரச்னையாகத் தெரிகிறது. மொத்தத்தில் இந்திய அளவில் நம்ம பட்ஜெட்டும் ஹிட், தமிழும் ஹிட்'” என்று பேசியிருக்கிறார்.

மேலும், பட்ஜெட் மீதான விமர்சனங்கள் குறித்து, “ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள் வந்தால் அதைப் பரிசீலிக்கலாம். நெகட்டிவாக சொல்ல வேண்டும் என்பதற்காகவே சிலர் விமர்சிப்பது, அரசு மீது உள்ள வன்மம் மட்டுமே தெரிகிறது. உருப்படியாக அதில் ஒன்றுமே இல்லை” என்று பதிலளித்திருக்கிறார்.


Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

ஹார்முஸ் டோல்கேட்: அமெரிக்காவின் ஆயுதத்தைக் கையில் எடுக்கும் ஈரான்? – உலகப் பொருளாதாரம் என்ன ஆகும்?

ஹார்முஸ்பழங்காலம் முதலே பட்டு, முத்து மற்றும் வாசனை திரவியங்களின் வர்த்தக மையமாக...

`கரையேறும் அதிமுக மா.செ-க்கள்; அடிசறுக்குகிறதா திமுக தொகுதிகள்?' – ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட களம்!

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில், அமைப்புரீதியாக ஐந்து மாவட்டக் கழகங்களாக அ.தி.மு.க-வின்...

கூட்டணிக் கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள்? – பட்டியலை தயார் செய்த திமுக!

தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு முடிந்த நிலையில், ஒவ்வொரு...

"எங்களது முடிவு பல பேரின் தூக்கத்தை கெடுக்கும்; விஜய்யுடன் கூட்டணியா.!"- வேல்முருகன் பேச்சு

திமுக கூட்டணியில் இருந்து சமீபத்தில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர்...