17
March, 2025

A News 365Times Venture

17
Monday
March, 2025

A News 365Times Venture

Nitin Gadkari: "சாதியைப் பற்றிப் பேசினால் கடுமையாக உதைப்பேன்…" – என்ன சொல்கிறார் நிதின் கட்கரி?

Date:

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி சமீபத்தில் நாக்பூரில் உள்ள கல்லூரி பட்டமளிப்பு விழா ஒன்றில் கலந்துகொண்டிருந்தார்.

அப்போது அவர், “டாக்டர் அப்துல் கலாம் அணு விஞ்ஞானியாகப் பல சாதனைகளைச் செய்துள்ளார். அதனால், அவரது பெயர் உலகம் முழுவதும் சென்று சேர்ந்துள்ளது. ஒரு மனிதன் அவனது சாதி, பிரிவு, மதம், மொழியால் உயர்ந்தவன் ஆவதில்லை. அவனது குணத்தினால்தான் உயர்ந்தவன் ஆகிறான் என்பதை நான் நம்புகிறேன். அதனால்தான், நாம் யாரையும் அவர்களது சாதி, பிரிவு, மதம், மொழி அல்லது பாலினத்தை வைத்து பாகுபாடுப்படுத்தக்கூடாது.

‘வேலை தேடுபவராக இருக்காதீர்கள்; வேலையை உருவாக்குபவர்களாக இருங்கள்’ – நிதின் கட்கரி

இந்த விஷயத்தில் நான் மிகவும் தெளிவாக இருக்கிறேன். எனக்கு ஓட்டு கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் என்னுடைய கூற்றுப்படி தான் இருப்பேன். ‘சாதியைப் பற்றிப் பேசுபவரைக் கடுமையாக உதைப்பேன்’ என்று ஒருமுறை 50,000 பேர் கூடியிருந்த கூட்டத்தில் பேசினேன்.

என்னுடைய இந்த நிலைப்பாட்டால் நான் பல பின்னடைவுகளைச் சந்திப்பேன் என்று என் நண்பர்கள் கூறினார்கள். நான் அதுகுறித்து கவலைப்படுவதில்லை. ஒருவர் தேர்தலில் தோற்பதால் இறந்துவிடுவார்களா என்ன? நான் கட்டாயம் என்னுடைய கொள்கைகளின் படிதான் என் வாழ்க்கையை நடத்துவேன்.

கல்வி உங்களுக்கு, உங்கள் குடும்பத்திற்கு மட்டும் பலன் கொடுக்காது. அது இந்த நாட்டையும், சமுதாயத்தையும் மேம்படுத்தும். நீங்கள் வேலை தேடுபவராக இருக்காதீர்கள்; வேலையை உருவாக்குபவர்களாக இருங்கள்” என்று பேசியுள்ளார்.

வேட்டை நாய்கள் – Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |

Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் – Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

“சரியாகப் படிக்கவில்லை..'' – வாளி தண்ணீரில் தலையை முக்கி 2 மகன்களைக் கொன்று தந்தை தற்கொலை..?

ஆந்திராவில் காக்கிநாடா பகுதியைச் சேர்ந்த 37 வயதான நபர் வனப்பள்ளி சந்திர...

`கனிவானவர்; ஆனால் கண்டிப்பானவர்..!’ – சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு, எதிர்க்கட்சி உறுப்பினர்களை பேச விடுவதில்லை என்றும்,...

அண்ணாமலை, வானதி, தமிழிசை உள்ளிட்டோர் கைது – வீட்டுக் காவலில் பாஜக-வினர் | என்ன காரணம்?

தமிழ்நாடு டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனையின் முடிவில், ரூ.1000...

அதிமுக ஆலோசனை கூட்டம்; மீண்டும் புறக்கணித்த செங்கோட்டையன் – சலசலக்கும் அதிமுக முகாம்!

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தை இன்றும் செங்கோட்டையன்...