7
October, 2026

A News 365Times Venture

7
Wednesday
October, 2026

A News 365Times Venture

'வெற்றிப் பயணத்தால் மூன்றில் ஒரு பங்கு வருமானம் போச்சு!' – ஆட்டோ ஓட்டுநர்கள் என்ன சொல்கிறார்கள்?

Date:

முதல்வர் விஜய் தொடங்கி வைத்த வெற்றிப் பயணம் என்கிற கட்டணமில்லா பேருந்து வசதி திட்டத்தால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக ஆட்டோ ஓட்டுநர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

வெற்றிப் பயணம் திட்டம் இலச்சினை ஸ்டிக்கர்களுடன் புறப்பட்ட பேருந்துகள் தொடக்க விழா.!

ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து அறிய சி.ஐ.டி.யூ தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனத்தின் மாநிலச் செயலாளர் பாலசுப்ரமணியனிடம் பேசினோம், ”வெற்றிப் பயணம் திட்டம் தொடங்கப்பட்ட ஒரு வாரத்திலேயே ஆட்டோ, ஷேர் ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்களின் தொழிலில் தொய்வு தெரிய தொடங்கிவிட்டது.

ஒரு ஆட்டோ ஓட்டுநர் சராசரியாக ஒரு நாளைக்கு 15 சவாரிகளை ஓட்டுவார். மாதத்துக்கு 450 சவாரிக்களை ஓட்டுவார் என எடுத்துக் கொள்ளலாம். இப்போது ஒரு நாளைக்கு 5 சவாரிகள் குறைந்துவிட்டது. மூன்றில் ஒரு பங்கு வருமானம் குறைந்துவிட்டது. ஆண்கள் பெரும்பாலும் டூவீலரில் பயணம் செய்துவிடுகிறார்கள். வேலைக்கு செல்லும் பெண்களும், நகருக்குள் அவசரப் பயணம் மேற்கொள்ள நினைக்கும் பெண்கள்தான் ஆட்டோக்களிலும் ஷேர் ஆட்டோக்களிலும் பயணிப்பார்கள்.

பாலசுப்பிரமணியன்
பாலசுப்ரமணியன்

இப்போது அந்தப் பெண்களுக்கு எல்லா விதமான பேருந்துகளிலும் கட்டணம் கிடையாது என்பதால் அவர்கள் பேருந்தில் செல்வதையே விரும்புகின்றனர். பெண்களுக்கு கட்டணமில்லா பொதுப் போக்குவரத்து வசதியை செய்து கொடுப்பதில் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. அதை நிச்சயமாக வரவேற்கிறோம். ஆனால், எங்களின் வாழ்வாதாரத்துக்கும் அரசு ஒரு உறுதியை கொடுக்க வேண்டும். ஆட்டோவில் மீட்டர் கட்டணத்தை பல ஆண்டுகளாக உயர்த்தாமல் இருக்கிறார்கள். அதை அரசு உயர்த்திக் கொடுக்க வேண்டும். சிட்டிக்குள் ஷேர் ஆட்டோக்களும் அதே பாணியில் வேன்களும் ஓடுகின்றன. அதற்கு ஒப்பந்த ஓட்ட அனுமதியைத்தான் அரசு கொடுத்திருக்கிறது. அதாவது ஒரு இடத்தில் ஆட்களை ஏற்றி இன்னொரு இடத்தில் ஆட்களை இறக்கி விட வேண்டும். இடையில் எந்த நிறுத்தமும் கூடாது. ஆனால், அப்படி ஓட்டினால் நமக்கு கட்டுப்படியே ஆகாது. ஷேர் ஆட்டோவாக பல நிறுத்தங்களில் ஓட்டுவதால், எந்தெந்த ஸ்டேஷன் லிமிட்டுக்குள் எல்லாம் ஆட்டோ ஓடுகிறதோ அங்கெல்லாம் அபாரதம் கட்ட வேண்டியிருக்கிறது. ஒரு ஸ்டேஷனுக்கு குறைந்தபட்சம் 200 ரூபாய் அபராதம் கேட்கிறார்கள். ஒரு நாளைக்கு சராசரியாக 600 ரூபாய் அபராதமாக செலுத்த வேண்டியிருக்கிறது. இந்த ஒப்பந்த அனுமதியை மாற்றிக் கொடுத்தாலே ஆட்டோ ஓட்டுநர்களுக்கு பெரிய உதவியாக இருக்கும். அதேமாதிரி, இந்தத் தொழிலிலிருந்து வெளியேற நினைப்பவர்களுக்கு தனியார் நிறுவனங்களில் ஓட்டுநர் வேலைக்கு முன்னுரிமை அடிப்படையில் அவர்களை பணிக்கு எடுக்க அரசு உதவ வேண்டும். வெற்றிப் பயணம் திட்டம் ஆரம்பித்த ஒரே வாரத்தில் எங்களுக்கு பாதிப்புகள் உண்டாக ஆரம்பித்துவிட்டது. அரசுதான் எங்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற விரைந்து செயல்பட வேண்டும்” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`மின்வெட்டை மிஞ்சும் அளவுக்குத் தலைதூக்கும் அரிவாள் வெட்டு'- தவெக ஆட்சி குறித்து ஸ்டாலின் விமர்சனம்

"தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நாளாக, நாளாக மிக மிக ஆபத்தான கட்டத்தை...

`ரிஸ்க் எடுத்தால் ரூ.1 கோடி!'- Hormuz-ல் கப்பலை இயக்குபவர்களுக்கு `ஆஃபர்' வழங்கும் நிறுவனங்கள்!

உயிருக்கு ஆபத்து நிறைந்த கடல் வழியில் எண்ணெய் கப்பல்களை இயக்கும் கேப்டன்களுக்கு...

ஜெம் வீரமணி: `காவலில் வைத்து விசாரியுங்கள்..!'- போக்சோ வழக்கில் ஆஜர்படுத்திய போலீஸ்; கோர்ட் உத்தரவு!

ஜெம் நிறுவனர் வீரமணி வழக்கு, தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது....

Virat Kohli: “ஆசிரமத்தைப் பிரபலப்படுத்த ரூ5 கோடி பெற்றேனா?" – விராட் கோலி தரப்பு விளக்கம்!

உத்தரப்பிரதேச மாநிலம், விருந்தாவனத்தில் உள்ளது பிரேமானந்த் மகாராஜா எனும் சாமியாரின் ஆசிரமம்....