6
October, 2026

A News 365Times Venture

6
Tuesday
October, 2026

A News 365Times Venture

மதுராந்தகம்: பிரதான கட்சி வேட்பாளர்களுக்கு தொகுதியில் வாக்கு இல்லை| Live

Date:

பிரதான கட்சி வேட்பாளர்களுக்கு தொகுதியில் வாக்கு இல்லை

இடைத் தேர்தல்

தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு திருப்போரூரிலும், திமுக வேட்பாளர் பரந்தாமனுக்கு எழும்பூரிலும், அதிமுக வேட்பாளர் கனிதா சம்பத்துக்கு செங்கல்பட்டிலும், சிபிஎம் வேட்பாளர் சுகந்திக்கு ஸ்ரீவில்லிபுத்தூரிலும் வாக்கு உள்ளது. நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஜானகிராமன் மட்டும் வாக்கு செலுத்த உள்ளார்

கருப்பு மை

கருப்பு மை
கருப்பு மை

மதுராந்தகம் தண்டரை புதுச்சேரி பகுதியில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரத்தில், விசில் சின்னத்திற்கு நேராக உள்ள பட்டனில் கறுப்பு மை இருந்ததால் வாக்குப்பதிவு நிறுத்தம்.

தொடங்கியது வாக்குப்பதிவு!

தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தனி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதில் தாராபுரத்தில் மொத்தம் 22 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 1,15,523 பெண் வாக்காளர்கள், 1,06,875 ஆண் வாக்காளர்கள், 8 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 2,22,406 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

தாராபுரம் தொகுதி முழுவதும் 320 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 18 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டு. சுமார் 1,300 தேர்தல் பணியாளர்கள் வாக்குப்பதிவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வாக்குப்பதிவு
தேர்தல்

மதுராந்தகம் தொகுதியை பொறுத்தவரை மொத்த வாக்காளர்கள், 2,13,689. ஆண் வாக்காளர்கள் 1,04,886, பெண் வாக்காளர்கள் 1,08,738, மூன்றாம் பாலினத்தவர் தோராயமாக 65 பேர் உள்ளனர்.

மதுராந்தகம் தொகுதியில் மொத்தம் 167 அமைவிடங்களில் 285 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் மொத்தம் 8 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாகக் கண்டறியப்பட்டு வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த மையங்களில் கூடுதல் பாதுகாப்பு, துப்பாக்கி ஏந்திய போலீசார், சிசிடிவி கேமரா கண்காணிப்பு மற்றும் கூடுதல் தேர்தல் நுண் பார்வையாளர்கள் நியமனம் போன்ற கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

தவெக: “ என் வெற்றி வாய்ப்பைக் கெடுப்பதற்காக சித்தரிக்கப்பட்டவை" – சர்ச்சை வீடியோ குறித்து சத்யபாமா

தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதேநேரம் தவெக...

“செவிலியர்களை ஏமாற்றியிருக்கிறது இந்த ரீல் அரசு..!" – எம்.பி கனிமொழி

தமிழ்நாடு இடைநிலை சுகாதாரப் பணியாளர்கள் பொறுப்பில் இருக்கும் செவிலியர்கள் ஆயிரக்கணக்கானோர் சென்னை...

By Election: 320 பூத்கள், 3,500 போலீஸார்; தாராபுரத்தில் விறுவிறுப்பாகத் தொடங்கிய வாக்குப்பதிவு!

தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தனி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்...

மேடையில் வெடித்த கலகம்; அமைச்சர், தவெக MLA கோஷ்டி பூசல்! – இடையில் மாட்டி தவித்த காங்கிரஸ் எம்.பி

திருச்சி ஜங்ஷன் பகுதியில் உள்ள கலையரங்கத்தில், சமூக நலன் மற்றும் மகளிர்...