3
October, 2026

A News 365Times Venture

3
Saturday
October, 2026

A News 365Times Venture

`ஹெராயின், மெத்தம்பெட்டமைன் கடத்திய கடத்தல் மன்னன் இந்தியாவுக்கு நாடு கடத்தல்' – அமித் ஷா பெருமிதம்

Date:

துருக்கியில் தலைமறைவாக இருந்த போதைப்பொருள் கடத்தல்காரர் நவ்பிரீத் சிங்கை கைது செய்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.

இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது…

“துருக்கியில் தலைமறைவாக இருந்த பயங்கர போதைப்பொருள் கடத்தல் மன்னன் நவ்பிரீத் சிங்கை வெற்றிகரமாக நாடு கடத்தி அழைத்து வந்ததன் மூலம், நரேந்திர மோடி அரசு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையைப் படைத்துள்ளது.

அமித்ஷா பதிவு

‘நவாப் விர்க்’ என்ற போலி அடையாளத்தில் துருக்கியக் குடியுரிமையைப் பெற்றிருந்த அவன், ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு ஹெராயின் மற்றும் மெத்தம்பெட்டமைன் போன்ற கொடிய போதைப்பொருட்களைத் தொடர்ந்து கடத்தி வந்தான்.

நமது புலனாய்வு அமைப்புகள் அவனைப் பின்தொடர்ந்து, அவனது போலி முகமூடிகளை ஒவ்வொன்றாகக் கிழித்தெறிந்து, அவனது உண்மையான அடையாளத்தை தெரியப்படுத்தி, அவனை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகளைச் சட்டப்பூர்வமாக உறுதிசெய்தன.

இன்று அவன் இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டு, போதைப்பொருள் கடத்தல் மற்றும் பிற குற்றச் சம்பவங்கள் தொடர்பான வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.

இந்த மகத்தான வெற்றிக்குக் காரணமான அனைத்துப் புலனாய்வு மற்றும் பாதுகாப்பு முகமைகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

டிசம்பர் 2029-க்குள் நாட்டில் உள்ள அனைத்துப் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களையும் வேரோடு அழிப்பதில் மோடி அரசு முழு வீச்சில் உறுதியுடன் செயல்பட்டு வருகிறது”. என பதிவிட்டுள்ளார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

ஸ்டாலின் : “உருவகேலி கூடாது என்ற தலைவரே இப்படி பேசி இருப்பது.!” – கொதிக்கும் தமிழக அமைச்சர்கள்

வருகிற 6-ம் தேதி நடைபெற உள்ள இடைத்தேர்தலுக்காக, நேற்று தாராபுரத்தில் பிரசாரம்...

’அடுத்த தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக ஒன்றாக தேர்தலை சந்திப்பார்கள்’ – அமைச்சர் நிர்மல்குமார் ஆரூடம்

கோவை விமான நிலையத்தில் அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது...

’ஸ்டாலினின் அருவருப்பான பேச்சை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்’ –அமைச்சர் சம்பத்குமார்

தாராபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், த.வெ.க....

"ஐயப்பப் பக்தர்களின் உணர்வுகளை மதித்து, விருப்பங்களை நிறைவேற்றுவோம்" – கேரள தேவஸ்வம் அமைச்சர் உறுதி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த சுசீந்திரம் ஆஸ்ரமத்தில் அகில பாரத ஐயப்பா...