30
September, 2026

A News 365Times Venture

30
Wednesday
September, 2026

A News 365Times Venture

6 மாதங்களாக ரேஷன் கார்டு பயன்படுத்தவில்லையா? 'முடக்கப்படலாம்' – என்ன செய்வது?

Date:

6 மாதங்களுக்கு மேலாக, ரேஷன் கார்டைப் பயன்படுத்தாமல் வைத்திருக்கிறீர்களா? நாளை (அக்டோபர் 1) உங்கள் ரேஷன் கார்டு முடக்கப்படலாம்.

இறந்தவர்களின் பெயரில் ரேஷன் கார்டு வைத்திருப்பது, ஒன்றுக்கும் மேற்பட்ட ரேஷன் கார்டு வைத்திருப்பது, இடம்பெயர்ந்த பின் இரண்டு பகுதிகளில் ரேஷன் கார்டு வைத்திருப்பது போன்ற தகுதியில்லாத ரேஷன் கார்டுகளை முடக்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்காக 6 மாதங்களுக்கு மேல் பயன்படுத்தாத ரேஷன் கார்டுகள் நாளை முதல் தற்காலிகமாக முடக்கப்பட உள்ளன.

மத்திய அரசு

இந்தியா முழுவதும் 20.4 கோடி ரேஷன் கார்டுகள் மூலம் 80.6 கோடி பேர் பயன்பெற்று வருகின்றனர். இதில் 6 மாதங்களாக ரேஷன் கார்டைப் பயன்படுத்தாத 1.58 கோடி பேர்களின் பெயர்களை முடக்க இந்த முன்னெடுப்பு.

உங்களுடைய ரேஷன் கார்டு முடக்கப்பட்டுவிட்டால்…

ஒருவேளை, நீங்கள் 6 மாதங்களாக ரேஷன் கார்டு பயன்படுத்தாமல் இருந்திருந்தால், பிரச்னை இல்லை. உங்களது ரேஷன் கார்டு தற்காலிகமாக ‘மூன்று மாதங்களுக்கு’ முதலில் முடக்கப்படும்.

இந்த மூன்று மாதக் காலத்தில் உங்களது KYC அப்டேட்டைச் செய்துவிட்டால், மீண்டும் உங்களது ரேஷன் கார்டைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

மூன்று மாதங்களுக்குப் பின்னும், KYC அப்டேட் செய்யப்படாத ரேஷன் கார்டுகள்தான் முற்றிலும் முடக்கப்படும்.

இதனால், மூன்று மாதங்களுக்குள் உங்கள் KYC-ஐப் பக்காவாக அப்டேட் செய்துவிடுங்கள் மக்களே!

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

LPG மானியம் தொடர வேண்டுமா? வட்டி விகிதம் மாறுகிறதா? – அக்டோபர் 2026-ன் முக்கிய நிதி மாற்றங்கள்!

நாளை அக்டோபர் 1-ம் தேதி. நாளை முதல் இந்தியாவில் கவனிக்க வேண்டிய......

“நான் அமைச்சராகப் போகிறேனா?" – சௌமியா அன்புமணி கொடுத்த ரியாக்ஷன் என்ன?

தவெக அரசின் அமைச்சரவையில் பாமக இணையப்போவதாகவும், சௌமியா அன்புமணிக்கு முக்கியமான துறை...

`அறிவிருக்கா தெரியலை…' – சாடிக் கொள்ளும் முன்னாள் – இன்னாள் அறநிலையத்துறை அமைச்சர்கள்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் விஜபி தரிசனம் செய்த...

'குட் நியூஸ்' போருக்கு முந்தைய 'அதே அளவில்' கச்சா எண்ணெய் ஏற்றுமதிகள்! சவூதியின் 2 முக்கிய நகர்வுகள்

நேற்று சர்வதேச சந்தையில் WTI கச்சா எண்ணெயின் விலை ஒரு பீப்பாவிற்கு...