29
September, 2026

A News 365Times Venture

29
Tuesday
September, 2026

A News 365Times Venture

தாய்மாமன் தங்க மோதிர திட்டம் டு மீனாட்சியம்மன் கோவில் – முதல்வர் விஜய்யின் மதுரை விசிட் பிளான்

Date:

தமிழக அரசு சார்பில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் தொடக்க விழா நாளை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற உள்ளது. இதனை தொடங்கி வைப்பதற்காக தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் காலை 11 மணிக்கு மதுரை விமான நிலையத்திற்கு வருகை தர உள்ளார்.

பள்ளி தேர்வு விடுமுறை என்பதாலும் முதலமைச்சராக பதவி ஏற்ற பின்பு முதன் முறையாக ஜோசப் விஜய் மதுரைக்கு வருகை தர உள்ள நிலையில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் தொண்டர்கள் வருகை தருவார்கள் என்பதால் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மதுரை விமான நிலையத்திலிருந்து காலை 11 மணிக்கு வருகை தந்து பின்னர் மதுரை விமான நிலையத்திலிருந்து பெருங்குடி விரகனூர் ரிங் ரோடு சாலை , சிந்தாமணி சாலை மற்றும் வைகை தென்கரையோர சாலை, அண்ணா நகர், ஆவின் சந்திப்பு, பனகல் சாலை வழியாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் உள்ள கலந்தாய்வு கூட்டரங்கு மேடைக்கு வருகை தருகிறார்.

பின்னர் 12.30 மணியளவில் விழா மேடையில் 30 குழந்தைகளின் தாய்மார்களுக்கு முதலமைச்சர் விஜய் தங்க மோதிரங்களை வழங்கி திட்டத்தை தொடங்கிவைக்கிறார். இதில் இரட்டை குழந்தைகளின் தாயார் ஒருவருக்கும் தங்க மோதிரங்கள் வழங்குகிறார்

மதுரை காந்தி அருங்காட்சியகம்

இதனை தொடர்ந்து காந்தி அருங்காட்சியகத்திற்கு புனரமைக்கப்பட்ட காந்தி அருங்காட்சியகத்தை மக்களின் பயன்பாட்டிற்காக மதியம் 1 மணியளவில் திறந்துவைக்கிறார்.

இதனைத்தொடர்ந்து அழகர்கோவில் சாலையில் உள்ள அரசினர் சுற்றுலா மாளிகையில் மதிய உணவுக்கு பின்னர் ஓய்வெடுத்து மாலை 4 மணிக்கு மேல் மதுரை மீனாட்சியம்மன் கோவி

லுக்கு செல்கிறார்.  முதலமைச்சர் மீனாட்சி அம்மன் கோவில் சாமி தரிசனம்  செய்ய வருகை தரவுள்ள நிலையில் கோவிலை சுற்றிலும் கிழக்கு சித்திரை வீதிகள், தெற்கு ஆவணி மூல வீதிகளில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. முதலமைச்சர் கோவிலுக்கு வருகை தந்தால் அதற்கான நடைமுறைகளுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

மதுரை விமான நிலையம் முதல் கோரிப்பாளையம், மீனாட்சியம்மன் கோவில். வரை 16 கிலோ மீட்டர் சாலைகளின் இருபுறங்களிலும் இரும்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன மழை நீர் வடிகால் செல்லும் பகுதிகளில் மரத்தினால் ஆன தடுப்புகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் தொண்டர்கள்  வரிசையில் நின்று பார்ப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முதலமைச்சர் வரவேற்கும் விதமாக தவெக சார்பில் ஆங்காங்கே விளம்பர பேனர்கள் மற்றும் கட்சி கொடிகள் கட்டப்பட்டு வரவேற்பு அளிக்கப்படவுள்ளது

பொதுமக்கள் நிற்கும் பகுதிகளில் ஆங்காங்கே தற்காலிக குடிநீர் மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பொதுமக்களின் பாதுகாப்பிற்காக 2500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் தொடக்க விழா நடைபெறக்கூடிய மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முழுவதிலும் காவல்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டு அங்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

முதலமைச்சர் வருகையை முன்னிட்டு மதுரை மாநகரின் பிரதான பகுதிகளில் புதிய சாலைகள் அமைக்கப்பட்டு முழுவதும் தூய்மைப்படுத்தும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மதுரை கோரிப்பாளையம் மேம்பாலத்தின் கீழ் உள்ள பகுதிகளில் புதிய சிலைகள் அமைக்கப்பட்டு வர்ணங்கள் தீட்டப்பட்டுள்ளன. மதுரை காந்தி அருங்காட்சியகம் புனரமைப்பு முடிவற்ற நிலையில் அதனை திறந்து வைக்கவுள்ள முதலமைச்சர் விஜய் செல்லும் வழிநெடுகிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளன.

முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் நிசாந்த் கிருஷ்ணா மாநகராட்சி ஆணையாளர் கௌரவ்குமார் மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் சுழற்சி முறையில் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

மீண்டும் போர்? "நானும், எங்கள் அதிபரும் நியூயார்க் வந்த காரணமே.!" – ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர்

கடந்த வாரம் ஈரானும், அமெரிக்காவும் ‘ஈரான் போர் நிறுத்தம்’ குறித்து பாசிட்டிவாகப்...

"தங்கத்தை விட தரமான பால் தான் தேவை.!"- தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் குறித்து தமிழிசை

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் சுமார் 1.28 லட்சம் குழந்தைகளுக்கு...

டெல்லியில் இளைஞரை அறைந்த பாஜக அமைச்சர்: "வாக்காளர்களுக்கு அஞ்சாத அதிகார முகம் இது" – ராகுல் காந்தி

டெல்லியைச் சேர்ந்த அமைச்சர் பர்வேஷ் வர்மா. இவரிடம் இளைஞர் ஒருவர் மோசமான...