22
September, 2026

A News 365Times Venture

22
Tuesday
September, 2026

A News 365Times Venture

"இதற்கு அந்த ஜோசியரையே முதலமைச்சராக்கி இருக்கலாம்" – விஜய்யைச் சாடிய சீமான்

Date:

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 6ம் தேதி நடைபெறுகிறது.

நாம் தமிழர்க கட்சி வேட்பாளர்களாக மதுராந்தகம் தொகுதியில் கோ. ஜானகிராமன், தாராபுரம் தொகுதியில் மு.கார்த்திகா ஆகியோர் வேட்புமனுத் தாக்கல் செய்திருக்கின்றனர்.

இந்நிலையில், தாராபுரம் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மு.கார்த்திகாவை ஆதரித்து சீமான் நேற்று பிரசாரம் செய்தார்.

முதல்வர் விஜய்

அப்போது பேசிய அவர், “இந்த ஆட்சியில் ‘நோ’ ரூல்ஸ் எல்லாம் ரீல்ஸ்தான். ஜெயிலுக்கு எதற்கு சென்றார் எனத் தெரியவில்லை. யாரோ ஒரு ஜோசியக்காரர் சொல்லியிருக்கிறார் ஜெயிலில் உங்களுக்கு ஒரு கண்டம் இருக்கிறது போய் கை நினைத்துவிட்டு வாருங்கள் என்று…

உங்களுக்குத் திருஷ்டி அதிகமாக இருக்கிறது. கருப்பு கோட் போட்டுக்கொள்ளுங்கள், நெற்றியில் கருப்புப் பொட்டு வைத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லியிருக்கிறார்.

இதற்கு அந்த ஜோசியரையே முதலமைச்சராக்கி இருக்கலாம். கடற்கரையைப் பார்த்த மாதிரி இருக்க வேண்டும். அதுதான் உங்கள் ராசிக்குச் சரியாக இருக்கும் என்று சொன்னவுடன் அலுவலகத்தையே அங்கு மாற்றுகிறார்” என்று முதல்வர் விஜய்யை சீமான் சாடியிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'எதிர்பார்க்கப்பட்டதுதான்' ரஷ்ய நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற புதின் கட்சி – காரணம்?

நேற்று (செப்டம்பர் 21) ரஷ்ய நாடாளுமன்றத்தின் கீழ்சபையான ஸ்டேட் டூமாவின் தேர்தல்...

"டீசல் தொழிற்சாலைகளை ரஷ்யா இழந்துவிட்டது; இது அவமானம்" – உக்ரைன் போர் குறித்து ட்ரம்ப்

உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக இருக்கிறது அமெரிக்கா.இந்தப் போரை...

காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: சென்னையில் தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய் | Photos

இன்று சென்னை திருவான்மியூரில் அரசு நடுநிலைப் பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் காலை...

"இடைத்தேர்தலைத் திணிப்பவர்களே தேர்தல் செலவையும் ஏற்க வேண்டும்" – தாராபுரத்தில் சீமான் ஆவேசம்

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு அக்டோபர் 6...