தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக இன்று பிரிட்டன் செல்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்.
இன்று முதல் வருகிற 17-ம் தேதி வரை நீளும் விஜய்யின் பயணப் பட்டியலில், இங்கிலாந்தில் இருக்கும் புகழ்பெற்ற ‘சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்’-ஐ பார்வையிடத் திட்டமிடப்பட்டுள்ளது.
இவர் கடந்த கூட்டத்தொடரில் சட்டப்பேரவை விதி எண்.110-ன் கீழ், தமிழ்நாட்டில் உலகத்தரம் வாய்ந்த ஒரு ‘மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்’ (Motor Sports City) மாநிலத்தில் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
“சில்வர்ஸ்டோன் மோட்டர் ரேசிங் சர்க்யூட்டை பார்வையிடுவது மூலம் அங்குள்ள சுற்றுப்பாதை வடிவமைப்பு, பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் இத்தகைய வளாகங்களைச் சிறப்பாகவும் வணிக ரீதியாகவும் செயல்படுத்துவதற்கான சிறந்த நடைமுறைகள் குறித்து விரிவாக அறிந்துகொள்வதுடன்,
மோட்டார் ஸ்போர்ட்ஸ் விளையாட்டு உள்கட்டமைப்பு, விளையாட்டுச் சுற்றுலா மற்றும் அதனுடன் தொடர்புடைய சிறப்பு வாகனத் தொழில்கள் ஆகியவைகளில் உள்ள வாய்ப்புகளையும் அறிந்து கொள்ள இயலும்” என்று தமிழ்நாடு அரசு அறிக்கை கூறுகிறது.
இந்தப் பயணத்தில் லண்டனில் இருக்கும் Le Mans Cup சில்வர்ஸ்டோன் கார் பந்தயத்தை விஜய் தொடங்கவிருக்கிறார்.
இந்தப் போட்டி வருகிற சனிக்கிழமை (செப்டம்பர் 12) நடக்க உள்ளது
இந்தப் போட்டியில் நடிகர் அஜித்குமார் பங்கேற்க இருக்கிறார் என்பது இதன் ஹைலைட்.




