1
September, 2026

A News 365Times Venture

1
Tuesday
September, 2026

A News 365Times Venture

DMK: "மனக்கசப்புடன் இனியும் திமுகவில் தொடர முடியாது" – தோப்பு வெங்கடாசலம் சொல்வது என்ன?

Date:

அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும், தி.மு.க- வின் முன்னாள் ஈரோடு மத்திய மாவட்ட செயலாளருமான தோப்பு வெங்கடாசலம், தி.மு.க- வின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக இன்று (ஆகஸ்ட் 31- 2026) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

தி.மு.க- வில் ஏற்பட்டது கசப்பான அனுபவம்

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “‌ தி.மு.க- வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாக தலைமைக்கு கடிதம் அனுப்பியிருக்கிறேன். மத்திய மாவட்ட பொறுப்பாளர் பதவி வழங்கியதற்கு நன்றி.

தி.மு.க- வில் ஏற்பட்டது மிகவும் கசப்பான அனுபவம். எனக்கு ஏற்பட்ட இந்த மனசகப்புடன் இனியும் தி.மு.க- வில் தொடர முடியாதததால் விலகுகிறேன்.‌‌ இப்போதைக்கு வேறு எந்த இயக்கத்திற்கும் செல்லும் எண்ணம் எனக்கு இல்லை. தற்போதைக்கு வேறு இயக்கத்திற்கு செல்ல முயற்சிக்கவும் இல்லை .

தோப்பு வெங்கடாசலம்

முன்னாள் அமைச்சர் முத்துசாமி மீது எவ்வித குற்றசாட்டையும் கூறவில்லை. இறந்தகாலத்தை குறை கூறாமல் நிகழ்காலத்தை தொடர விரும்புகிறேன். பெருந்துறை பின்தங்கிய தொகுதியாக மாறியிருப்பது வருத்தமளிக்கிறது. தி.மு.க-விற்கு வந்த நோக்கமான பெருந்துறை- கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டம் , அந்தக்கடவு – அவினாசி திட்டம் போன்றவை குறையாக உள்ளன. தி.மு.க தலைவர் ஸ்டாலின் என் மீது அளவற்ற பாசம் வைத்துள்ளார். நானும் அவர் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். எதிர்காலத்தில் என் பணிகள் பெருந்துறை தொகுதியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

ஜல்லிக்கட்டு குறித்து சோழவந்தான் தவெக எம்எல்ஏ பேச்சு; மாடுபிடி வீரர்கள் எதிர்ப்பு; எம்எல்ஏ விளக்கம்

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் சோழவந்தான் தொகுதி தமிழக வெற்றிக் கழக (தவெக)...

“100 நாள்களில் ரூ.28,000 கோடி கடன்; விஜய்யின் தவெக அரசு நிலைக்காது!" – விளாசிய எடப்பாடி பழனிசாமி

வேலூரில், அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர்...

"முதல்வர் விஜய்க்கு பிரதமராகும் எண்ணம் துளியும் கிடையாது; ஆனால்…" – வைகோ என்ன சொல்கிறார்?

தவெக கூட்டணியில் காங்கிரஸ் இருக்கும் நிலையில், `முதல்வர் விஜய்தான் அடுத்த பிரதமர்'...

அமெரிக்காவிற்கு ஜாக்பாட்: 'செலவே இல்லாமல் 6,500 கோடி பேரல் எண்ணெய்' வெனிசுலாவின் சூப்பர் பரிசு!

கடந்த ஜனவரி மாதம், வெனிசுலாவின் அப்போதைய அதிபர் மதுரோவைக் கைது செய்து,...