25
August, 2026

A News 365Times Venture

25
Tuesday
August, 2026

A News 365Times Venture

வர்த்தக விரிசலில் அமெரிக்கா, கனடா: இதில் யாருக்கு என்ன பிரச்னை? இது சரியாக வாய்ப்புகள் உண்டா?

Date:

“கனடா ஒரு மாநிலமாக இல்லாதபோதிலும், ஒரு அமெரிக்க மாநிலத்திற்கான அனைத்துப் பலன்களையும் பெற விரும்புகிறது!!!

அதுமட்டுமன்றி நமது சிறந்த விவசாயிகளின் மீது பல ஆண்டுகளாக அநியாயமான முறையில் அதிகளவிலான வரிகளை விதித்து வந்துள்ளது. இனி இதெல்லாம் நடக்காது!!!”

– இது அமெரிக்க அதிபர் ட்ரம்பின் சமீபத்திய பதிவு.

தற்போது அமெரிக்கா மற்றும் கனடாவின் வர்த்தக உறவில் விரிசல் ஏற்பட்டிருப்பது, உலகம் முழுவதுமே கவனம் பெற்றுள்ளது.

இந்த விரிசலுக்கான காரணத்தை மேலே சொன்ன பதிவின் முதல் வரியிலேயே தெரிந்துகொள்ளலாம்.

கனடா

ஆம்… அமெரிக்காவின் 51-வது மாகாணமாக கனடாவை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று ட்ரம்ப் நினைக்கிறார். அதை வெளியிலேயே பல முறை கூறிவிட்டார்.

ஆனால், இதில் கனடாவிற்கு உடன்பாடில்லை. இதில் இரு நாடுகளுக்கும் அதிருப்தி நீடித்து வந்தாலும், வர்த்தக உறவில் நட்பாகலாம் என்று அமெரிக்காவும், கனடாவும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. அதில் தான் இரு நாடுகளுக்கும் பிரச்னை ஏற்பட்டுவிட்டது.

வர்த்தகப் பேச்சுவார்த்தையில் அமெரிக்காவிற்கு கடும் அதிருப்தி. இதனால், கனடா மீது வரிகளைத் தீட்டிவிட்டது அமெரிக்கா.

இனி கனடா தேவையில்லை – ட்ரம்ப்

கனடாவிற்கு என்னென்ன வரிகள் என்பதை ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருக்கிறார். அது…

“கனடா பல ஆண்டுகளாகவே அமெரிக்காவைச் சுரண்டி வருகிறது. அமெரிக்க விவசாயிகள் மற்றும் விவசாயப் பொருள்கள் மீது கனடா விதித்துள்ள அதிகப்படியான வரிகள், அமெரிக்கர்களின் வாழ்க்கையை நரகமாக்கியுள்ளதோடு, இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாக 60 பில்லியன் டாலர் பற்றாக்குறையையும் உருவாக்கியுள்ளது.

இது இனிமேலும் நீடிக்க முடியாது, இனி அப்படி நடக்காது! 2027-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல், அனைத்து கார்கள், டிரக்குகள், வாகன உதிரிபாகங்கள் மற்றும் எஃகு மீதான வரிகள் 50% ஆக உயர்த்தப்படும்.

அமெரிக்காவிலேயே உற்பத்தி செய்தால், கனடாவிற்கு ‘ஜீரோ வரி’ சலுகை கிடைக்கும். கனடா இனிமேலும் அமெரிக்காவின் ஒரு மாகாணத்தைப் போல நடத்தப்பட மாட்டாது!

ட்ரம்ப்
ட்ரம்ப்

அனைத்து வகையிலும் உலகிலேயே மிக மோசமான நாடுகளில் ஒன்றாக கனடா இருக்கிறது. அமெரிக்காவிற்கு இனி கனடா தேவையில்லை, அவர்களுக்குத்தான் நாம் தேவை!

அவர்கள் தங்களின் 95% வர்த்தகத்தை அமெரிக்காவுடன் தான் செய்கிறார்கள், ஆனால் நமக்கு அப்படி அல்ல!” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அமெரிக்காவைப் பொறுத்தவரை, ட்ரம்பின் இந்த வரி ஓரளவு சாதகமாக இருக்கலாம். காரணம், கனடா உடனான வர்த்தகத்தில் அமெரிக்காவிற்குப் பற்றாக்குறை உள்ளது.

ஆனாலும், பிரச்னையை மறுக்க முடியாது!

ஆனால், கனடாவில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி ஆகும் வர்த்தகத்தின் மதிப்பு அதிகம். இதுவரை கனடா இறக்குமதி செய்து வந்தவற்றை வேறு சந்தைகளில் அமெரிக்கா தேட வேண்டும்.

மேலும், கனடா, அமெரிக்கா பக்கத்து நாடுகள். இதனால், போக்குவரத்துச் செலவுகள் குறைவு. பிற நாடுகளில் இருந்து அமெரிக்கா இந்தப் பொருள்களை வாங்கும்போது போக்குவரத்துக்கான செலவும் அதில் அடங்கும்.

கனடாவின் பதில்!

ட்ரம்பின் வரிக்கு ‘டாலருக்கு டாலர்’ என அமெரிக்கப் பொருள்களின் இறக்குமதிக்குக் கனடா வரி வசூலிக்கப்படும் என்று கனடாவின் பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார்.

மார்க் கார்னி
மார்க் கார்னி

ஆனாலும், இன்னொரு பக்கம், ‘நல்ல முறையில்’ பேச்சுவார்த்தைக்கு வந்தால், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்றும் மார்க் கார்னி வெள்ளைக் கொடி காட்டியுள்ளார்.

அமெரிக்காவின் வர்த்தகத்திற்குப் பதிலாக, ஐரோப்பிய ஒன்றிய சந்தையைப் பிடிக்கக் கனடா பிளான் போடுகிறது தான். இருந்தாலும், அமெரிக்காவுடனான வர்த்தக மோதல் நிச்சயம் கனடாவிற்கு ஒரு ஜெர்க்கைத் தரும்.

காரணம் – கனடாவின் ஏற்றுமதி மதிப்பில் 50 சதவிகிதத்திற்கு மேல் அமெரிக்காவிற்குத் தான் செல்கின்றன. ஆக, இவர்கள் 50 சதவிகிதத்திற்கான ஏற்றுமதிச் சந்தையை வேறு இடங்களில் தான் தேட வேண்டும் என்பது கனடாவிற்கு மிகப்பெரிய சவால்.

காரணம், புது வர்த்தக நாட்டின் வர்த்தக நடைமுறை, வரி நடைமுறை எல்லாமே சவாலாகக் கனடாவிற்கு வந்து நிற்கும்.

இதனால், இந்த விரிசலில் ஒரு நாட்டிற்குப் பிரச்னை என்பதை விட, இரு நாடுகளும் பிரச்னைகளையும், சவால்களையும் சந்திக்கும் நிலைக்குள் தள்ளப்படும்.

சீனாவுடனும் வர்த்தக மோதல் ஏற்பட்டபோது, பேச்சுவார்த்தை மூலம் ஏதோ ஒரு சமுக முடிவை எட்டினார் ட்ரம்ப். அந்தப் பாதையைக் கனடாவுடனும் தேர்வு செய்வாரா என்பதைப் பார்க்க வேண்டும்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

அமைச்சர் மன்னிப்பு: “இனி இதுபோல நடக்கக் கூடாது" – மதுரையில் எம்.பி சு.வெங்கடேசன் பேட்டி!

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் காத்திருப்போர் கூடம் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர்...

`இஸ்லாத்தில் ஹிஜாப் அணிவது அவசியம் இல்லை' – மாணவியின் கோரிக்கையை நிராகரித்த உ.பி. உயர் நீதிமன்றம்

இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிவது அவர்களின் மத நம்பிக்கையாக இருந்து வருகிறது....

`வண்ணத்துப்பூச்சி பூங்காவுக்கு முறையான பேருந்து வசதி இல்லையே..!'- மக்கள் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?

திருச்சி மாவட்டத்தில் மலைக்கோட்டை, முக்கொம்பு, கல்லணை, ஸ்ரீரங்கம் என நீளும் சுற்றுலாத்...

“உடனடியாக அனைத்து வாக்குறுதிகளையும் ஏன் நிறைவேற்றவில்லை எனக் கேட்க முடியாது" – விசிக திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பரந்தூர் புதிய விமான நிலையத் திட்டம்...