15
September, 2025

A News 365Times Venture

15
Monday
September, 2025

A News 365Times Venture

அமெரிக்காவில் இந்து கோயில் மீது தாக்குதல்; வெடித்த சர்ச்சை… `அருவருப்பான செயல்' -இந்தியா கண்டனம்

Date:

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள BAPS (போச்சாசன்வாசி அக்ஷர் புருஷோத்தம் ஸ்வாமிநாராயண் சன்ஸ்தா) கோயில் சில மர்ம நபர்களால் தாக்குதலுக்கு உள்ளானது. இது அங்குள்ள இந்துக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து இந்திய‌‌ அரசு கலிஃபோர்னியாவில் இந்து கோவில் மீது நடத்தப்பட்ட வன்முறைக்கு கண்டனம் தெரிவித்துள்ளது

இந்த சம்பவம் குறித்து தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திலுள்ள ரன்தீர் ஜெய்ஸ்வால் “கலிபோர்னியாவின் சினோ ஹில்ஸில் உள்ள ஒரு இந்து கோயிலில் நடந்த வன்முறையை நாங்கள் பார்த்தோம். இத்தகைய அருவருப்பான செயல்களை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

இதற்கு காரணமானவர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், இது போன்ற இடங்களுக்குப் போதுமான பாதுகாப்பை உறுதி செய்யவும் உள்ளூர் சட்ட அமலாக்க அதிகாரிகளை நாங்கள் கோருகிறோம்.” என்று கூறியுள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள BAPS (போச்சாசன்வாசி அக்ஷர் புருஷோத்தம் ஸ்வாமிநாராயண் சன்ஸ்தா) அமைப்பு இந்து சமூகம் இத்தகைய வெறுப்புக்கு எதிராக உறுதியாக நிற்கிறது என்று கூறியுள்ளது. ‘சினோ ஹில்ஸ் மற்றும் தெற்கு கலிபோர்னியாவின் சமூகத்துடன் இணைந்து, வெறுப்பு வேரூன்றாதவாறு நாங்கள் எப்போதும் தடுப்போம். நமது மனிதநேயமும் நம்பிக்கையும் அமைதியும் அன்பும் வெல்லும்’ என்று BAPS அமைப்பு தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து அந்த கோயிலின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கில் இந்த செயலைக் கண்டித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. “உலகிலுள்ள அனைத்து BAPS ஆலயங்களைப் போலவே அமைதி, நல்லிணக்கம், சமத்துவம், தன்னலமற்ற சேவை மற்றும் உலகளாவிய இந்து மத மதிப்புகளின் சின்னமாகவே இந்த ஆலயமும் செயல்படுகிறது.

இந்த தாக்குதல் செயல்களை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம் மேலும், அனைத்து சமூகங்களுக்கிடையேயும் அமைதி நிலவ வேண்டும் என்று பிரார்த்திக்கிறோம்,” என்று அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.

வட அமெரிக்காவில் கடந்த சில ஆண்டுகளில் 10 இந்து கோயில்கள் தாக்கப்பட்டிருப்பதாக அங்குள்ள இந்து அமைப்புகள் தெரிவித்துள்ளன.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel


Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

உட்கட்சிக்குள் எழும் எதிர்ப்புகள்; "நீங்கள் காங்கிரஸில் தொடர்வீர்களா?" – சசி தரூரின் பதில்

ஆபரேஷன் சிந்தூர் மூலம் பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு மத்திய அரசு பதிலடி...

RCB Event Stampede : 'ரசிகர்களுக்கு வேகம் தேவைதான், அதேபோல..!' – செல்வப்பெருந்தகை

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணியின் வெற்றி கொண்டாட்டத்தில் மக்கள் உயிரிழந்த...

Tatkal: இனி தட்கல் டிக்கெட் எளிதாக கிடைக்கும்; IRCTC-ல் ஆதார் இணைப்பு வருகிறது!

ரயில் டிக்கெட் புக்கிங் நடைமுறைகளை கொஞ்சம் கொஞ்சமாக கடுமையாக்கி வருகிறது ரயில்வே...