15
August, 2026

A News 365Times Venture

15
Saturday
August, 2026

A News 365Times Venture

"திமுக – அதிமுக கூட்டணிக்கு எந்தக் காலத்திலும் வாய்ப்பில்லை" – திமுக எம்.பி கனிமொழி பளீச்

Date:

அதிமுக – திமுக கூட்டணி என்பது எந்தக் காலத்திலும் வாய்ப்பு இல்லாதது எனத் திமுக எம்.பி கனிமொழி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

திமுக எம்.பி கனிமொழி செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இதுவரைக்கும் ஒன்றிய அரசினை எதிர்த்து தவெக அரசில் இருக்கும் முதலமைச்சரோ அல்லது அமைச்சர்களோ எந்தக் கேள்வியும் எழுப்பியதாக எனக்கு நினைவில் இல்லை.

கனிமொழி எம்.பி

கனிமவள மசோதாவாக இருக்கட்டும், நிதித்தொகையாக இருக்கட்டும். மாநில உரிமைகளைப் பாதிக்கக்கூடிய ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. 

எந்தவொரு விவாதமும் இல்லாமல் இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.

அதைப்பற்றி கூட இன்றைக்கு ஆட்சியில் இருக்கும் தவெக அரசு எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

அவர்களை எதிர்ப்போம் எதிர்ப்போம் என்று சும்மா வாய் வார்த்தையாகச் சொல்கிறார்கள். தமிழ்நாட்டைப் பாதிக்கக்கூடிய பிரச்னைகள் எதைப்பற்றியும் அவர்கள் பேசுவது இல்லை” என்று பேசியிருக்கிறார்.

கனிமொழி எம்.பி
எம்.பி கனிமொழி

இதனைத் தொடர்ந்து தவெக அமைச்சர்கள் தொடர்ச்சியாக திமுக, அதிமுக கூட்டணி அமைக்க உள்ளதாகப் பேசி வருகிறார்களே? என்று கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.

அதற்கு பதில் அளித்த அவர், “அவர்களுடைய கனவு வேண்டுமானால் அதுவாக இருக்கலாம். ஆனால் நிச்சயமாக அதுபோன்ற நடப்பதற்கு எந்தக் காலத்திலும் வாய்ப்பில்லை” என்று தெரிவித்திருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

எடப்பாடி: 'தாய் கழகத்தில் தவெக வேட்பாளர்!' – பழனிசாமி முன்னிலையில் அதிமுக-வில் இணைந்த அருண் குமார்

நடந்து முடிந்த 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சேலம் மாவட்டம் எடப்பாடி...

'டார்கெட் வட இந்தியா; பிரண்ட்லி பாமக; கலக்கத்தில் அமைச்சர்' – முதல்வரின் சுதந்திர தின விழா ஹைலைட்ஸ்!

ஜார்ஜ் கோட்டையில் முதல் முறையாகக் கொடியேற்றியிருக்கிறார் முதல்வர் விஜய். கொடியேற்றிய கையோடு...

சேலம்: 80 வது சுதந்திர தின விழாவின் கோலாகலமான கொண்டாட்டம்! | Photo Album

"பெண்களுக்கு எதிரான அவதூறுதான் பாஜக அரசியலின் அடிப்படை" - நயினார் பேச்சுக்கு...

'தாய் மீதும், தாய் நாட்டின் மீதும்…' – முதல்வர் குறித்த சர்ச்சைப் பேச்சுக்கு நயினார் விளக்கம்

"சட்டமன்றத்தில் அப்பாவைக் காணோம் எனத் தேடுபவர்களின் ஆட்சி நடக்கிறது. வீட்டில் போய்...