10
August, 2026

A News 365Times Venture

10
Monday
August, 2026

A News 365Times Venture

கோவை தொகுதிகளில் நற்பணி மன்றம்! – நடிகர் தனுஷின் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வா?

Date:

தனுஷ், சமீபத்தில் தான் படித்த பள்ளிக்கு தனது சொந்த செலவில் 3 தளங்கள் கொண்ட கட்டடத்தைக் கட்டிக்கொடுத்தது, எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தது, ரசிகர்களை சமூகப் பணிகளில் தீவிரமாக ஈடுபடுமாறு வலியுறுத்தியது போன்றவை அவரின் அரசியல் வருகை குறித்த பேச்சுகளைத் தீவிரமடைய செய்துள்ளன.

இந்நிலையில் கோவை மாவட்டத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் நண்பர்கள் நற்பணி மன்றம் மற்றும் உறுப்பினர் சேர்க்கையை நடிகர் தனுஷ் தொடங்கி இருக்கிறார்.

தனுஷ்

இது தொடர்பாக அனைத்திந்திய தலைமை தனுஷ் நண்பர்கள் நற்பணி மன்றத் தலைவர் சுப்ரமணியம் சிவா, அனைத்திந்திய செயலர் ராஜா ஆகியோர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “கோவை வடக்கு தொகுதி, கோவை கவுண்டம்பாளையம் தொகுதி, கோவை சிங்காநல்லூர் தொகுதி கோவை சூலூர் தொகுதி, கோவை மேட்டுப்பாளையம் தொகுதி மேற்கண்ட 5 தொகுதிகளுக்கு உட்பட்ட தனுஷ் நண்பர்கள் நற்பணி இயக்கம் தொடங்கவும், உறுப்பினர் சேர்க்கவும் கோவை மாவட்ட தலைவர் G. சங்கரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி, தொண்டாமுத்தூர் தொகுதி, கிணத்துகடவு தொகுதி, பொள்ளாச்சி தொகுதி, வால்பாறை தொகுதி ஆகியவற்றில் தனுஷ் நண்பர்கள் நற்பணி இயக்கம் தொடங்கவும் உறுப்பினர் சேர்க்கவும் கோவை தெற்கு மாவட்ட தலைவர் ஆர்.சதீஸ்குமாரை தொடர்பு கொள்ள வேண்டும். தனுஷ் வழியில் ஒன்றுபட்டு அனைவரும் செயல்படுவோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"நான் பைபிள் படித்திருக்கிறேன்; இப்படித்தான் பேசுவேன்!"- எம்எல்ஏ ராஜேந்திரனுக்கு மரிய வில்சன் பதில்

பட்டஜெட் விவாதக் கூட்டத்தொடரின் நான்காவது நாள் இன்று (ஆகஸ்ட்.10) சட்டமன்றத்தில்...

'தொகுதிப் பொறுப்பாளர்களை நியமிக்கலை, ஆனா…' – அரசியலுக்கு வருகிறாரா தனுஷ்?

நடிகர் தனுஷ் அரசியல் நோக்கில் சில நகர்வுகளை செய்து வருவதாக பரவலாக...

தமிழ்த்தாய் வாழ்த்து தீர்மானம்: “தவெக அரசுக்கும், முதல்வர் விஜய்க்கும் வாழ்த்துகள்" – சீமான்

தமிழ்நாட்டில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகள் அனைத்திலும் தமிழ்த்தாய் வாழ்த்தே முதலாவதாகப் பாடப்பட...

'அமைச்சரின் கோபத்துக்கு காரணமான யூடியூபர்?; டயர்ட் ஆகும் எம்.எல்.ஏக்கள்! – சட்டமன்ற ஹைலைட்ஸ்!

சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் நான்காம் நாள் கூட்டம் நடந்து முடிந்திருக்கிறது....