29
July, 2026

A News 365Times Venture

29
Wednesday
July, 2026

A News 365Times Venture

"விஜய் என்னிடம் தொலைபேசி வாயிலாக பேசினார்"- காவிரி நீர் விவகாரம் தொடர்பாக டி.கே.சிவக்குமார்

Date:

காவிரி குறுக்கே மேகதாது அணை கட்டுவது தொடர்பான விவகாரமும், காவிரியில் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நீரை திறப்பது தொடர்பான விவகாரமும் பேசுபொருளாகி இருக்கிறது.

இந்நிலையில் டெல்லியில் இன்று (ஜூலை.29) கர்நாடகா முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். ” நீர்ப்பாசன விவகாரம் தொடர்பாக, நேற்று சிறிதளவு நீரைத் திறந்துவிடுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அது குறித்த விவரங்கள் எங்களுக்கு இன்னும் முழுமையாகத் தெரியவில்லை.

மேகதாது

அந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து அமைச்சர் எம்.பி. பாட்டீல் உள்ளிட்ட எங்கள் அமைச்சர்கள் மற்றும் அனைத்து அதிகாரிகளுடனும் நான் ஆலோசனை நடத்தியுள்ளேன். நாங்கள் மேல்முறையீடு செய்யவுள்ளோம்.

அதன்பிறகு ஒரு முடிவை எடுப்போம். அந்த நடவடிக்கைக்குப் பிறகு, நான் பெங்களூரு சென்றதும் எதிர்க்கட்சித் தலைவர்களையும் சந்தித்துப் பேசுவேன்.

இதற்கிடையில், சில விஷயங்கள் குறித்து என்னிடம் நேரில் வந்து பேசுவதற்குத் தமிழகத் தரப்பிலிருந்தும் விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலாளரும் எனக்குக் கடிதம் எழுதியுள்ளார். தொலைபேசியிலும் என்னிடம் பேசியுள்ளனர்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

அவர்களை மரியாதையுடன் நடத்துவதும், அவர்களுக்குச் சேர வேண்டியதை வழங்குவதும் எங்கள் கடமையாகும். காவிரி விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் என்னிடம் தொலைபேசி வாயிலாக பேசினார். மேகதாது பகுதி உள்ளிட்ட கர்நாடகாவின் நீர்நிலைகளை பார்வையிட முதல்வர் விஜய்க்காக ஹெலிகாப்டர் தயாராக இருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'வந்தே மாதரம்' பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை; மாநிலங்களவையில் நிறைவேறிய மசோதா!

'வந்தே மாதரம்' பாடலை அவமதித்தால் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க...

தமிழக அரசின் உத்தரவை மீறி கர்நாடகாவுக்கு கனிமங்கள் கடத்தல்; வாகனங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள்!

அண்டை மாநிலங்களுக்கு கனிமவளங்களை கொண்டு செல்ல தமிழ்நாடு அரசு மூன்று மாதங்களுக்கு...

எஸ்.பி.வேலுமணி ஆதரவாளர்கள் பதவி பறிப்பு – கோவை அதிமுக-வில் முற்றும் மோதல்?

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, த.வெ.க அரசிற்கு ஆதரவு அளித்த...

'கொசுவை திமுகக்காரனா லாரியில கடத்திட்டு வரான்?' – திமுக கவுன்சிலர் கலகல

சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் இன்று ரிப்பன் மாளிகையில் நடந்திருந்தது. இதில்...