17
July, 2026

A News 365Times Venture

17
Friday
July, 2026

A News 365Times Venture

Census Self Enumeration: மக்கள்தொகை கணக்கெடுப்பை நீங்களே ஈசியா செய்யலாம்? எப்படிச் செய்யலாம்?|How to

Date:

இந்தியாவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு விரைவில் தொடங்க உள்ளன. இந்த நடைமுறையை எளிதாக்கும் விதமாக மத்திய அரசு ‘சுய கணக்கெடுப்பு’ என்கிற சிறப்பு வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்த வசதி மூலம் உங்களுடைய தகவல்களை நீங்களே பதிவு செய்யலாம்.

அது எப்படி?

se.census.gov.in இணையதளத்திற்குள் செல்லவும்.

அதில் உங்கள் மொபைல் எண்ணைக் கொடுத்தால், OTP வரும். அதை உள்ளிட்டு கொள்ளவும்.

மாநிலம், மாவட்டம், உள்ளூர் விவரங்களைத் தேர்ந்தெடுக்கவும்.

இதன் பின், டிஜிட்டல் வரைபடத்தில் உங்கள் வீட்டின் அமைவிடத்தைக் குறிக்கவும்.

சுய கணக்கெடுப்பு – தகவல்

வீடு, குடும்பம் தொடர்பான விவரங்களைப் பூர்த்தி செய்யவும்.

‘சப்மிட்’ செய்த பிறகு, ஒரு SE ID வரும். இதைப் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் வீட்டிற்கு மக்கள்தொகை கணக்கெடுப்பிற்காக வரும்போது, அவரிடம் இந்த ஐ.டியைக் கொடுங்கள்.

அவர் அந்த ஐ.டியை உள்ளிட்டு, தகவல்களை உறுதி செய்வார்.

ஏன் இதைச் செய்ய வேண்டும்?

இந்தச் சுய கணக்கெடுப்பு வசதியைக் கட்டாயம் செய்ய வேண்டுமென்பதில்லை. நீங்கள் செய்யாவிட்டாலும், மக்கள்தொகை கணக்கெடுப்பிற்காக வருபவர் இந்தப் பணிகளைச் செய்துகொள்வார்.

ஆனால், சுய கணக்கெடுப்பை நாமே செய்யும்போது, நேரம் சேமிப்பாகும். நம்மைக் குறித்த துல்லியமான தரவுகள் இடம்பெறும். வேலையும் சீக்கிரம் முடியும்.

தேதி:

இந்தச் சுய கணக்கெடுப்பை எப்போது வேண்டுமானால் செய்துகொள்ளலாம் என்றில்லை. இன்று (ஜூலை 17) முதல் ஜூலை 31-ம் தேதி வரை மட்டுமே செய்ய முடியும்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

பழனி கோவிலுக்குச் சொந்தமான நிலத்தைப் பதிவு செய்தது நானா? – சார்பதிவாளர் ஜஸ்டின் சொல்வது என்ன?

பழனி தண்டாயுதபாணி கோவிலுக்குச் சொந்தமான 1 ஏக்கர் 40 செண்ட் நிலத்தை...

`அல்லேரிக்கு விரைவில் சாலை வசதி’ – ஜூ.வி., ஆக்‌ஷன் ஸ்டோரி… மலைவாழ் மக்களிடம் ஆட்சியர் உறுதி!

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தொகுதிக்கு உட்பட்ட மலை கிராமம் `அல்லேரி’. ஜவ்வாது...

சரியும் இந்திய ரூபாய் மதிப்பு: 2 காரணங்கள் என்னென்ன? கண்காணிக்கும் ரிசர்வ் வங்கி

ஈரான் போர் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்குப் பிறகு, ஒரு அமெரிக்க டாலருக்கு ரூ.92-93...

"தற்போது குற்றச்சம்பவங்கள் பெருகி வரும் நிலையில்…" – காவலர் தேர்வு தள்ளிவைப்புக்கு உதயநிதி கண்டனம்

தமிழ்நாட்டில் காவலர்கள் தேர்வு தள்ளி வைத்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது எக்ஸ்...