14
July, 2026

A News 365Times Venture

14
Tuesday
July, 2026

A News 365Times Venture

'அதிமுக சின்னத்தில் வென்ற எம்.எல்.ஏக்களை திருடும் விஜய்தான் களவாணி!' – எடப்பாடி கடும் தாக்கு

Date:

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஜூலை.14) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

முதல்வர் விஜய்யை விமர்சித்து பேசியிருக்கும் அவர், “அண்மையில் கரூர் சென்றிருந்த முதல்வர் விஜய் திமுக – அதிமுக கூட்டுக்களவாணி என்று விமர்சனம் செய்திருக்கிறார்.

இது எவ்வளவு பெரிய வார்த்தை. முதல்வர் விஜய் தான் வகிக்கும் பொறுப்புக்கு ஏற்ப பேச வேண்டும்.

முதல்வர் விஜய்

அதிமுக சின்னத்தில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்களை திருடும் விஜய் தான் களவாணி. முதல்வர் விஜய் ஆக்கப்பூர்வமாக எதையும் செய்யவில்லை. வெறும் பஞ்ச் டயலாக் பேசி வருகிறார்.

4 கால்கள் இருந்தால் தான் நாற்காலி நிற்கும். விஜய்யின் நாற்காலியில் ஒரு கால் இரவல் கால்.

ஜனநாயகன் திரைப்பட தயாரிப்பாளருக்கு டெல்லி சிறப்பு பிரதிநிதியாக பதவி கொடுத்து புதுமை படைத்திருக்கிறார். இன்னும் கொஞ்சநாளில் அவரது மேக்கப் மேனுக்கும் அரசு பதவி கொடுத்து விடுவார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

திமுக – அதிமுக கூட்டணி என்பதே கட்டுக்கதை. திமுக தீயசக்தி என்பதே எனது நிலைப்பாடும்.

தமிழகத்தில் ஆட்சி நடக்கிறதா? என்ற சந்தேகம் உள்ளது. ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அதிமுக குரல் கொடுக்கும்” என்று பேசியிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

லாக்கப் மரணம்: 'அடித்தே கொன்ற காவல்துறையினரைப் முதல்வர் விஜய் பாதுகாக்கிறாரா?'- சீமான் கண்டனம்

நாகர்கோவிலில் குட்கா வழக்கில் கைதுசெய்து சிறையிலடைக்கப்பட்ட சபரிவர்மன் என்ற மாற்றுத்திறனாளி நீதிமன்றக்...

கிண்டி: ரயில்வே நிலைய மேம்பாலம் அருகே நிலவும் சுகாதார சீர்கேடு; முகம் சுளிக்கும் மக்கள்!

சென்னையின் மையத்தில் உள்ள மிக முக்கியமான கிண்டி ரயில் நிலையத்தில், ரேஸ்...

E20 : `நீங்களோ நானோ, காரின் மைலேஜை சரியாக கணக்கிட முடியாது!' – அமைச்சர் நிதின் கட்கரி புது விளக்கம்

எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்பாட்டால் வாகனங்களின் மைலேஜ் குறைவதாகப் புகார்கள் அதிகரித்து...